Published:Updated:

சாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா? #DoubtOfCommonMan

நீதிமன்றம்

நீதிமன்றம் எல்லோருக்குமானது. கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலும் உங்கள் வழக்குக்கு நீங்களே வாதிடலாம். அதுவும், தமிழிலேயே வாதிடலாம். நீங்களே குறுக்கு விசாரணையும் செய்யலாம். இதை 'Party in Person' என்று சொல்வார்கள்.

Published:Updated:

சாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா? #DoubtOfCommonMan

நீதிமன்றம் எல்லோருக்குமானது. கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலும் உங்கள் வழக்குக்கு நீங்களே வாதிடலாம். அதுவும், தமிழிலேயே வாதிடலாம். நீங்களே குறுக்கு விசாரணையும் செய்யலாம். இதை 'Party in Person' என்று சொல்வார்கள்.

நீதிமன்றம்

நீதிமன்றம்தான் சாதாரண மனிதர்களின் கடைசிக்கட்ட நம்பிக்கை. ஆனால், நீதிமன்ற நடைமுறைகள் எளிய மனிதர்களுக்குக் குழப்பமானதாவும் அந்நியமானதாகவுமே இருக்கின்றன. நீதிமன்றம் என்றாலே வழக்கறிஞர் தேவை என்ற எண்ணம்தான் இருக்கிறது. ஆனால், சாதாரண மனிதர்களுக்கும் நீதிமன்றம் நிறைய உரிமைகளை வழங்கியிருக்கிறது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் பா.சிவக்குமரன் இதுதொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். "சாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா?" என்பதுதான் அவரது கேள்வி.

இந்தக் கேள்வியை, சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான கோவை லோகநாதனிடம் கேட்டோம். "நீதிமன்றம் எல்லோருக்குமானது. கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலும் உங்கள் வழக்குக்கு நீங்களே வாதிடலாம். அதுவும், தமிழிலேயே வாதிடலாம். நீங்களே குறுக்கு விசாரணையும் செய்யலாம். இதை 'Party in Person' என்று சொல்வார்கள்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

இந்த உரிமையைச் சட்டம் எல்லோருக்கும் வழங்கியிருக்கிறது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, அவருடைய வழக்கில் அவரே வாதிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஒரு சிலருக்கு வாதிடும் திறமையில்லாமல் இருக்கலாம்; அச்சமும் இருக்கலாம். அப்படியொரு சூழ்நிலையில், `எனக்கு வழக்கறிஞர் வைத்துக்கொள்வதற்கு வசதியில்லை. வாதிடுவதற்கான சட்ட அறிவும் எனக்கில்லை. எனவே, எனக்கு வாதிடுவதற்கு வழக்கறிஞரை இலவசமாக அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும்’ என்று வழக்கு நடக்கும் அதே நீதிமன்றத்தில் மனு கொடுக்கலாம்.

நீதிபதி, அந்த மனுவை அரசால் நடத்தப்படும் இலவச சட்ட ஆலோசனை மையத்துக்கு அனுப்பி வைப்பார். அங்கு ஒரு வழக்கறிஞர் குழு (Panel) இருக்கும். அதிலிருந்து ஒரு வழக்கறிஞரை உங்களுக்காக வாதிடுவதற்கு அனுப்புவார்கள். அவருக்கான ஊதியத்தை அரசே வழங்கிவிடும்’’ என்றார்.