டெல்லியில் 7 வருடங்களுக்கு முன்னர் நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஓடும் பேருந்தில் இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, சித்ரவதை செய்து கொலைசெய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்கவும் இந்த வழக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்த வழக்கில் 4 பேர் குற்றம்சாட்டப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு பின்னர் அது உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அக்ஷய் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். 14 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில், தனது தூக்குத் தண்டனையை ஏன் ரத்து செய்ய வேண்டும் என அவர் சில காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். அது தற்போது சில விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அக்ஷய் குமார் தரப்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த மனுவில், ``பூமியில் நாம் வாழும் நாள்கள் குறைந்துவரும் நிலையில் மரண தண்டனை அவசியம்தானா.. நமது வேதங்களிலும் புராணங்களிலும் உபநிடதங்களிலும் மனிதர்கள் ஆயிரம் ஆண்டுகள் வரையில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இது கலியுகம். இப்போது மனிதர்களின் வாழ்க்கை என்பது சில வருடங்களாகச் சுருங்கிவிட்டது. இப்போது மனிதர்கள் சராசரியாக 50 முதல் 60 ஆண்டுகள்தான் வாழ்கிறார்கள். வெகு சிலரே 80- 90 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள். இதுதான் உண்மை. மேலும், டெல்லியில் இருக்கும் காற்று மாசு குறித்தும் அனைவரும் அறிந்ததே. டெல்லியில் நாம் கேஸ் சேம்பரில் வசிப்பதுபோல் தான் வாழ்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காற்று மட்டுமல்ல, இங்கு வழங்கப்படும் தண்ணீரும் மோசமான நிலையில்தான் உள்ளது. அது விஷத்துக்குச் சமமானது. இதை அரசு நாடாளுமன்றத்திலே தெரிவித்துள்ளது. இவையனைத்தும் மனிதர்களின் வாழ்க்கையை மேலும் சிறியதாக்குகிறது. அப்படி இருக்கும்போது மரண தண்டனை தேவையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி அரசாங்கம் குற்றாவாளிகளின் கருணை மனுவை நிராகரித்த ஒரு வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் அக்ஷய் குமார்.
சட்ட நடவடிக்கைகள் முடிந்த பின்னர் குற்றவாளிகள் நால்வரும் திகார் சிறையில் தூக்கிலிடப்படுவார்கள் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.