Published:Updated:

கழுகார் பதில்கள்!

ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

ஜெயக்குமாரிடம் பிடித்ததே இதுதான். ‘பாதாள பூஜை’யெல்லாம் செய்தும்கூட தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதை எவ்வளவு வசதியாக மாற்றிவிடுகிறார் பாருங்கள்.

கழுகார் பதில்கள்!

ஜெயக்குமாரிடம் பிடித்ததே இதுதான். ‘பாதாள பூஜை’யெல்லாம் செய்தும்கூட தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதை எவ்வளவு வசதியாக மாற்றிவிடுகிறார் பாருங்கள்.

Published:Updated:
ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயக்குமார்

@ஆர். ஹரிகோபி, புதுடெல்லி.

‘தி.மு.க-வைப்போல் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கெல்லாம் பாத பூஜை செய்து மந்திரி பதவிகளை வாங்க நாங்கள் தயாரில்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி?

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

ஜெயக்குமாரிடம் பிடித்ததே இதுதான். ‘பாதாள பூஜை’யெல்லாம் செய்தும்கூட தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதை எவ்வளவு வசதியாக மாற்றிவிடுகிறார் பாருங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காமராஜர்
காமராஜர்

டி.சந்திரன், ஈரோடு.

‘சிறந்த நிர்வாகி, நேர்மையான அரசியல்வாதி, கல்விக் கண் திறந்தவர்’ என்றெல்லாம் காமராஜரை எல்லா அரசியல்வாதிகளுமே கொண்டாடுகிறார்கள். ஆனால், ஒருவர்கூட அவரைப் பின்பற்றமாட்டேன் என்கிறார்களே?

‘சொல் ஒன்று, செயல் ஒன்று’ என்றிருப்பவர் களுக்குத்தானே இங்கே மரியாதை?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கழுகார் பதில்கள்!

@அம்மு வெங்கட்.

ஒவ்வொரு கிராமத்திலும் ‘தூய்மை கிராமம்’ என்று பெயர்ப் பலகை வைப்பதுதான் தூய்மை இந்தியா திட்டமா?

‘நாங்கள் எம்.பி, எம்.எல்.ஏ என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே, கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுடன் இணைந்து வளர்ச்சியை உறுதிப் படுத்துவதற்காகத்தான். எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோமோ, அதை நேர்மையாகச் செய்வோம். சாக்கடையைச் சுத்தம் செய்யவோ, கழிவறையைச் சுத்தம் செய்யவோ எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளுக்கு நாங்கள் வரவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்’

- இது, மத்தியப்பிரதேசத்தின் போபால் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சாமியாரிணி பிரக்யா சிங், மக்கள் மத்தியில் கொடுத்திருக்கும் வாக்குமூலம். ‘ஸ்வச் பாரத்’ என்கிற பெயரில் தூய்மை இந்தியாவை உயர்த்திப்பிடிக்கும் நரேந்திர மோடியின் சிறந்த தேர்வுகளில் இவரும் ஒருவர். என்ன தூய்மையோ... என்ன நேர்மையோ!

கே. கருப்பசாமி, திருநெல்வேலி.

நாத்திகம் பேசும் தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள்கூட அத்திவரதரை தரிசிக்க முண்டியடிக்கிறார்களே?

இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்களின் வீடுகள் மற்றும் சொந்தபந்தங்கள் என்று பலருடைய தலைகளிலும் ஆத்திகத்துக்கான குறியீடுகள் அழகாக, அதுவும் பல ஆண்டுகளாக ஜொலிக்கத்தானே செய்கின்றன. அதுமட்டுமா, ஜோதிடரின் வீடு, பரிகாரக் கோயில்கள் என்று அவர்கள் படையெடுத்துக் கொண்டுதானே உள்ளனர்? நாத்திகமெல்லாம் இப்போது அவர்களுக்கு ‘ஊறுகாய்’ மட்டுமே!

ஹெச்.மோகன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

கழுகார் பதில்கள்!

மிஸ்டர் கழுகாருக்கு பினாமிகள் உண்டா?

நீங்களும் அதில் ஒருவர் என்பதை மறந்துவிட்டு, இப்படி வெளிப்படையாகக் கேட்டுவிட்டீர்களே, மிஸ்டர் மோகன்!

@ஸ்ரீ, மதுரை.

அரசு போக்குவரத்துக் கழகம் பல ஆயிரம் கோடிகள் நஷ்டத்தில் இயங்குகிறது என்கிறார்கள். பேருந்துகளின் நஷ்டத்தைத் தவிர்க்க ஷேர் ஆட்டோக்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கலாமே?

ஹைய்யோ... ஹைய்யோ... ஷேர் ஆட்டோக்களால்தான் நஷ்டம் என்பதை நம்பும் அளவுக்கு அப்பாவியாக இருக்கிறீர்களே ஸ்ரீ. பழைய டயர், பழைய கியர் எல்லாவற்றையும் பாலிஷ் போட்டு ஓட்டை உடைசல் பேருந்துகளை ஒரு பக்கம் அப்படியே ஓட்டிக் கொண்டிருக்கி றார்கள். ஆனால், புதிதாக உதிரி பாகங்களை மாற்றியதாக அலுவலகக் கணக்குப் புத்தகங்கள் மட்டும் கண்ணடிக்கின்றன. இன்னொரு பக்கம், புதிது புதிதாக பேருந்துகள் வாங்குகிறார்கள். அவையெல்லாம் ‘பணம் பணம்’ என்றே பளபளக்கின்றன. நஷ்டம் நமக்கு, லாபம் அவர்களுக்கு.

@வாசு, குறிஞ்சிப்பாடி.

‘மயிர் நீப்பின்’ என்று திருக்குறளில் உள்ள வார்த்தை, எப்போது கெட்டவார்த்தை ஆனது?

