Published:Updated:

கர்நாடகா: சித்தராமையா குறித்த ஃபேஸ்புக் பதிவைப் பகிர்ந்த ஆசிரியர் சஸ்பெண்ட் - காரணம் என்ன?

சஸ்பெண்ட்
News
சஸ்பெண்ட்

முதல்வர் சித்தராமையாவை ஒருவர் ஃபேஸ்புக்கில் விமர்சித்துப்போட்ட பதிவைப் பகிர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

கர்நாடகா: சித்தராமையா குறித்த ஃபேஸ்புக் பதிவைப் பகிர்ந்த ஆசிரியர் சஸ்பெண்ட் - காரணம் என்ன?

முதல்வர் சித்தராமையாவை ஒருவர் ஃபேஸ்புக்கில் விமர்சித்துப்போட்ட பதிவைப் பகிர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

சஸ்பெண்ட்
News
சஸ்பெண்ட்

கர்நாடகாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் முதல்வர் சித்தராமையாவா அல்லது டி.கே.சிவக்குமாரா என்று நீடித்த இழுபறியில், டி.கே.சிவக்குமாரின் கண்டிஷனுக்கு ஒத்துப்போன காங்கிரஸ் 2013 முதல் 2018 வரை முழுமையாக ஆட்சி செய்த சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே.சிவக்குமாரை ஒரேயொரு துணை முதல்வராகவும் அறிவித்தது.

டி.கே.சிவக்குமார், சித்தராமையா
டி.கே.சிவக்குமார், சித்தராமையா

கடந்த சனிக்கிழமை அவர்களின் பதவியேற்பு விழாவும் நடந்து முடிந்தது. இந்த நிலையில், முதல்வர் சித்தராமையாவை ஒருவர் ஃபேஸ்புக்கில் விமர்சித்ததைப் பகிர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து வெளியான தகவலின்படி ராஜசேகர் ஹிரேமத் என்பவர் முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவை அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தமூர்த்தி ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்.

சித்தராமையாவை விமர்சிக்கும் அந்த ஃபேஸ்புக் பதிவில், ``மாநிலத்தை அதிக கடனில் முழ்கடித்த சித்தராமையா, மீண்டும் மாநிலத்தைக் கடனில் மூழ்கடிக்க வந்திருக்கிறார். முன்பு முதல்வராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா ரூ.3,590 கோடி, தரம் சிங் ரூ.15,635 கோடி, குமாரசாமி ரூ.3,545 கோடி, பி.எஸ்.எடியூரப்பா ரூ.25,653 கோடி, டி.வி.சதானந்த கவுடா ரூ.9,464 கோடி, ஜெகதீஷ் ஷெட்டர் ரூ.13,464 கோடி என எஸ்.எம்.கிருஷ்ணா முதல் ஜெகதீஷ் ஷெட்டர் வரை மொத்த கடன் சுமார் ரூ.71,000 கோடி. ஆனால், சித்தராமையாவின் கடன் ரூ.2.42 லட்சம் கோடி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்

அதைத் தொடர்ந்து, ஒழுங்கு ஆணையம் மற்றும் பொதுக்கல்வித்துறையின் தொகுதிக் கல்வி அதிகாரி எல்.ஜெயப்பா, சாந்த மூர்த்தி கர்நாடகா சிவில் சர்வீஸ் (நடத்தை) விதிகள் -1966-ஐ மீறியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக, மே 20-ம் தேதியிட்ட உத்தரவை வெளியிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியர் மீதான இந்த நடவடிக்கையால் பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒருவரையொருவர் சாடிவருகின்றனர்.