@ஹெச்.மோஹன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

ஒரு கட்சியின் கொள்கைக்காகக் கூட்டணி உருவாகிறதா அல்லது கூட்டணிக்காக கொள்கைகள் மாறுபடுகின்றனவா?

பொதுவாகவே ‘பங்காளி’கள் சேர்ந்துதான் கூட்டணியையே உருவாக்குகிறார்கள்.

@டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.

ஊழலைக் கண்டறிவதற்காக மு.க.ஸ்டாலின் வக்கீல்கள் குழு அமைத்திருப்பதற்கு, ‘பூதக்கண்ணாடியில் பார்த்தால்கூட அ.தி.மு.க-வில் ஊழல் தெரியாது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளாரே?

ஓ... அவர்களைவிட ‘விஞ்ஞானரீதி’யில் நன்றாக இவர்கள் தேறிவிட்டார்கள்போலிருக்கிறதே!

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி மாவட்டம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ‘மக்களால் நான்; மக்களுக்காக நான்’ என்றுதான் கூறிக்கொண்டிருந்தார். எனவே, அவருடைய சொத்துகள் அனைத்தும் உணர்வுபூர்வமாக மக்களுக்குத்தானே சேரும்?

ஹலோ, மாடக்கண்ணு... நீங்கள்கூடத்தான் உங்கள் பொட்டல்புதூர் நண்பரிடம், ‘உனக்காக உயிரையே தருவேண்டா’ என்று சொல்லிக்கொண்டிருந்தாகக் கேள்விப்பட்டேன்!

@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர்-77.

‘பொது முடக்கம்’ என்பதை மீறியது அரசாங்கமா... மக்களா?

உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்டே!

@மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி.

சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் பார்த்தீர்களா?

ம்ஹூம்... அகன்ற திரையில், அவ்வளவு கூட்டத்துடன் பார்க்கும் திருப்தியே தனிதான் (படத்தைப் பற்றிய விமர்சனத்துக்கு இந்த வார ஆனந்த விகடன் இதழைப் பாருங்கள்)!

@‘காட்டாவூர்’ இலக்கியன், பொன்னேரி.

ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போனால், மக்களின் நிலைதான் என்ன?

மக்கள் ‘நிலைத்திருக்க’த்தானே ஊரடங்கே!

@ஆர்.சுப்ரமணியன், சென்னை.

‘ஊழல் குற்றவாளி’ என்று உச்ச நீதிமன்றமே உறுதி செய்த ஒருவருக்கு, அரசு செலவில் (மக்கள் வரிப்பணத்தில்) நினைவு இல்லம் அமைக்க முயல்வது நியாயமா?

‘குற்றவாளி’ என்றோ, ‘குற்றமற்றவர்’ என்றோ சொல்லவில்லை உச்ச நீதிமன்றம். ‘வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்’ என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறது. அவர்தான் ‘ஏ1 குற்றவாளி’ என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அப்படியேதான் கீழமை நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. ஆனால், இந்த ஏ-1 உடனிருந்த மூன்று பேர் (சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்) மட்டும்தான் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, மூன்றாண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் எதையுமே உறுதிப்படுத்தாத காரணத்தால், இந்த வழக்கின் தீர்ப்பு உறுதியற்றதாகவே ஆகிவிட்டது. இதுதான் மாநிலத்தை ஆள்வோருக்கும் வசதியாகிவிட்டது. அபராதத் தொகையை வசூலிப்பது, சொத்துகளை முடக்குவது போன்றவற்றைச் செய்ய வேண்டிய அதிகாரம் பெற்றவர்களே... சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தைத் திறக்கிறார்கள், ‘நினைவு இல்லம்’ அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்கிறார்கள்.

@பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்.

அமெரிக்காவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அதிபர் ட்ரம்ப், இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையைத் தீர்த்துவைப்பதாகக் கூறுகிறாரே?

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானமேறி வைகுந்தம் போக ஆசைப்பட்ட கதைதான்.

@மாணிக்கம், திருப்பூர்.

வெளிநாட்டு நிறுவனப் பொருள்களை அன்றாடம் பயன்படுத்திக்கொண்டே ‘சுயசார்பு இந்தியா’வை எப்படி உருவாக்கப் போகிறோம்?

‘சுயசார்பு’ என்பதெல்லாம் இந்த அரசியல்வாதி களைப் பொறுத்தவரை ஃபேஷன். சே குவேரா யார்... அவருடைய போராட்டங்கள் எதற்காக, அவருடைய நியாயங்கள் என்னென்ன... என்பதெல்லாம் தெரியாதவர்கள்கூட, அவருடைய படத்துடன்கூடிய பனியன் போன்றவற்றை அணிந்துகொண்டு கண்டபடி ‘அலப்பறை’ செய்வதில்லையா!

@எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி-1.

‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?

வர வர, தான் சிரிக்காமல் மற்றவர்களைச் சிரிக்கவைக்கும் காமெடி வித்தையில் நன்றாகவே தேறிவருகிறார்!

@ஆர்.ஜி.

‘காங்கிரஸ் செய்ததெல்லாம் தப்பு’ என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., மாற்றி யோசிக்காமல் அதே கொள்கைகளைப் பின்பற்றி மக்களை முட்டாள் ஆக்குகிறதே?

ம்க்கும்... ஆங்கிலேயர்கள் செய்த பலவற்றையும் தவறு என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ், அதற்கெல்லாம் ‘சுதந்திர’ச் சாயம் பூசி மட்டுமே காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே, `அடித்தட்டு மக்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும்’ என்று நினைத்திருந்தால், தன் கையில் முழு அதிகாரம் இருந்த காலத்திலேயே செய்திருக்க முடியும். ஆனால், 73 ஆண்டுகளைக் கடந்த பின்னும் அடித்தட்டு மக்களுக்காகக் கூப்பாடு போட்டுக்கொண்டுதானே இருக்கிறது காங்கிரஸ். இதுபோன்ற விஷயங்களில் கதர், காவி என்பவை யெல்லாம் வெறும் வெளிப்பூச்சுக்காக மட்டுமே. மற்றபடி உள்ளுக்குள் எல்லாமே ஒன்றுதான். பணக்காரர்களுக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இவர்களெல்லாம் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். அதில் இடறும்போது, அதே பணக்காரர்களே குழிபறித்து விடுகிறார்கள்... அவ்வளவுதான்.

@ப்யூனி பிரதர்ஸ்.

‘ஜெயலலிதாவின் வாரிசு’ என்ற தீர்ப்பைப் பெற்ற தீபா, போயஸ் கார்டன் வீடு நோக்கிச் சென்றது ‘ஊரடங்கை மீறிய செயல்’ என்று உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறாரே அ.தி.மு.க அரசின் தலைமை வழக்கறிஞர்?

‘ஹைய்யோ... ஹைய்யோ... சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!’

@மைதிலி கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.

வங்கிகளுக்குக் கடன் தவணை செலுத்துவதற்கான அவகாசம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதே?

எல்லாவற்றையும் நம்பிக்கெடுவதே நமக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. ‘இருபது லட்சம் கோடி’ என்றுகூடத்தான் அறிவித்துள்ளனர். அதை நம்பி ஓடோடிப் போய் க்யூவில் நிற்க ஆரம்பித்துவிடாதீர்கள். வாயாடியே காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்தக் கொரோனா காலத்தில் பொழுதுபோகவில்லை. வாயாலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். வங்கிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான விதிமுறையையும் பதிலையும் சொல்லி, வாடிக்கையாளர்களை வழக்கம்போலக் குழப்புகின்றன. இதை ரிசர்வ் வங்கியும் தட்டிக்கேட்கவில்லை. அதன் ‘உள்ளர்த்தம்’ புரிந்து நாம்தான் ‘தெளிவோடு’ நடந்துகொள்ள வேண்டும்.

@ஆர்.குருராஜன், ஸ்ரீரங்கம், திருச்சி-6.

கொரோனா காலத்தில் கட்டுப்பாடாக இருக்கிறோம். அதேபோல இனிவரும் காலங்களிலும் இருந்தால் என்ன?

திருவாளர் குருராஜன் அவர்களே... நீங்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதே இல்லையோ!

@அன்புக்கரசி பாலசுப்பிரமணியன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

அரை மணி நேரப் பதவி ஏற்புக்கு இரண்டு கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். ஆனால், ‘அரசு வருமானத்தில் பாதித்தொகை அரசு ஊழியர்களுக்குச் சம்பளமாகவே போய்விடுகிறது’ என்றும் புலம்புகிறார்களே..?

முதலமைச்சர் கலந்துகொள்கிறார் என்பதற்காக, பல லட்சங்களைச் செலவழித்து ஏ.சி வசதியுடன்கூடிய கழிப்பறையைக் கட்டுவார்கள். இதுவே அநியாயம். கடைசிவரை அதை அவர் பயன்படுத்தாமல் கிளம்பிச் சென்றுவிட, அப்படியே இடித்தும் தள்ளுவார்கள். இது மகா அநியாயம். இப்படி ஏகப்பட்ட மகா மகா அநியாயங்கள் இப்போதும்கூட இங்கே நடக்கத்தான் செய்கின்றன. அப்படியிருக்க, வேலை பார்த்ததற்காக ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தைப் பற்றியே எப்போதும் கவலைப்படுகிறார்கள் இந்த நியாயன்மார்கள். தேவையேயில்லாமல் பல பதவிகளை உருவாக்கி, தங்களுக்கு வேண்டியவர்களை அவற்றில் அமர்த்தி, லட்சம் லட்சமாகக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பதும் இந்த நியாயன்மார்கள்தான்.

@பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

தமிழ்நாட்டில் வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பதில் கொரோனா முக்கியப் பங்கு வகிக்குமா?

கரன்ஸியன்றி தேர்தல் களம் எப்போதுமே சிறக்காது. ‘கொரோனா’ என்பதும் ஒரு வகையில் கரன்ஸியே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!