Published:Updated:

``நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்!" - பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி

அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, `நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

``நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்!" - பிரதமர் மோடி வேண்டுகோள்

அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, `நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Published:Updated:
பிரதமர் மோடி

சுமார் ஆறு வருட கால இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற, அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, ``நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை அறிமுகப்படுத்த ஓர் சட்ட அமைப்பு தேவை. பெண் நீதிபதிகள் நீண்ட நேரம் நீதிமன்றத்தில் அமர பயப்படக்கூடிய நிலைமைதான் தற்போது இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் நீதிமன்றங்களி்ன் வளாகங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. நீதிமன்றங்களை அதிக அளவில் அரசாங்கங்கள்தான் அணுகுகின்றன. போலீஸ், அரசு அதிகாரிகள் முறையாக நடந்தால் நீதிமன்றத்தை நாடக்கூடிய தேவை குறைவாகவே இருக்கும்” என்றார்.

என்.வி ரமணாவின் பேச்சைத் தொடர்ந்து பேசிய மோடி, ``நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், இது நீதி அமைப்பின் மீதான சாதாரண குடிமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச்செய்வது மட்டுமல்லாமல், நீதி அமைப்புடன் அவர்கள் இணைந்திருப்பதை உணரச் செய்யும். தீர்ப்புகள் என்பது சாமானிய மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய மொழிகளில் இருக்க வேண்டும். புரிந்துகொள்ள முடியாவிட்டால் அது வெறும் உத்தரவாக மட்டுமே பார்க்கப்படும்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும், நீதித்துறை நிர்வாகத்தில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் செயல்முறையான, இ-கோர்ட்டுகள் திட்டம் மிஷன் முறையில் செயல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மக்களுக்கு நீதி வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தைக் குறைக்க அரசாங்கம் கடுமையாக உழைத்து வருகிறது." என்று கூறினார்.

மேலும், ``மருத்துவம், சட்டம், தொழில்நுட்ப படிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே ஏன் பயிற்றுவிக்கப்படுகிறது. அவை தாய் மொழியிலும் பயிற்றுவிக்கப்பட செய்ய வேண்டும். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் ஆங்கில மொழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மொழி என்பது நீதியை பெறுவதற்கு ஒரு வகையான தடையாக இருக்கிறது. நீதியை எளிதாக வழங்குவதற்கு காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” என்றார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism