Published:Updated:

`6 நாள்கள் காய்ச்சல்;உதடுகளில் வெடிப்பு!'-சிறுவனின் அரியவகை நோயைக் குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்

தாய் கலாவுடன் ஹரிஷ்
News
தாய் கலாவுடன் ஹரிஷ் ( நா.ராஜமுருகன் )

5 நாள்கள் தொடர் காய்ச்சல், உதடுகளில் வெடிப்பு, விரல்களில் தோல் உரிதல், கைகால் வீக்கம் உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானோரின் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் உருவாகும். இது தொற்றக்கூடிய நோய் அல்ல.

Published:Updated:

`6 நாள்கள் காய்ச்சல்;உதடுகளில் வெடிப்பு!'-சிறுவனின் அரியவகை நோயைக் குணப்படுத்திய அரசு மருத்துவர்கள்

5 நாள்கள் தொடர் காய்ச்சல், உதடுகளில் வெடிப்பு, விரல்களில் தோல் உரிதல், கைகால் வீக்கம் உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானோரின் இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் உருவாகும். இது தொற்றக்கூடிய நோய் அல்ல.

தாய் கலாவுடன் ஹரிஷ்
News
தாய் கலாவுடன் ஹரிஷ் ( நா.ராஜமுருகன் )

தனியார் மருத்துவமனைகள் கைவிட்ட, `கவசாக்கி' என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயதுடைய சிறுவனை தங்களது சிறந்த மருத்துவ சிகிச்சையால் சரிசெய்து காப்பாற்றி அசத்தியிருக்கிறார்கள், கரூர அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள்.

தாய் கலாவுடன் ஹரிஷ்
தாய் கலாவுடன் ஹரிஷ்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை காந்திநகர் பகுதியில் வசிப்பவர்கள், பழனிசாமி, கலா தம்பதியர். இவர்களின் ஒன்றரை வயது மகன் ஹரீஷ், கடந்த 03.06.2020 அன்று இரவு சுமார் 12 மணியளவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.

சிறுவனுக்கு இடைவிடாத காய்ச்சல் இருந்ததாகவும், சுமார் 6 நாள்களாக காய்ச்சல் இருந்ததால், சில தனியார் மருத்துவமனைகளில் காண்பித்தும் பலனளிக்காமல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து வந்ததாகப் பெற்றோர் தெரிவித்தனர். இந்தநிலையில், அந்தச் சிறுவனுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சையளித்து, காப்பாற்றியுள்ளனர்.

பேட்டியளிக்கும் தேரணிராஜன்
பேட்டியளிக்கும் தேரணிராஜன்
நா.ராஜமுருகன்

இது குறித்து, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகையில், ``தொடர் காய்ச்சலுடனும், உதடுகளில் வெடிப்புடனும், கைகால்களில் வீக்கத்துடனும் காணப்பட்ட அந்தச் சிறுவனுக்குப் பரிசோதனை செய்ததில், ஈரல் பகுதியிலும் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. சிறுவனுக்கு சிகிச்சையளித்த குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமார், சிறுவனுக்கு கவசாக்கி நோய்க்கான அறிகுறிகளாக இருப்பதாக எனது கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

உடனடியாக, குழந்தை நல இணைப்பேராசிரியர் கனிமொழி தலைமையில் செந்தில்குமார், வித்யாசங்கர், சாந்தி, சசிரேகா, ராதிகா, மற்றும் இருதய நிபுணர் சுசில்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, சிறுவனுக்கு, இரத்தப் பரிசோதனைகள் மற்றும் எக்கோ பரிசோதனைகள் எடுக்கப்பட்டு, நோயின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக, அந்தச் சிறுவனுக்குக் கொரேனா தொற்று உள்ளதா என்பதும் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. கவசாக்கி நோய் என்பது, 1967 ஆம் அண்டு ஜப்பானில் டோமிஷோ கவசாக்கி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நோய்க்கு அவரின் பெயரே சூட்டப்பட்டது.

தாய் கலாவுடன் ஹரிஷ்
தாய் கலாவுடன் ஹரிஷ்
நா.ராஜமுருகன்

1990 - களில் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை மட்டும் இந்த நோய் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 5 நாள்கள் தொடர் காய்ச்சல், உதடுகளில் வெடிப்பு, விரல்களில் தோல் உரிதல், கைகால் வீக்கம் உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறிகளாகும். இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானோரின் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் உருவாகும். இது தொற்றக்கூடிய நோய் அல்ல.

இந்த நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உடனடியாகச் செயல்பட்டு, தமிழக முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இந்நோயிக்கு சிகிச்சையளித்தனர். உயிர்ப்பாதுகாப்பு எதிர்ப்பு அணுக்களை அதிகரிக்கக்கூடிய ஐ.வி. இமினோ குளோபின் (ஐஏ ஐபு) என்ற விலைஉயர்ந்த நோய் எதிர்ப்புசக்தி மருந்து திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டு, குளுக்கோஸ் மூலமாக சுமார் 16 மணிநேரம் அந்தச் சிறுவனுக்குச் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக, தற்போது ஹரிஷ் பூரண குணமடைந்துள்ளார் என்ற மகிழ்ச்சியான தகவலைத் தெரிவித்துக்கொள்கிறோம். சிறுவனுக்கு சுமார் ரூ.60,000 மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
நா.ராஜமுருகன்

கவசாக்கி நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயதுடைய சிறுவன் அரசு மருத்துவர்களின் சிகிச்சையால் பூரண குணமடைந்ததுள்ளார் என்பது, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களின் தொடர் சாதனைகளில் ஒரு மைல்கல். இந்தச் சிறுவன் தொடர்ந்து ஆறு மாதங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். 6 வாரம் கழித்து ஒரு எக்கோ பரிசோதனையும், 6 மாதம் கழித்து ஒரு எக்கோ பரிசோதனையும் செய்யப்படும். பிறகு, அவருக்கு வழங்கப்படும் மாத்திரையின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படும். தொடர்ந்து, இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டால், பாதிப்பானது இருக்காது. இந்தச் சிறுவன் வசிக்கும் பகுதியில் வேறு எந்தக் குழந்தைக்கும் இந்த நோய் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்றார்.