வார்த்தை எப்போதுமே கெட்டுப்போகாது. நாம்தான் கெட்டுப்போவோம். மனங்களில் அழுக்குகள் சேரச்சேர வார்த்தைகளுக்குக் கெட்ட பெயர்களை ஏற்படுத்திக் கொண்டே வருகிறோம். மலம், சிறுநீர், வாந்தி, சளி போன்றவை நம் உடலில் இருந்துதான் வெளியேறுகின்றன. ஆனால், இந்த வார்த்தைகளை உச்சரித்தாலே அருவருப்பு ஏற்படுகிறது. இதற்கெல்லாம் யார் காரணம்?

இனியவதி சரவணன், கொட்டாரக்குடி, திருவாரூர் மாவட்டம்.

‘மந்திரிகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘அரசிளங்குமரி’ போன்ற சமூகநீதி படங்கள் தற்போது வருவதில்லையே?

நீங்கள் சொல்வதெல்லாம் அரசநீதி படங்கள். உண்மையான சமூகநீதி படங்களும் ஏற்கெனவே நிறைய வந்துள்ளன. இப்போதும் நிறையவே வந்து கொண்டிருக்கின்றன. பரியேறும் பெருமாள், அறம், டு லெட், மேற்குத் தொடர்ச்சி மலை, சூப்பர் டீலக்ஸ் என்று சமீபத்திய படங்களையே சிறு பட்டியலாக உங்களுக்குத் தரமுடியும்!

சு.தமிழ்மாறன், தலைஞாயிறு.

எம்.எல்.ஏ-க்கள் கட்சி தாவுவது அதிகரித்து வருகிறது. இருக்கும் கட்சி பிடிக்கவில்லை என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டியதுதானே?

கொள்கைகள் பிடித்துத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றிபெற்றிருந்தால் நீங்கள் சொல்வது சரி. பலரும் கொள்ளை நோக்கில்தானே வருகிறார்கள். சீட் வாங்குவதற்குக் கோடி கோடி, தேர்தல் செலவுக்குக் கோடியோ கோடி என்று ரூபாயை அள்ளி வீசுகிறார்கள். வட்டிக்கு வட்டி போட்டு வசூல்செய்வதுதான் முக்கியமான பணியே. வட்டியும் முதலுமாக அந்தப் பக்கம் அள்ளி வைப்பதால், இந்தப் பக்கமிருந்து தாவுகிறார்கள்.

நா.மைதிலி, சென்னை-45.

நீட் தேர்வு எல்லா மாநிலங்களிலும் உண்டுதானே? வேறு எந்த மாநிலங்களிலாவது இந்த அளவுக்குத் தற்கொலை செய்துகொள்கிறார்களா?

ஆரம்பத்தில் இந்தத் தேர்வை ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களும் எதிர்க்கத்தான் செய்தன. அது 2011 - 12 காலகட்டம். இப்போது பெரிதாக எந்த மாநிலங்களிலும் எதிர்ப்பில்லை - தமிழகத்தைப்போல! அதேசமயம், இந்த நீட் தேர்வு பிரச்னையை வேறுவிதமாகச் சமாளிப்பதற்காக மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்கள், மாநில அளவிலான கோட்டா என்கிற பெயரில் சில முயற்சிகளை மேற்கொண் டுள்ளன.

தற்கொலையைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு தோல்விக்குக்கூடத்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதை நீட் தேர்வுடன் இணைத்துப் பார்ப்பது தேவையற்றது. அது பிற மாணவர்களையும் மனதளவில் பாதிப்புக் குள்ளாக்கும்.

கழுகார் பதில்கள்!

‘கோடத்தூர் எம்.ஜி.ஆர்’ மனோகரன், சின்னதாராபுரம், கரூர் மாவட்டம்.

கி.பி. 2229-ல் உலகம் அழியும் என்கிறார்களே, உண்மையா?

கி.பி. 66 தொடங்கி 2012 வரை நூற்றுக்கும் மேற்பட்ட தடவை இந்த உலகத்தை அழித் துள்ளனர் பல ‘சதுரங்க வேட்டை’ பார்ட்டிகள். இப்போது, ‘2229-ல் அழியும்’ என்று உங்களிடம் 200 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட்டுள்ளனர். இடைவெளி ரொம்ப அதிகமாக இருப்பதால், சுவாரஸ்யம் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால், அடுத்த ஆண்டான 2020-ல் அழியும் என்றும் அதை விட்டால் 2026-ல் அழியும் என்றும் சிலர் சொல்லியுள்ளனர். ஆவலோடு காத்திருந்தால், நம் தலைமுறையிலேயே பார்த்துவிடலாம். இதைவிட்டால்... 2339, 2369, 30,000, 1,00,00,00 என்று நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

அனிதா, சேலையூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

‘தி.மு.க எம்.பி-க்கள் 37 பேரும் பி.ஜே.பி-க்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவும், அதன்மூலம் தமிழக சட்டசபையில் மாற்றம் வரும்’ என்றும் கூறப்படுவது உண்மையா?

வெளியிலிருந்தா? உள்ளேயும்கூட தி.மு.க-வின் ஆதரவு பி.ஜே.பி-க்குத் தேவையிருப்பதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு ஆதரவு தேவைப்படுவது தி.மு.க-வுக்குத்தான்.

சீனி.சோமசுந்தரம், திருநாகேஸ்வரம்.

ஊடகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் கண்டனங்கள் எதற்கும் தமிழக அரசு மதிப்புக் கொடுக்காமல் இருப்பது எந்தத் தைரியத்தில்?

‘எல்லாம் மேல இருப்பவன் பார்த்துப்பான்’ என்கிற தைரியம்தான்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism