Published:Updated:

கரூர்: `அமராவதி ஆற்றைப் பார்க்க அமைச்சர் தயாரா?’ - சவால்விடும் சமூக ஆர்வலர்கள்

அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீர்க் கால்வாய்
News
அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீர்க் கால்வாய் ( நா.ராஜமுருகன் )

வேலுசாமி என்ற விவசாயியின் நான்கு மாடுகள் சாயப்பட்டறை கழிவுநீரை அருந்தி இறந்ததையும், அவர் நீதி கேட்டுப் போராட்டங்களை நடத்தியததைம் கரூர் மாவட்டத்தில் அனைவரும் அறிவர். ஆனால், அமைச்சர் இப்படிப் பொய் சொல்வது கண்டிக்கத்தது!

Published:Updated:

கரூர்: `அமராவதி ஆற்றைப் பார்க்க அமைச்சர் தயாரா?’ - சவால்விடும் சமூக ஆர்வலர்கள்

வேலுசாமி என்ற விவசாயியின் நான்கு மாடுகள் சாயப்பட்டறை கழிவுநீரை அருந்தி இறந்ததையும், அவர் நீதி கேட்டுப் போராட்டங்களை நடத்தியததைம் கரூர் மாவட்டத்தில் அனைவரும் அறிவர். ஆனால், அமைச்சர் இப்படிப் பொய் சொல்வது கண்டிக்கத்தது!

அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீர்க் கால்வாய்
News
அமராவதி ஆற்றுக்குள் கழிவுநீர்க் கால்வாய் ( நா.ராஜமுருகன் )

`கரூர் அமராவதி ஆற்றங்கரைப் பகுதியில் சாயப்பட்டறைகளே இல்லை. நீர்நிலைகளை மாசுபடுத்துவது போன்ற கடுமையான குற்றங்களை எந்த நிறுவனமும் செய்யவில்லை' என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறியிருப்பது, சமூக ஆர்வலர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. `அதை நிரூபிக்கத் தயாரா?' என்று அமைச்சருக்கு, சமூக ஆர்வலர்கள் சவால் விடுத்திருக்கிறார்கள்.

அமராவதி ஆறு
அமராவதி ஆறு
Artist-freedநா.ராஜமுருகன்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலுள்ள அமராவதி அணையிலிருந்து வரும் அமராவதி ஆறு, கரூர் நகரம் வழியாக ஓடி, திருமுக்கூடலூரில் காவிரியில் கலக்கிறது. அமராவதி ஆறு சாயப்பட்டறைக் கழிவுகளால் முற்றிலும் மாசடைந்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார்கள். இந்தநிலையில், 20 தினங்களுக்கு முன்னர் கரூர் நகராட்சி நிர்வாகம், அமராவதி ஆற்றில் கழிவுநீரைக் கலப்பதற்காக, ஆற்றுக்குள் கால்வாய் ஒன்றை வெட்டுவதாக காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினார்கள். பத்திரிகைகளில் வந்த அந்தச் செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து இதை வழக்காக எடுத்துக்கொண்டது. தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், கரூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி மோகன்ராம் அமராவதி ஆற்றில் ஆய்வு செய்து, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அமராவதி ஆற்றில் மோகன்ராம் ஆய்வு
அமராவதி ஆற்றில் மோகன்ராம் ஆய்வு
நா.ராஜமுருகன்

அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் மாசுக்கட்டுப்பாடு வாரிய உயரதிகாரிகள், அமராவதி ஆறு மற்றும் இரட்டை வாய்க்காலில் கழிவுநீர் கலக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். நான்கு சாயப்பட்டறை கம்பெனிகளிலும் ஆய்வை மேற்கொண்டனர். இந்தநிலையில்தான், தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், `கரூர் அமராவதி ஆற்றங்கரைப் பகுதியில் சாயப்பட்டறைகளே இல்லை' என்று பேட்டியளித்திருப்பது, கரூர்வாசிகளை கொந்தளிக்கவைத்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இராஜேஷ்கண்ணன்,

``அமைச்சர் நேரடியாக கரூர் வந்து, அமராவதி ஆற்றங்கரையைப் பார்க்கத் தயாரா? அப்படி அவர் வந்தால், இங்குள்ள சாயப்பட்டறைகளை, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினரான நாங்கள் அவருக்குக் காட்டி, நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். கரூரில் இன்றுவரை அமராவதி ஆறு, சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்தும், சாக்கடைக் கழிவுகள் கலந்தும் மனிதர்கள் யாரும் குளிக்க, குடிக்கப் பயன்படுத்தப்பட முடியாத விஷமான நிலையில் இருக்கிறது.

இரட்டை வாய்க்காலில் கழிவுநீர்
இரட்டை வாய்க்காலில் கழிவுநீர்
நா.ராஜமுருகன்

கரூர் அமராவதி ஆற்றுக்குள் சுகாதாரக் கேட்டால், பன்றிகள் மட்டுமே நடமாடிவருவதை எல்லோரும் அறிவர். இந்தநிலையில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர், `ஆற்றங்கரையில் சாயப்பட்டறை இல்லை' என்று சொல்வது யாரை ஏமாற்ற, யாரை திருப்திப்படுத்த இப்படி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்கிறார் எனத் தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, கரூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து பெற்ற அறிக்கையின்படி, கரூர் அமராவதி ஆற்றங்கரை மற்றும் அதன் அருகில் மட்டும் 68 சாயப்பட்டறைகள் இயங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமராவதி ஆற்றின் அவல நிலையை அறிந்ததும், இது விரைவில் நொய்யல் ஆறு, கூவம்போல் செத்த நதியாக மாறிவிடும் என்பதால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகளை நேரடியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஊழல் வாரியமாக மாறி ஊழலில் திளைப்பதாக பகிரங்கமாகக் கூறி வேதனை தெரிவித்தனர். ஆனால், மாசுக்கட்டுப்பாடு வாரியம் பற்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்க, மாசு கட்டுப்பாடு வாரிய அமைச்சர், `இது அவர்கள் கருத்து. கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது' என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார். அதோடு, 'கொடைக்கானல் முதல் கரூர் வரை அமராவதி ஆற்றங்கரையில் பெரிய தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் இல்லை' என்று சொன்னது கொடுமையிலும் கொடுமை.

சேகரிக்கப்பட்ட கழிவுநீர்
சேகரிக்கப்பட்ட கழிவுநீர்
நா.ராஜமுருகன்

கரூரில் அமராவதி ஆற்றின் தென்புறப் பகுதியில் திருமாநிலையூரில், சாயப்பட்டறைக் கழிவுகள் விவசாய நிலங்களில் புகுந்து அந்தத் தண்ணீரை அருந்திய எண்ணற்ற கால்நடைகள் இறந்தது அனைவருக்கும் தெரியும். இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலுசாமி என்ற விவசாயியின் நான்கு மாடுகள் சாயப்பட்டறை கழிவுநீரை அருந்தி இறந்ததையும், அவர் அதற்காக நீதி கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியதையும், பல்வேறு இயக்கத்தினரும் அவருக்கு துணை நின்றதையும் கரூர் மாவட்டத்திலுள்ள அனைவரும் அறிவர். ஆனால், அமைச்சர் இப்படிப் பொய் சொல்வது கண்டிக்கத்தது" என்றார் ஆவேசமாக!