Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

தேவையில்லாமல் அவர்களைச் சார்ந்தே நிற்க நினைப்பதால் வரும் பிரச்னை. விட்டுவிலகுங்கள்... ‘எஜமானத்தனம்’ தானாகவே அடிபட ஆரம்பிக்கும்.

கழுகார் பதில்கள்

தேவையில்லாமல் அவர்களைச் சார்ந்தே நிற்க நினைப்பதால் வரும் பிரச்னை. விட்டுவிலகுங்கள்... ‘எஜமானத்தனம்’ தானாகவே அடிபட ஆரம்பிக்கும்.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

@சிவா, அயடேரோவா, நியூசிலாந்து.

இன்றைய நிலையை வைத்து யோசிக்கும்போது, 2020, நவம்பர் அமெரிக்கத் தேர்தலில் ‘டொனால்டு ட்ரம்புக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று அந்த நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு வேண்டுகோள் விடுப்பாரா நரேந்திர மோடி?

‘சிறு வயதில் குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் நான் டீ விற்றுக்கொண்டிருந்தபோது, கிளாஸ் கழுவிக்கொடுத்த என்னுடைய நாற்பதாண்டுக்கால நண்பன் ட்ரம்ப்’ என்றெல்லாம்கூட அறிக்கைகள் வரலாம்... யார் கண்டது!

ஆர்.குப்புசாமி, குரோம்பேட்டை.

தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் மட்டும் கொரோனா தாக்கம் குறையவில்லையே... ஏன்?

இங்கேதானே நெருக்கமும் குறைவில்லாமல் இருக்கிறது!

கழுகார் பதில்கள்

@ஆர்.அஜிதா, கம்பம், தேனி மாவட்டம்.

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டிருப்பது பற்றி?

‘வாரித்தரும் வள்ளல்களே வருக... வருக’ என்று ஆர்ச் போட்டு, போஸ்டர்கள் ஒட்டிக் கலக்குவதற்கு கொரோனா தயாராக இருப்பதாகக் கேள்வி.

‘சமூக இடைவெளி என்றால் கிலோ என்ன விலை?’ என்று போகிற இடங்களிலெல்லாம் நிரூபித்துக் கொண்டிருக்கும் இவர்களின் சேவை... கொரோனாவுக்குத் தேவையோ தேவை!

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

‘கொரோனாவுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று அரசே சொல்வது, கொரோனாவுக்கு எதிரான போரில் அரசு தோற்றுவிட்டது என்பதைத்தானே காட்டுகிறது?

யதார்த்தத்தைக் காட்டுகிறது. ஒருவகையில் அரசாங்கத்தின் வெற்றியையும் காட்டுகிறது. இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில், எத்தனை நாள்களுக்குத்தான் பூட்டியே வைக்க முடியும். முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றையெல்லாம் ஊரடங்கு மூலமாகக் கற்றுக்கொடுத்திருக்கிறது அரசு. இனி அவற்றை யெல்லாம் சரிவரப் பின்பற்றி நாம்தான் கொரோனாவுடன் போராட வேண்டும். அரசாங்கம் சில விஷயங்களில் கோட்டை விட்டிருக்கலாம். அதற்காக, `தோல்வி அரசாங்கத் துடையது’ என்று ஒதுங்கிக்கொண்டு விட முடியாது. நாமும் பொறுப்பாளிகளே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜி.வி.மனோ, கொலுவைநல்லூர், தூத்துக்குடி மாவட்டம்.

இன்றைய சூழலில் பெரும்பாலான கடைக்காரர்கள், காவலர்கள், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் போன்றவர்கள் தாங்கள்தான் ‘நாட்டுக்கே எஜமான்’ என்பதுபோல நடந்து கொள்கிறார்கள் என்று உணர்கிறேன். சரியா?

தேவையில்லாமல் அவர்களைச் சார்ந்தே நிற்க நினைப்பதால் வரும் பிரச்னை. விட்டுவிலகுங்கள்... ‘எஜமானத்தனம்’ தானாகவே அடிபட ஆரம்பிக்கும்.

