Published:Updated:

கர்நாடகா: "நான் பாஸாக என் மகன் உதவினான்" - ஒரே நாளில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற தந்தை - மகன்!

சண்முகப்பா - பரத்
News
சண்முகப்பா - பரத்

விவசாயியான சண்முகப்பா அவரது மகன் படிக்கும் பள்ளியின் 'மேம்பாட்டு நிர்வாகக் குழு' உறுப்பினராகவும் உள்ளார். எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என பல காலமாகவே கனவுடன் இருந்திருக்கிறார்.

Published:Updated:

கர்நாடகா: "நான் பாஸாக என் மகன் உதவினான்" - ஒரே நாளில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற தந்தை - மகன்!

விவசாயியான சண்முகப்பா அவரது மகன் படிக்கும் பள்ளியின் 'மேம்பாட்டு நிர்வாகக் குழு' உறுப்பினராகவும் உள்ளார். எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என பல காலமாகவே கனவுடன் இருந்திருக்கிறார்.

சண்முகப்பா - பரத்
News
சண்முகப்பா - பரத்
நான் படிக்கும்போது என் தந்தை எனக்கு உதவிகள் செய்வார் என மாணவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், "நான் படிக்கும்போது என் மகனும் உதவிகள் செய்வான்" எனச் சொல்லும் தந்தையை பார்த்திருப்போமா? நடந்திருக்கிறது. கூடுதல் சுவாரஸ்யமாக, தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தின் கம்பளி தாலுகாவில் உள்ள தேவலாபுரா என்ற கிராமத்தில்தான் இந்த அபூர்வ நிகழ்வு நடந்துள்ளது. 41 வயதான சண்முகப்பா கவுத்ருவும், 15 வயதான அவரது மகன் பரத் கவுத்ருவும் ஒரே நாளில் எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதால், அவர்களது குடும்பத்தினர் இரட்டைக் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

விவசாயியான சண்முகப்பா அவரது மகன் படிக்கும் பள்ளியின் 'மேம்பாட்டு நிர்வாகக் குழு' உறுப்பினராகவும் உள்ளார். எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என பல காலமாகவே கனவுடன் இருந்திருக்கிறார். இதற்காக, மகன் படிக்கும் பள்ளியின் உதவியை நாடியிருக்கிறார். சண்முகப்பாவின் ஆசையை வரவேற்ற அப்பள்ளியின் ஆசிரியர்கள், படிப்பதற்குத் தேவையான அனைத்து பொருள்களையும் வழங்கியிருக்கிறார்கள். அதோடு நிற்காமல், சண்முகம் தேர்வில் பங்கேற்கவும் அவர்கள் உதவியிருக்கிறார்கள். பிள்ளைகள், குடும்பம், ஆசிரியர்களின் உதவியுடன், 625 மதிப்பெண்களுக்கு 307 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் சண்முகப்பா. அவரது மகன் பரத் 500 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

எஸ்எஸ்எல்சி தேர்வு
எஸ்எஸ்எல்சி தேர்வு
PIxabay

இந்த வயதிலும் தேர்வு எழுத தன் மகனும் மகளும்தான் தனக்கு உத்வேகம் கொடுத்ததாக சண்முகப்பா தெரிவித்தார். "என் மகனும் மகளும் மட்டுமல்ல, கஷ்டப்பட்டு தேர்வுக்காகப் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் என்னை ஈர்த்தார்கள். படிப்பதற்குத் தேவையான புத்தகங்களை வாங்க பள்ளி ஆசிரியர்கள் எனக்கு உதவினார்கள். பள்ளித் தலைமை ஆசிரியரும் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கிவந்தார். நான் படிக்கும்போது என் மகனும் எனக்கு உதவிகள் செய்வான். பாடங்களை மனப்பாடம் செய்யவும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் உதவினான். நான் மீண்டும் படிப்பை நோக்கி திரும்பியபோதுதான், கல்வியின் மதிப்பை உணர்ந்தேன்" என்று நெகிழ்ச்சியோடு தன் வெற்றி குறித்து சண்முகப்பா பகிர்ந்துக்கொண்டார்.

முன்னதாக, சண்முகப்பா தனது மகளுடன் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியிருந்தார். ஆனால், அதில் இந்தி மற்றும் கன்னட மொழித்தாள்களில் மட்டுமே தேர்ச்சிப் பெற முடிந்தது. அந்த ஆண்டே நடந்த மறுத்தேர்வில், ஆங்கிலத் மொழித்தாளில் தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், இந்த ஆண்டு மீதமிருந்த மூன்று தாள்களில் அவர் தனது மகனுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்தத் தந்தை - மகனின் வெற்றி, அவர்களது கிராமத்தில் உள்ள பல முதியவர்களுக்கு மீண்டும் கல்வியை நோக்கி செல்ல வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியுள்ளளது.