Published:Updated:

`கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் மத்திய அரசின் பங்கு' - கருத்துக்கணிப்பு முடிவுகள்!

விகடன் கருத்துக்கணிப்பு

கொலீஜியத்தின் நீதிபதிகள் நியமன பரிந்துரைகளில் மத்திய அரசு தலையிடுவது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

Published:Updated:

`கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் மத்திய அரசின் பங்கு' - கருத்துக்கணிப்பு முடிவுகள்!

கொலீஜியத்தின் நீதிபதிகள் நியமன பரிந்துரைகளில் மத்திய அரசு தலையிடுவது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு

இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தன்னிச்சையாக நியமனம் செய்யும் கொலீஜியம் அமைப்புக்கும், ஆளும் பா.ஜ.க அரசுக்குமிடையே கடந்த சில ஆண்டுகளாக நிலவிவந்த முரண்பாடுகள், கடந்த சில மாதங்களாக நேரடியாகவே பொதுவெளியில் வெளிவரத்தொடங்கிவிட்டன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

2015-ல் உச்ச நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்ட மத்திய அரசின் தேசிய நீதிபதிகள் ஆணையத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு அவசரம் காட்டுவதாகவே மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் சமீபகால பேச்சுகள் இருக்கின்றன.

இப்படியான சூழலில், கொலீஜியத்தின் நீதிபதிகள் நியமன பரிந்துரைகளில் மத்திய அரசு தலையிடுவது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

அதில் வாசகர்களிடம் முன்வைக்கப்பட்ட, ``கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் மத்திய அரசின் பங்கு..." என்ற கேள்விக்கு, மத்திய அரசின் பங்கு `இருக்க வேண்டும்', `நீதித்துறையில் அரசு தலையிடக் கூடாது', `மாற்று முறை உருவாக்கலாம்' என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில் கருத்துக்கணிப்பின் முடிவில், அதிகபட்சமாக 77 சதவிகிதம் பேர் `நீதித்துறையில் அரசு தலையிடக் கூடாது' என்பதைத் தேர்வு செய்திருக்கின்றனர். அதற்கடுத்ததாக 14 சதவிகிதம் பேர் மத்திய அரசின் பங்கு `இருக்க வேண்டும்' என்பதையும், ஒன்பது சதவிகிதம் பேர் `மாற்று முறை உருவாக்கலாம்' என்பதையும் தேர்வு செய்திருக்கின்றனர்.

தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றிய குடியரசு தின விழாவை, அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்திருப்பது அரசியலில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பான விகடன் கருத்துக்கணிப்பில் பங்குபெற்று, உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்யலாம். கருத்துக்கணிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்---->>> குடியரசு தின விழாவை தெலங்கானா முதல்வர் புறக்கணித்திருப்பது...