Published:Updated:

``கைலாஸாவின் ஆன்மிகத் தூதரகம் திருவண்ணாமலை’’ - நித்யானந்தா ஆசிரமத்துக்குத் தேர் பீடம் வந்த பின்னணி!

நித்யானந்தா ஆசிரமம்
News
நித்யானந்தா ஆசிரமம்

`கைலாஸாவின் ஆன்மிகத் தூதரகம் திருவண்ணாமலை’ என நித்யானந்தாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது திருவண்ணாமலை ஆசிரமத்துக்குப் புதிதாக தேர் பீடம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

Published:Updated:

``கைலாஸாவின் ஆன்மிகத் தூதரகம் திருவண்ணாமலை’’ - நித்யானந்தா ஆசிரமத்துக்குத் தேர் பீடம் வந்த பின்னணி!

`கைலாஸாவின் ஆன்மிகத் தூதரகம் திருவண்ணாமலை’ என நித்யானந்தாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது திருவண்ணாமலை ஆசிரமத்துக்குப் புதிதாக தேர் பீடம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

நித்யானந்தா ஆசிரமம்
News
நித்யானந்தா ஆசிரமம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், நித்யானந்தாவுக்கு ஆசிரமம் இருக்கிறது. பல்வேறு சர்ச்சைகள் அவரை சூழ்ந்ததால், திடீரென தலைமறைவான அவர் தனித்தீவை வாங்கி ‘கைலாஸா’ என்ற நாட்டையே உருவாக்கிவிட்டதாகவும் ஆன்லைனில் பேசிவருகிறார். இந்த நிலையில், நித்யானந்தாவின் 46-வது ‘அவதார தினவிழா’ கடந்த 3-ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, திருவண்ணாமலையிலுள்ள அவரின் ஆசிரமத்துக்கு தேரின் அடிப்பாகம் போன்ற மரத்தினால் செய்யப்பட்ட ‘பீடம்’ ராட்சத லாரியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தேர் பீடம்
தேர் பீடம்

இந்தத் தேர் பீடத்தை கிரேன் மூலம் கீழே இறக்கி, ஆசிரமத்துக்குள் கொண்டுசென்றிருக்கிறார்கள் அவரின் சீடர்கள். இதுபற்றி விசாரிக்க நித்யானந்தாவின் ஆசிரமத்துக்குள் சென்றது ஜூ.வி டீம். ஆசிரம முகப்பில் நித்யானந்தாவின் முழுஉருவம் பதித்த பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

‘கைலாஸா-திருவண்ணாமலை’ என வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பேனரில் ‘நித்யானந்தரின் அவதார ஸ்தலம் - கைலாஸா ஆன்மிக தூதரகம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உள்ளே சென்று பார்த்தால், நித்யானந்தாவுக்கு ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, குருகுலம், கோசாலை, ஞானாலயம், தியான சிகிச்சை மையம் போன்றவையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

நித்யானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமம்
நித்யானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமம்

தேர் பீடம் கொண்டுவரப்பட்ட பின்னணி குறித்து அங்கிருந்த நித்யானந்தாவின் சீடர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ‘‘நித்யானந்தரின் அவதார தினவிழாவைக் கொண்டாடிவருகிறோம். அதையொட்டி, புதிதாக தேர் பீடம் பெங்களூரு ஆதீனத்திலிருந்து கொண்டுவந்திருக்கிறோம். தேர் முழுவடிவம் பெற்றப் பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்போம். எல்லாம் நித்யானந்தரின் அனுமதியின்படியே நடக்கிறது. வரும் பௌர்ணமி தினத்தில், கைலாஸாவிலிருந்து ஆன்லைன் மூலம் இங்குள்ள குருகுலத்தில் நித்யானந்தரே ஆன்மிக வகுப்பு எடுக்கவிருக்கிறார். பக்தர்களுக்கும் அனுமதியுண்டு’’ என்றனர்.