Published:Updated:

நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்ட `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர்: சாடிய நீதிமன்றம் - என்ன நடந்தது?

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி

``விவேக் அக்னிஹோத்ரியின் ட்வீட் வேண்டுமென்றே உயர் நீதிமன்ற நீதிபதியைத் தாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி." - மூத்த வழக்கறிஞர் ராஜ்சேகர் ராவ்

நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்ட `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர்: சாடிய நீதிமன்றம் - என்ன நடந்தது?

``விவேக் அக்னிஹோத்ரியின் ட்வீட் வேண்டுமென்றே உயர் நீதிமன்ற நீதிபதியைத் தாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி." - மூத்த வழக்கறிஞர் ராஜ்சேகர் ராவ்

Published:Updated:
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்திரி

2017-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி புனேவில் எல்கர் பரிஷத் கூட்டம் நடந்த மறுநாள், புனே பீமா-கோரேகானில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதில் எல்கர் பரிஷத்துக்கு உதவி செய்ததாகக் கூறிப் பல சமூக ஆர்வலர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

2018-ம் ஆண்டு இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி தன் வசம் எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்தான் சமூக ஆர்வலர் கௌதம் நவ்லகா (70). அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, கௌதம் நவ்லகாவை சிறையிலிருந்து வெளியேற்றி வீட்டுக் காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதை விமர்சிக்கும்விதமாக, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தன் ட்விட்டர் பக்கத்தில், "கௌதம் நவ்லகாவுக்கு நிவாரணம் வழங்குவதில் அவரின் குடும்பத்துடனான தொடர்புக்காக நீதிபதி பாரபட்சமாக நடந்துகொண்டிருக்கிறார்" என தற்போது ஒடிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி எஸ்.முரளிதருக்கு எதிரான கருத்துகளை 2018-ம் ஆண்டு பகிர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் ராஜ்சேகர் ராவ் நீதிமன்றத்தில், "விவேக் அக்னிஹோத்ரியின் ட்வீட் வேண்டுமென்றே உயர் நீதிமன்ற நீதிபதியைத் தாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி" என்று குற்றம்சாட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மனுத்தாக்கல் செய்திருந்தார். அதற்கு பதில் மனுவாக, திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தன்னுடைய வழக்கறிஞர் மூலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.

விவேக் அக்னிஹோத்ரி
விவேக் அக்னிஹோத்ரி

ஆனால் நீதிபதிகள், சித்தார்த் மிருதுல், தல்வந்த் சிங் பெஞ்ச் அவரின் வழக்கறிஞரிடம், ``அக்னிஹோத்ரி நேரில் வந்து வருத்தம் தெரிவிக்க நேர்வதில்ல் அவருக்கு ஏதேனும் சிரமம் இருக்கிறதா... பிரமாணப் பத்திரம் மூலம் வருத்தத்தை எப்போதும் வெளிப்படுத்த முடியாது. எனவே, அவர் நேரில் வந்து மன்னிப்புக் கோர வேண்டும். மனுவின் மூலமாக மன்னிப்புக் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.