Published:Updated:

ஞானவாபி வழக்கு: `இந்துப் பெண்களின் மனு விசாரணைக்கு உகந்தது!' - வாரணாசி நீதிமன்றம் உத்தரவு

ஞானவாபி மசூதி

மசூதி தரப்பு மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், இந்துப் பெண்கள் தரப்பு மனுக்கள் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டதாக, இந்துக்கள் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஞானவாபி வழக்கு: `இந்துப் பெண்களின் மனு விசாரணைக்கு உகந்தது!' - வாரணாசி நீதிமன்றம் உத்தரவு

மசூதி தரப்பு மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், இந்துப் பெண்கள் தரப்பு மனுக்கள் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டதாக, இந்துக்கள் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Published:Updated:
ஞானவாபி மசூதி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மே மாதம், வாரணாசி பகுதியிலுள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுப்புறச் சுவர்களிலுள்ள இந்துக் கடவுள்களை வழிபட அனுமதிவேண்டி ஐந்து இந்துப் பெண்கள் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த விசாரணைக்குழு மசூதியினுள் வீடியோ எடுக்க, அங்கு சிவலிங்கம் இருப்பதாகக் கூறியது. அதையடுத்து அந்தப் பகுதிக்குப் பொதுமக்கள் செல்ல நீதிமன்றம் தடைவிதித்தது.

ஞானவாபி  மசூதி
ஞானவாபி மசூதி

பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவு 1991-ம் ஆண்டு சட்டத்தை (வழிபாட்டுத்தலங்கள் சட்டம்) மீறுவதாகும் எனக் கூறி மசூதிக்குழு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, உச்ச நீதிமன்றமும், அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், இதில் இந்து-முஸ்லிம் தரப்பு வாதங்கள் தீவிரமடைய, உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றியது. அதைத் தொடர்ந்து இரு தரப்பு மனுக்கள்மீதான விசாரணை, இன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு வந்தது.

 நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

அப்போது மசூதி தரப்பு மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், இந்துப் பெண்கள் தரப்பு மனுக்கள் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டதாக, இந்துக்கள் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஷங்கர் ஜெயின் ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும், இது குறித்துப் பேசிய இந்து தரப்பு மனுதாரர் சோஹன் லால் ஆர்யா, ``இது இந்து சமூகத்துக்குக் கிடைத்த வெற்றி. அடுத்த விசாரணை செப்டம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் இந்தத் தீர்ப்பு ஞானவாபி கோயிலுக்கு ஓர் அடிக்கல்" என்று தெரிவித்தார்.