Published:Updated:

அயோத்தி தீர்ப்பு... என்ன சொல்கிறார்கள் எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள்?

அயோத்தி தீர்ப்பு
News
அயோத்தி தீர்ப்பு

அயோத்தி தீர்ப்பு குறித்து எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தோம். 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒருமித்த தீர்ப்பு வழங்கினார்.

* அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும்.

*வக்ஃபு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உத்தரவு.

* சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

- என்பவை இந்த தீர்ப்பின் முக்கிய சாராம்சமாக உள்ளது. இது குறித்து எழுத்தாளர்கள், அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளிடம் கருத்துகளை கேட்டிருந்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆதவன் தீட்சண்யா, தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்:

"மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை வக்ஃபு போர்டு கொடுக்கவில்லை என்கிறார்கள். ராமர் பிறந்த இடம் என்பதற்கு என்ன ஆதாரம் கொடுத்து நிரூபித்தார்கள்? அரசியல் பெரும்பான்மைக்கும், மதப்பெரும்பான்மைக்கும் நீதிமன்றம் செவிசாய்த்தால் நீதிமுறைமை என்பதே இல்லாமல் போய்விடுகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்தின்மீது உரிமை கோர முடியாது என்பது அனைவருக்கும் பொருந்தும்தானே. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதே ஒரு நம்பிக்கைதானே! அதனடிப்படையில் எப்படி முடிவெடுக்க முடியும்?

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கிறார்கள். அந்த மக்களுக்கான நம்பிக்கை சிதைக்கப்பட்து பற்றியோ, அவர்களது உளவியல் நிவாரணம் பற்றியோ, அந்த மக்களுக்கான மசூதியைப் பாதுகாப்பாக கட்டித் தருவது பற்றியோ நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை. உச்சநீதிமன்றம் தவறு எனச் சொல்லப்பட்ட பிறகும் ஒரு மசூதியை இடிக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு பெரும்பான்மையான மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும்." என்றார் ஆதங்கத்தோடு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

"தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள். கடைசி வரை நீதியைச் சொல்லவே இல்லை." என்றார்.

சீமான்
சீமான்

சுப.வீ, திராவிட இயக்கத் தமிழர் பேரவை:

"உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பாபர் மசூதியை இடித்தது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனச் சொல்லியிருக்கிறது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான செயலைச் செய்தவர்களுக்கு இன்று வரை என்ன தண்டனை வழங்கியிருக்கிறது? நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நடந்துகொண்டவர்களுக்குத் தண்டனை கொடுப்பதற்குப் பதிலாக பரிசு கொடுத்திருக்கிறது.

சுப.வீ
சுப.வீ

அது எதற்காக என்ற ஒரு பெரிய வினா நம்முன் நிற்கிறது. இரண்டாவது இந்த நீதிமன்றத் தீர்ப்பு மறுசீராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கருதுகிறேன். அதற்கான முயற்சிகளை எதிர் தரப்பினர் எடுக்கக்கூடும். சீராய்வில் நியாயமான தீர்ப்பு வருமா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்."

அர்ஜுன் சம்பத், தலைவர் இந்து மக்கள் கட்சி:

"இன்றைக்கு நம்முடைய நீதித்துறைக்கு மாபெரும் வெற்றி. ஒரு மைல் கல். 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்க்கப்படாமலிருந்த ஒரு பிரச்னைக்கு இன்று சுமுகமான தீர்வை, தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அரசியல் சாசன அமர்வில் அந்தத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய அரசின் நீதி பரிபாலனத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. நீதிபதி தீர்ப்பைச் சொல்லும்போது ஆரம்பத்திலேயே சொல்கிறார். 'எல்லா மதங்களுடைய தீர்ப்பையும் மதிக்கிறோம். ராமர் அங்குதான் பிறந்தார் என ஹிந்துக்கள் நம்புகிறார்கள்.

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத்

அந்த நம்பிக்கையை மதிக்கிறோம். இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் மதிக்கிறோம்.' அதனால்தான் அவர்கள் பிறிதொரு இடத்தில் மசூதி கட்டுவதற்கு உத்திர பிரதேச அரசு இடம் கொடுக்கவேண்டும். அதேபோல ராம ஜென்ம பூமி என்ற அமைப்புக்கு இங்கு கோயில் கட்டத் தடையில்லை எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. யாருக்கும் சாதக பாதகமின்றி எல்லோருக்கும் பொதுவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதை வைத்து அரசியல் செய்தவர்கள், சுயலாபம் சம்பாதித்தவர்கள் என அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து பல கரசேவகர்கள் இந்த ராமர் கோயிலுக்காக போராடியிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது."