Published:Updated:

`ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க நீர்நிலை இடங்களைப் பத்திரப்பதிவு செய்யக் கூடாது!'-சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க, பதிவுத்துறையினர் நீர்நிலைகள் தொடர்பான இடங்களைப் பதிவுசெய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

`ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க நீர்நிலை இடங்களைப் பத்திரப்பதிவு செய்யக் கூடாது!'-சென்னை உயர் நீதிமன்றம்

ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க, பதிவுத்துறையினர் நீர்நிலைகள் தொடர்பான இடங்களைப் பதிவுசெய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்க, பதிவுத்துறையினர் நீர்நிலைகள் தொடர்பான இடங்களைப் பதிவு செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சென்னை அருகில் சிட்லபாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஆகிய பல்வேறு நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கில், `நீர்நிலையைப் பாதுகாக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என மனுதாரர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு
தமிழக அரசு

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ``தமிழக அரசு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு இல்லை என்ற சான்று பெற்றால் மட்டுமே சொத்துவரி, மின்சாரம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அனுமதி கோரும் கட்டடம் நீர்நிலைகளில் இல்லை என ஆய்வு செய்து உறுதிசெய்ய வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு ஒப்புதல், அனுமதி வழங்கியிருந்தால் அதிகாரிகள்மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism