Published:Updated:

``பேரறிவாளனை விடுவிப்பதே வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு எனக் கருதுகிறோம்!' - உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன்

``பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்.’' - உச்ச நீதிமன்றம் உத்தரவு.

``பேரறிவாளனை விடுவிப்பதே வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு எனக் கருதுகிறோம்!' - உச்ச நீதிமன்றம்

``பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும்.’' - உச்ச நீதிமன்றம் உத்தரவு.

Published:Updated:
பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற பேரறிவாளன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரணையில், ``பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்” என்று பேரறிவாளன் தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் வாதம் முன்வைத்த மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞர், ``பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆளுநர் செயல்படும்விதம் குறித்துக்கூட ஜனாதிபதியேதான் முடிவெடுக்க முடியும். அரசியல் சாசன பிரிவு 72-ம் இதைத்தான் மிகத் தெளிவாகக் கூறுகிறது” எனக் கூறினார்.

பேரறிவாளன்
பேரறிவாளன்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ``ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது... பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு எனக் கருதுகிறோம். விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்?

அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப்பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?" என தங்களின் கருத்துகளையும், இந்த விவகாரத்தில் ஆளுநர் அதிகாரம் மீதான கேள்விகளையும் முன்வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, இந்த விசாரணையில், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஏழு பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism