Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

நல்ல திட்டம்தான். ஆனால், ஓடோடி வந்து தானாகவே வரியைக் கட்ட வைக்கக்கூடிய அளவுக்குக் கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, ஏன் இப்படிக் கெஞ்ச வேண்டும் என்பதுதான்

கழுகார் பதில்கள்

நல்ல திட்டம்தான். ஆனால், ஓடோடி வந்து தானாகவே வரியைக் கட்ட வைக்கக்கூடிய அளவுக்குக் கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, ஏன் இப்படிக் கெஞ்ச வேண்டும் என்பதுதான்

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

@ந.பிரகாஷ்.

தங்களின் மின்னஞ்சல் முகவரி kalugu@viatan.com (கலுகு) இருக்கிறது. இதை, அருமையான தமிழில் kazhugu (கழுகு) என்று மாற்றலாமே?

உண்மையிலேயே சொல்லுங்கள் `kazhugu’ என்பது அழகுத் தமிழா... அதை ‘கஸுகு’ என்று என்றுதானே படிக்க முடியும். அதைவிட, கிட்டத்தட்ட இணையாக இருக்கும் ‘கலுகு’ எவ்வளவோ பரவாயில்லைதானே! ‘ழ’ தமிழின் சிறப்பு. `இதை அப்படியே ஆங்கிலத்தில் வேறுபடுத்திக் காட்டுகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு ‘Z’ போட்டு எழுதும்போது, பிறமொழிக்காரர்கள் ‘கஸுகு’ என்றும் ‘தமிஸ்’ என்றும்தான் படிப்பார்கள். அது நன்றாக இருக்காதே பிரகாஷ்!

@ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் ஆவதற்குத் தகுதியான ஊர் எங்கள் திருச்சிதானே?

அவர்கள், எதையோ ‘திரிச்சி’ விடுவதற்காகப் பேசிக்கொண்டிருக் கிறார்கள். நமக்குத் தலைக்கு மேல் நிறைய வேலை இருக்கிறது. அதில் கவனத்தைச் செலுத்துவோம். சரிதானே மகாலிங்கம்!

@ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

இ-பாஸ் எல்லாருக்கும் கிடைக்குதே..?

அட போங்க Boss... எல்லாமே போங்கு Pass!

கழுகார் பதில்கள்

@த.சந்திரசேகரன், திருச்சி.

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் மதுரை, திருச்சி... கழுகார் தேர்வு எது?

தலைநகரம் என்ற ஒன்று இனிமேல் பெரிதாகத் தேவையில்லை. இதைப் புரிந்துகொள்வதற்கு சரியான தலைகள்தான் இனி நம் தேவை. இந்த டிஜிட்டல் யுகத்தில், இருந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் கொரோனா இதையெல்லாம், இந்த ஐந்து மாதங்களில் மிக அழகாகவே நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று பண விரயம், நேர விரயம், எரிபொருள் விரயம், மனித உழைப்பு விரயம் என அனைத்தையும் களைவதுதான் இப்போதைக்கு நாம் கையில் எடுக்க வேண்டிய தலையாய பணி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மா.பவழராஜன், நன்செய்இடையாறு, நாமக்கல் மாவட்டம்.

ஊழல் ஆட்சிகள் தொடர்வதைப் பார்க்கும்போது, யானையின் தும்பிக்கையில் மாலையைக் கொடுத்து மன்னராட்சியைக் கொண்டு வந்தால் எப்படியிருக்கும்?

இப்போதாவது ஊழல் பரவலாக்கப் பட்டிருக்கிறது. மன்னராட்சி என்றால், ஊழல் என்பது ஒரு குடும்பத்துக்கு மட்டுமே உரியதாக மாறிவிடும். சவுதி அரேபியா கதை இப்படித்தான் போய்க்கொண்டிருக் கிறது. இதைச் சொன்னதுமே... ‘அதெப்படி... எங்களுடைய ராஜராஜனின் ஆட்சி பொற்கால ஆட்சி’, ‘குப்தர்களின் காலம் பொற்காலத்துக்கெல்லாம் பொற்காலம்’, ‘அக்பர், மதங்களைக் கடந்து மகோன்னதமாக ஆட்சி நடத்தியவர்’ என்றெல்லாம் ஏதோ அந்தக்காலத்தில் ‘பொற்கிழி’ வாங்கிக்கொண்டு வந்தவர்கள்போல பலரும் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள்.

@க.அருச்சுனன், செங்கல்பட்டு.

11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் தமிழக சட்டமன்றம் காலாவதியாவதற்குள் தீர்ப்பு வருமா அல்லது ‘சட்டமன்றமே காலாவதியாகிவிட்டது என்பதால் இந்த வழக்கு விசாரிக்கத் தகுதியற்றது’ என்று தள்ளுபடி செய்வார்களா?

அது, அந்த நேரத்தில் வழக்கை விசாரிக்கும் நீதிபதியைப் பொறுத்தது. 2006-ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றார் காங்கிரஸைச் சேர்ந்த வேல்துரை. இவரிடம் தோற்ற அ.தி.மு.க-வின் மனோஜ்பாண்டியன் ஒரு புகாரை முன்வைத்து, ‘வேல்துரை சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கக் கூடாது’ என்று வழக்கு தொடர்ந்தார். விசாரணை நீண்டுகொண்டே சென்றது. ஐந்து ஆண்டுக் காலமும் உறுப்பினராக இருந்து அனுபவித்து முடித்துவிட்டார் வேல்துரை. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2019-ம் ஆண்டுதான் இறுதித் தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். அதில், `வேல்துரை தன் ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.