கழுகார் பதில்கள்

‘வண்ணை’ கணேசன், சென்னை-110.

‘ஜூலை மாதம் இந்தியாவில் கொரோனா உச்சத்தை எட்டும்’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளதே?

மருத்துவ நிபுணர்கள் சொல்வதும், தினம் தினம் உயரும் எண்ணிக்கையும் அதை உறுதிப்படுத்தத்தான் செய்கின்றன. ஆனால், இப்போது எச்சரிக்கும் இந்த நிறுவனம் முன்கூட்டியே எச்சரித்திருந்தால், சீனாவுடன் கொரோனா நின்றிருக்கும் அல்லது தங்களை அதிமேதாவிகளாகக் காட்டிக்கொள்ளும் சில நாடுகளின் தலைவர்கள் முன்யோசனையுடன் செயல்பட்டிருந்தால்கூட தடுத்திருக்க முடியும். ஆனால், கொரோனாவிலும் அரசியல் செய்து, தினமும் ஊடகங்களில் தங்கள் முகம் வர வேண்டும் என்றே செயல்படுவதால், உலகமே முகக்கவசத்துக்குப் பின்னால் ஒளிய வேண்டியதாகிவிட்டது. இன்னமும்கூட அவர்களெல்லாம் உண்மையை உணர்ந்ததுபோலத் தெரியவில்லையே!

ச.வசுமதி, வேங்கைவாசல், சென்னை-73.

கஷ்டப்பட்டு விளைவித்த விளைபொருள்களை, ‘விலை கிடைக்கவில்லை’ என்பதற்காக வீதிகளில் கொட்டுகிறார்கள். எத்தனை ஏழைகள் உணவின்றி கஷ்டப்படுகிறார்கள். அல்லது அந்த விவசாயிகளின் ஊரில் ஆடு, மாடுகள் கூடவா இல்லை?

விளைச்சல் பெருகிவிட்ட சூழலில், வியாபாரிகள் இலவசமாகக்கூட அவற்றை வாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஏற்கெனவே, வாடகைக்கு லாரி பிடித்து சந்தைக்குக் கொண்டு வந்த கூலியே தேறாத நிலையில், மேற்கொண்டு அதை வீடு வீடாகக் கொண்டுபோய் ஏழைகளுக்குக் கொடுப்பது எப்படிச் சாத்தியப்படும் அல்லது திரும்பவும் ஊருக்குக் கொண்டுபோனால், அந்த வண்டிக்கூலியை யார் கொடுப்பார்கள். இது, இப்படியெல்லாம் சொல்லி எளிதாகப் புரிய வைத்துவிடக்கூடிய விஷயமும் அல்ல. மேம்போக்காகப் பார்க்கும்போது எல்லாமே எளிதாகத்தான் தெரியும். அந்தந்த இடங்களில் அமர்ந்து பார்க்கும்போதுதான் அதன் உண்மையான வலி புரியும்.

‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோயம்புத்தூர்-14.

இன்று சிறு வயதினரிடையேகூட அதிகமாகப் பெருகும் பாலுணர்வுக்கு, ‘ஆரோக்கியமான வடிகால்களை’ அரசு உருவாக்கினால், வக்கிரச் செயல்பாடுகள் நடக்காதுதானே?

பாலுணர்வு என்பது இயற்கை சார்ந்த விஷயம். இயற்கையாக அந்தந்த வயதில் தானே உருவாகும் விஷயம். ஆனால், அதை மறைத்தே தலைமுறைகளாக வாழ்கிறோம். வசதி-வாய்ப்பு, பணம் என்று பலவற்றையும் மனதில்கொண்டு இயற்கையை மீறி வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டுவிட்டோம். இயற்கையாகப் பார்க்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. நாமாக உருவாக்கிவைத்திருக்கும் செயற்கைக் கண்ணாடி வழியாகப் பார்த்தால், பிரச்னையோ... பிரச்னைதான். அதுசரி, அதென்ன ஆரோக்கியமான வடிகால் மிஸ்டர் மனோகர்?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப.திருக்காமேஷ்வரன், குயவர்பாளையம், புதுச்சேரி-13.

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பதற்கு எதிராக தி.மு.க-வுடன் கைகோத்துப் போராடும் காங்கிரஸ், புதுச்சேரியில் மதுபானக் கடைகளைத் திறக்க ஆர்வம் காட்டுகிறதே?

கர்நாடகாவில், ‘காவிரி நீரைத் திறக்கக் கூடாது’ என்பார்கள். தமிழகத்தில், ‘திறக்க வேண்டும்’ என்பார்கள். கேரளாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகக் கொடி பிடிப்பார்கள், தமிழகத்தில் கைகோத்து தேர்தலில் நிற்பார்கள். வெட்கங்கெட்ட அரசியல் கொள்கைகளுக்கெல்லாம் வியாக்கியானம் தேடிக்கொண்டிருக்காமல் வேறு வேலைகளைப் பார்ப்பதே நமக்கு நல்லது.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

@மாணிக்கம், திருப்பூர்.

‘யாராவது நம்மைக் காக்க வர மாட்டார்களா?’ என்றெண்ணும் நாம்தான், ‘இவர் நமக்கானவர் இல்லை’ என்று தெரிந்திருந்தும், அவருக்கே வாக்களிக்கிறோம். இந்த முரண்பாட்டுச் சிக்கலிருந்து மீள்வது எப்போது?

முதலில் அவர்களையெல்லாம் ‘ரட்சகர்கள்’ என்றும் ‘ஆளுமைகள்’ என்றும் பார்ப்பதை நாம் நிறுத்த வேண்டும். நமக்காக வேலை செய்வதற்கு நாமே தேர்ந்தெடுக்கும் ‘பொது ஊழியர்கள்’தான் அவர்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்... அவர்களுக்கும் புரியவைக்க வேண்டும். அதை விடுத்து தலையில் தூக்கிவைத்து ஆட ஆரம்பிப்பதுதான் அவர்களின் ஆட்டத்தைப் பல மடங்காகக் கூட்டிவிடுகிறது!

@வாசுதேவன், பெங்களூரு.

‘மனதார பிறருக்கு உதவ வேண்டும்’ என்று கருதுபவர்களுக்கு பொருளாதார வசதி இல்லாவிட்டால் எப்படியிருக்கும்?

‘தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்’ என்பார்கள். நமக்கே இல்லாத சூழலில், ‘ஐயய்யோ தானம் தர முடியவில்லையே...’ என்று வருந்துவ தெல்லாம் வேண்டாத வேலையே!

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர் மாவட்டம்.

தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவர் முருகன், முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்பிடுக?

ம்... அதெல்லாம் கலகலப்பான ஒரு காலம். எப்படியோ பொழுதும் போய்க் கொண்டிருந்தது. அதையெல்லாம் நினைத்து ஏங்குவதைத் தவிர, ஒப்பிட்டுச் சொல்வதற்கு இப்போதைக்கு ஏதுமில்லை.

@தமிழ்ப்பித்தன்.

‘தமிழக மக்கள் எங்களைப் புறக்கணித்தாலும், தமிழகத்தின் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண, காவிரியுடன் கோதாவரி இணைக்கப்படும்’ என்று கடந்த ஆண்டு சொன்னார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அந்தப் பணிகள் தற்போது எந்த அளவில் உள்ளன?

‘60,000 கோடி ரூபாய் தேவைப்படும்’ என்ற அறிவிப்போடு நிற்கிறது!

@கே.ஆர்.எம்.பி.ஏ.சி.கே.

ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே ஆள்வதற்கு உரிமை பெறுபவர்கள், அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்க என்ன அதிகாரம் இருக்கிறது?

ஐந்து நிமிடங்கள் கொடுத்தாலே ஆட்டி வைத்துவிடுவார்கள். அப்படியிருக்க, ஐந்து ஆண்டு களுக்கு, அதிலும் அசைக்க முடியாத அறுதிப் பெரும்பான்மை யையும் சேர்த்துக் கொடுத்தால், அதிகாரத் தாண்டவம் நடத்தாமல் இருந்தால்தான் அதிசயம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism