ஜெயலலிதா இருந்திருந்தால், ஒரே நேரத்தில் இத்தனை அமைச்சர்கள், இப்படி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்க முடியுமா?

இத்தனை பேரும், இத்தனை நாள்களாக அமைச்சர் பதவியில் நீடித்திருக்க முடியுமா?

ஆர்.எம்.சுப்பிரமணியன், தேவகோட்டை.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் வாரிசுகள் இருந்திருந்தால், வாரிசு அரசியல்தானே நடந்திருக்கும்?

முதலாமவருக்கு வாரிசு இருந்திருந்தால், ஜெயலலிதாவுக்கு வேலையே இருந்திருக்காதே!

பொன்விழி, அன்னூர்.

அன்னூரார் சினிமாவில் குதிக்க ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன தகுதி வேண்டும்?

ஓ... ஆரம்பமே ‘அன்னூரார்’. செம அசத்தல்தான். நீங்கள் நேரடியாக அரசியலிலேயே குதிக்கலாமே!

@ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி-75.

மதுபானம், புகையிலைத் தயாரிப்புகள், ஜங்க் ஃபுட், ரசாயன குளிர்பானங்கள் போன்றவை மக்களுக்குத் தீமை விளைவிப்பவை. இது தெரிந்தும் வருமானம் கிடைக்கிறது என்ற காரணத்துக்காக அரசாங்கங்கள் அதையெல்லாம் அனுமதிப்பது நியாயம்தானா?

நியாயமில்லைதான். ஆனால், ‘அரசாங்க இயந்திரங்கள் சுழல்வதே இவற்றால்தான்’ என்று நம்மை நம்பவைப்பவர்களையே மாற்றி மாற்றித் தேர்ந்தெடுப்பது நாம்தானே!

இனியவதி சரவணன், கொட்டாரக்குடி (நரிமணம்).

பரம்பரையாகப் பணம் படைத்தவர்கள், அதிகாரமும் ஆளுமையும்கொண்டவர்கள் என எல்லோரும், எந்த வகையிலாவது திரும்பத் திரும்பப் பணம் சேர்க்கவே ஆசைப்படுகிறார்களே... ஏன்?

பணப் ‘பசி’!

லெட்சுமி கார்த்திகேயன், சென்னை-24.

பொருளாதார மந்தநிலையிலிருந்து தப்பிக்க, என்ன வழி கழுகாரே?

தனித்தனியாக கார், தனித்தனியாக பைக் என்பதையெல்லாம் விட்டுவிட்டு... பஸ், ரயில், மெட்ரோ, ஆட்டோ, டாக்ஸி என பொதுப் போக்குவரத்துக்கு மாறுங்கள். சைக்கிள்களை தூசு துடையுங்கள். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது, வீண் ஆடம்பரங்கள், வீண் விழாக்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதோடு அனைத்து ‘பாட்டி வைத்திய’ங்களையும் கையில் எடுங்கள், குழந்தைகளுக்கும் கற்றுத்தாருங்கள். இதற்கெல்லாம் முன்னுதாரணமாக ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் களத்தில் இறங்குவது உதவியாக இருக்கும். நான்கைந்து கார்கள் புடைசூழப் பறக்கும் கவுன்சிலர்கள் தொடங்கி, ஊர் முழுக்கப் புழுதி பறக்க படை திரண்டு செல்லும் அமைச்சர்கள் வரை அனைவரும் முதலில் ‘அடங்க’ வேண்டும்!

@குடந்தை பரிபூரணன், வடகரை.

‘ஆசிரியர்களின் சொத்துவிவரங்கள் அனைத்தும் கட்டாயம் பதிவுசெய்யப்பட வேண்டும்’ என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே?

இப்படியெல்லாம் மற்றவர்களுக்கு உத்தரவு போடுபவர்கள், தாங்கள் ஒழுங்காக இது அனைத்தையும் செய்கிறோமா என்று பார்ப்பதில்லை. என்றாலும், அவர்கள் நினைத்தது நடந்திருக்கிறது. ஆம், ‘போராட்டங் களில் பங்கேற்க மாட்டோம்’ என்று ஆசிரியர் சங்கங்களில் ஒன்றிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளதே!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

அரசுக்கு எதிரான செய்திகள், மக்களிடம் போய்ச் சேராதபடி ஊடகங்கள் மூடி மறைப்பது பற்றி?

‘மூடி மறைக்கப்படுகிறது’ என்கிற சங்கதிகூட உங்களுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது என்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது!

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

வாதங்கள் முடிந்த பிறகும் நீதிமன்றங்கள் தீர்ப்பை ஒத்திவைக்கின்றன. குறிப்பாக, உச்ச நீதிமன்றம். இதற்குக் காரணம் என்ன?

ஆயிரம் இருக்கும்!

கி.முருகவேள், கெங்கவல்லி, சேலம் மாவட்டம்.

‘கடவுள் இல்லை... இல்லவே இல்லை’ என்று தந்தை பெரியார்தான் சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் சொல்லவில்லை. அதனால், அவர்கள் கடவுள் நம்பிக்கைகொள்வதில் என்ன தவறு?

‘நாங்கள் பெரியாரின் பேரன்கள்’ என்று சொல்லிக்கொள்வதுதான் தவறு.

@அ.குணசேகரன், புவனகிரி-கடலூர் மாவட்டம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு விரைவாக மீண்டுவிடுமா?

அது ஆட்சியாளர்கள் அடுத்தடுத்து எடுத்து வைக்கும் அடியின் வேகத்தைப் பொறுத்தது!

சு.பிரபாகர், தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால், திடீர் பயணம், அத்தியாவசிய பயணம் இதற்கெல்லாம் அவற்றையே நம்பி இருக்க முடியாதல்லவா?

பொதுவாகவே திடீர் பயணங்கள் குறைவுதான். ஆக, திட்டமிட்டுப் பயணிக்கும்போது பொதுப் போக்குவரத்து எளிதாகவே இருக்கும். ஆனால், எல்லா பயணங்களையுமே திடீர் பயணங்கள்போல, கடைசி நிமிடத்தில் முடிவெடுப்பதுதானே பெரும்பாலும் இங்கே நடக்கிறது. ஒரு சினிமாவுக்குச் செல்வதைக் கூட அரை மணி நேரத்துக்கும் முன்பாக முடிவெடுக்கும் மனோபாவம்தானே இங்கே நிறைந்திருக்கிறது.

ஜி.வி.மனோ, கொலுவை நல்லூர்.

நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைக் கொண்டுவர ஆலாய் பறக்கும் மத்திய அரசு, இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கைக் கொண்டுவர நினைப்பதில்லையே ஏன்?

இந்தியா முழுவதுமே மக்கள் யோசிக்க ஆரம்பித்தால், ஆபத்தாகி விடுமே!

எம்.மரியஏசுதாஸ், வில்லுக்குறி, குமரி மாவட்டம்.

கழுகாரே, தமிழகத்தில் மீண்டும் மக்கள் நலக் கூட்டணி உருவாகுமா?

எப்போதுமே மக்கள் நலக் கூட்டணிகள்தான் உருவாக வேண்டும்.

‘தட்டார் மடம்’ சித்தர்ராஜ்.

சேலத்தைச் சேர்ந்த பாலாஜி என்கிற ஜோதிடர்,

‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்’ என்று கூறியிருப்பதை கழுகார் எப்படிப் பார்க்கிறார்?

‘ஆரூடம்’ எல்லாம்கூட, ‘ஜோதிடம்’ என்றாகி ஆண்டுகள் பலவாகின்றனவே.

கே.கே.பாலசுப்ரமணியன், கே.ஆர்.புரம், பெங்களூரு.

‘கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் குடும்பத்தினர் செய்த பூஜை, புனஸ்காரங்கள் எதுவும் அவரின் அரசைத் தக்கவைத்துக்கொள்ள உதவவில்லை. இதையே பாடமாகக் கொள்ளுங்கள். மக்களின் பணத்தையும் உங்களின் பொன்னான நேரத்தையும் வீணாக்காதீர்கள்’ என்று இந்நாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு, மைசூர் வழக்கறிஞர் ராகவேந்திரா கடிதம் எழுதியிருக்கிறாரே?

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்!

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டால் தன்மானம் உள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். தி.மு.க-வுக்கு விட்டுக்கொடுத்தால் தன்மானம் இல்லாதவர்கள் ஆகிவிடுவார்கள்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறாரே?

மறுபடியும் ‘தம்’ மானம் பறிபோய்விடக் கூடாது என்று பதறுகிறார்.

@ஈஸ்வரன்.ஏ.

விஜய், அடுத்த சூப்பர் ஸ்டாரா... இன்றைய சூப்பர் ஸ்டாரா?

சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்!

@சி.கார்த்திகேயன், சாத்தூர்.

ஆடிட்டர், வக்கீல் போன்றோர்தானே பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிற வகையறாக் களுக்கு வரி ஏய்ப்பு போன்ற விஷயங்களில் யோசனை தருகிறார்கள்?

அதெல்லாம் தொழில் (அ)தர்மம்!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

பொய் சொல்லாத அரசியல் தலைவர் யார்?

மெய் சொல்பவர்!

@‘காஞ்சி’ எஸ்.ஃபைசுதீன் காஞ்சிபுரம்-1.

சந்திரயான்-2 செலவா... சாதனையா?

சோதனை!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம்.

‘‘அடியாட்கள், சாராய வியாபாரிகள், லஞ்ச பெருச்சாளிகள் போன்றோர்தான் ‘கல்வித் தந்தை’ என்று தமிழகத்தில் போற்றப்படுகின்றனர்’’ என்று நடிகை கஸ்தூரி வருத்தப்படுகிறாரே?

அரசாங்கமே சாராயம் விற்க ஆரம்பித்துவிட்ட பிறகு, அவர்களும் வேறு என்னதான் செய்ய முடியும்?

காந்தி, திருச்சி.

‘தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை, சிவகங்கை ஆகிய தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரும்’ என்று ஹெச்.ராஜா கூறுகிறாரே?

ஹலோ காந்திஜி, இதையெல்லாம் சொல்றது ‘ராஜா’ஜி. காரணம், 2ஜி. ஒருவேளை இது நடந்தால், நாலு தொகுதிகள்லயும் ஜெயிக்கப்போறது ‘காந்தி’ஜி. போதுமாஜி!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com

என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!