Published:Updated:

`அன்று விண்வெளி... இன்று பூமியின் ஆழமானப் பகுதி!' - இரண்டாவது முறையாக `முதல் பெண்மணி' கேத்தி

கேத்தி சல்லிவன்
News
கேத்தி சல்லிவன் ( Nasa - Enrique Alvarez )

சாதனைக்கு வயதோ, பாலினமோ எந்த விதத்திலும் தடையே இல்லை என நிரூபித்துக் காட்டியிருக்கும் கேத்தி சல்லிவன் ஜூன் 15-ம் தேதி குவாம் தீவிலுள்ள துறைமுகத்துக்குத் திரும்புவார்.

Published:Updated:

`அன்று விண்வெளி... இன்று பூமியின் ஆழமானப் பகுதி!' - இரண்டாவது முறையாக `முதல் பெண்மணி' கேத்தி

சாதனைக்கு வயதோ, பாலினமோ எந்த விதத்திலும் தடையே இல்லை என நிரூபித்துக் காட்டியிருக்கும் கேத்தி சல்லிவன் ஜூன் 15-ம் தேதி குவாம் தீவிலுள்ள துறைமுகத்துக்குத் திரும்புவார்.

கேத்தி சல்லிவன்
News
கேத்தி சல்லிவன் ( Nasa - Enrique Alvarez )

தன்னுடைய 68 வயதில் பூமியின் மிக ஆழமான பகுதியான சேலஞ்சர் டீப்பை அடைந்து இப்போதுள்ள இளசுகளுக்கெல்லாம் சவால் விட்டுள்ள அமெரிக்க புவியியலாளரான கேத்தி சல்லிவன் அக்டோபர் 3, 1951-ல் பிறந்தவராவார்.

அக்டோபர் 11, 1984-ம் ஆண்டு விண்வெளியில் நடந்த முதல் பெண்மணி என்ற புகழை அடைந்த கேத்தியின் சாதனை தாகம் மேலும் கூடியது. அதே தாகம்தான் கேத்தியை தெற்கு பசுபிக் கடலிலுள்ள மரியானா டிரன்ச்-ன்(mariana trench) மிக ஆழமான பகுதியான சேலஞ்சர் டீப்பை நோக்கி அழைத்துச் சென்றது.

உலகின் மிக ஆழமான கடல் பகுதியாக அறியப்பட்ட சேலஞ்சர் டீப் 10,984 மீட்டர் ஆழமுடையது. சொல்லப்போனால் எவரெஸ்ட் சிகரத்தையே இந்தப் பகுதியில் மூழ்கடித்தாலும் கூட அதன் உச்சிக்கு மேல் சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு நீர் பரப்பானது இருக்கும் என்கிறார்கள்.

இதில் பயணிப்பதற்காகவே கேத்தி சல்லிவனுக்காக, கடலின் ஆழத்தில் பயணிக்கக்கூடிய பிரத்யோக ஊர்தி உருவாக்கப்பட்டுள்ளது.

பூமியின் ஆழமான பகுதியான சேலஞ்சர் டீப் பகுதியை அடைந்தவர்களின் எட்டாவதாக இடம் வகிக்கிறார் கேத்தி. நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானவரான `டைட்டானிக்' திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூட இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்றால் பாருங்கள்.

இரண்டுமுறை முதல் பெண்மணியாக சாதித்துக் காட்டிய கேத்தி சல்லிவன் கூறும்போது விண்வெளிக்குச் செல்லும்போது சந்தித்த சவால்களை விடவும் அதிகமான சவால்களைக் கடலுக்குள் சந்தித்ததாக கூறுகிறார்.

ஏனெனில் விண்வெளியில் உள்ள அழுத்தத்தை விடவும் கடலின் அடியாழத்தில் உள்ள அழுத்தமானது பல மடங்கு அதிகம். சேலஞ்சர் டீப்பில் இருக்கும்போது கேத்தியின் நீர்மூழ்கிக் கப்பலுக்கு வெளியில், ஒரு சதுர இன்ச் பரப்பில் 2,200 டன் அழுத்தம் இருந்தது. அதனால்தான் இது இத்தனை பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

சாதனைக்கு வயதோ, பாலினமோ எந்த விதத்திலும் தடையே இல்லை என நிரூபித்துக் காட்டியிருக்கும் கேத்தி சல்லிவன் ஜூன் 15-ம் தேதி குவாம் தீவிலுள்ள துறைமுகத்திற்கு திரும்புவாரென எதிர்பார்க்கப்படுகிறது.