வழக்கின் தன்மையைப் பொறுத்து உடனுக்குடன் விசாரிக்காமல்விடுவதால், சட்டங்கள் கேலிப் பொருள்களாகவே மாறிக்கிடக்கின்றன. இவையெல்லாம்தான் பல்வேறு அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகவும் அமைந்துவிடுகின்றன. இதனால், ‘வலுவுள்ளவர்களுக்குச் சாதகமாக தீர்ப்புகள் வருகின்றன’ என்கிற விமர்சனங்கள் எழுவதையும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி, தேனி மாவட்டம்.

‘கொரோனா’வுக்கு அதிக நன்றிக்கடன்பட்டவர் யார்?

எடப்பாடி பழனிசாமி. கடந்த மார்ச் 23-ம் தேதிக்கு முன்புவரை அவரைக் கண்டுகொள்ளாதவர்கள்கூட, கடந்த ஐந்து மாதங்களாக ‘நாளைக்கு என்ன சொல்லப் போகிறார்’ என்று ஆவலுடன் எதிர்பார்க்கவைத்தது கொரோனாதானே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@அ.சுகுமார், காட்பாடி.

@தி.மு.க-வின் தலைமையகமான அறிவாலயத்தில், அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் தடவையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்துள்ளாரே..?

அ.இ.தி.மு.க!

‘குத்தாலம்’ ஜெ.நடராஜன், மயிலாடுதுறை மாவட்டம்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அன்புமணி இவர்களில் யார் வந்தால் நன்றாக இருக்கும்... யார் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்?

திருவாளர் நடராஜன் அவர்களே... கேள்வி புரியவில்லை. ‘யாருக்கு நன்றாக இருக்கும், யாருக்கு நன்றாக இருக்காது’ என்று கேள்வியைக் கொஞ்சம் தெளிவாக அனுப்பிவையுங்கள்... ப்ளீஸ்!

@அந்திவேளை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்தவழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது சரிதானா?

அவர் செய்திருப்பது கொலைக்குற்றமல்ல. உச்ச நீதிமன்ற நீதிபதியின் சிற்சில செயல்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்பினார், அவ்வளவுதான். இந்த விஷயத்தில், ‘நீதிபதிகளைப் பற்றி பேசவே கூடாது’ என்கிற அளவுக்கு பூர்ஷ்வா மனப்பான்மையுடன் தீட்டி வைக்கப்பட்டிருக்கும் நம்முடைய சட்ட ஷரத்துக்கள்தான் உண்மையில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நியாயம் தண்டிக்கப்பட்டிருக்கிறது. ‘மன்னிப்புக் கேட்கமாட்டேன். எந்த தண்டனை யையும் ஏற்கத் தயார். நீதிபதிகளைவிட நியாயம்தான் பெரிது’ என்று உச்ச நீதிமன்றத்திலேயே இந்த 63 வயதிலும் கர்ஜித்திருக்கும் பிரசாந்த் பூஷன், நீதிதேவன்களின் மயக்கத்தை மட்டுமல்ல, இந்த நாட்டுமக்களின் மனங்களையும் கலைத்திருக்கிறார். இதற்குப் பிறகும் இந்த நாடு முழுவதும் மவுனம் காப்பது... எதிர்கால இந்தியாவுக்கு நல்லதல்ல!

@பா.ஜெயப்பிரகாஷ், மாக்கினாம்பட்டி, கோவை மாவட்டம்.

‘தகுதியுள்ள அனைவரும் தாமாக முன்வந்து வருமானவரி செலுத்த வேண்டும்’ என்கிற பிரதமர் மோடியின் புதிய திட்டம்?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நல்ல திட்டம்தான். ஆனால், ஓடோடி வந்து தானாகவே வரியைக் கட்ட வைக்கக்கூடிய அளவுக்குக் கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, ஏன் இப்படிக் கெஞ்ச வேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஆதார், வங்கி, பான் கார்டு என அனைத்தையும் இணைத்தாகிவிட்டது. ஒரு பட்டனைத் தட்ட வேண்டியதுதான் பாக்கி. அதைவிடுத்து, தலையைச் சுற்றி ஏன் மூக்கைத் தொட வேண்டும்... இந்த பட்டனைத் தட்டுவதற்கு முன்பாக, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசுப் பணியாளர்கள் என்கிற போர்வையில், மக்களின் வரிப்பணத்தைச் சூறைத்தேங்காய் விட்டுக்கொண்டிரு ப்பதை என்ன செய்வது என்று பிரதமர் யோசிப்பது மிக மிக நல்லது. இந்த வகையில் பல லட்சம் கோடிகள் ஆண்டுதோறும் `பணால்’ ஆகிக்கொண்டிருக்கின்றன என்பதை மறக்கவும் கூடாது... மறைக்கவும் கூடாது!

@செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

கொரோனா பீதிகள் அடங்கிவிட்டனவா?

‘விஞ்ஞானபூர்வ ஊழல் பார்ட்டிக’ளெல்லாம்கூட, ‘அடச்சே... இப்படியொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே...’ என்று கொரோனாவால் திறந்திருக்கும் கஜானாவைப் பார்த்து அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு இன்றைய ஊழல் பார்ட்டிகள் இந்த கொரோனாவின் பெயரால் கெட்ட ஆட்டம் போட்டுக்கொண்டிருக் கிறார்கள். அவர்கள் இப்போதைக்கு அடங்குவதாகத் தெரியவில்லை. எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள் ஷாதலி. மஞ்சள் கலர் வண்டியில் வீதிவீதியாக நாய் பிடிப்பதுபோல, கொரோனாவுக்குப் பொய்யாக ஆள் பிடிக்க வேறு ஆரம்பித்துவிட்டார்களாம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism