Published:Updated:

பொது இடங்களில் இனி முகக்கவசம் கட்டாயம்... கொரோனா பரவலைத் தடுக்க கர்நாடகா அரசு அதிரடி முடிவு!

Representational Image
News
Representational Image ( Pixabay )

சினிமா தியேட்டர்களிலும், நியூ இயர் கொண்டாட்டங்களுக்காக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.

Published:Updated:

பொது இடங்களில் இனி முகக்கவசம் கட்டாயம்... கொரோனா பரவலைத் தடுக்க கர்நாடகா அரசு அதிரடி முடிவு!

சினிமா தியேட்டர்களிலும், நியூ இயர் கொண்டாட்டங்களுக்காக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.

Representational Image
News
Representational Image ( Pixabay )

கோவிட் தொற்றின் ஆட்டம் சீனாவில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து பல நாடுகளும் மீண்டும் தங்களின் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. விமான நிலையங்களில் பரிசோதனைகள் தொடங்கிவிட்டன. பல முகங்களை மூட மாஸ்க்குகள் காத்திருக்கின்றன. 

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

இந்தியாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகத்துடன் இருக்கையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது பற்றி விவாதிக்க, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அந்தச் சந்திப்பிற்குப் பிறகு கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோகா கூறுகையில், ``சினிமா தியேட்டர்களிலும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. குறிப்பாக எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோடு மற்றும் பெங்களூரூவின் மற்ற கொண்டாட்டங்கள் நிறைந்த பகுதிகளிலும் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். 

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பார்கள், பப்கள், ரெஸ்டாரன்ட்கள் இருக்கைகளுக்கு ஏற்றவாறே செயல்பட வேண்டும். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஜனவரி 1-ம் தேதி இரவு 1 மணியுடன் முடிவுக்கு வரும். 

முகக்கவசம் அணிந்துள்ள பெண்குழந்தை
முகக்கவசம் அணிந்துள்ள பெண்குழந்தை
AP Image

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிய வேண்டும். வகுப்பறையிலும் முகக்கவசம் அணிய வேண்டும். விமான நிலையத்தில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளிடம் பரிசோதனைகள் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார். முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட போதும், அணியாமல் இருக்கும் பட்சத்தில் அபராதம் குறித்து ஏதும் அறிவிக்கப்படவில்லை.

பல மாநிலங்களும் கோவிட் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தபோதும், கர்நாடக அரசு மீண்டும் `முகக்கவசம் கட்டாயம்' என்பதை முதலில் செயல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.