ஏ.ராமன், கொளப்பாக்கம், சென்னை-128.

ரஜினிகாந்த், பி.ஜே.பி-யில் சேர்ந்து கூட்டணியின்றி தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என்கிறேன். என் கணிப்பு சரியா (நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல)?

உங்கள் கணிப்பு தவறு (நானும் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல).

@சீதா.ரவி, சிதம்பரம்.

‘பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிப்பதில் பிரதமர் இம்ரான் கானுக்கு உண்மையிலேயே விருப்பமிருந்தால், இந்திய ராணுவத்தை அனுப்பி உதவ தயார்’ என்று மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளாரே?

‘பாகிஸ்தானில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதக் குழுக்கள் செயல்படுகின்றன. இந்த உண்மையை முந்தைய அரசுகள் மறைத்துவிட்டன’ என்று இம்ரான் கானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதுமட்டுமா, பாகிஸ்தான் ராணுவமும் உளவுத் துறைகளில் ஒன்றான ஐ.எஸ்.ஐ-யும் (ISI-Inter-Services Intelligence) முந்தைய காலங்களில் ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்குப் பயிற்சி கொடுத்திருப்பதையும் இம்ரான் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆக, அந்த நாட்டினரால் தீவிரவாதத்தை வேரறுக்க முடியவில்லை என்பதுதானே உண்மையாக இருக்கிறது.

@காவிரிநாடன், சென்னை.

ராசிபுரத்தில் கட்டப்படுவது, ஆலயம் என்ற பெயரில் நூலகம்தான். நடுநிலையின் ஒரே உதாரணம் கழுகார், அதைப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது நடுநிலை தவறியது ஏனோ?

அந்தப் பகுத்தறிவாலயத்துக்கு பூமி பூஜையெல்லாம் போடப்பட்டதை நீங்கள் பார்க்கவில்லையோ!

@விக்னேஷ், மும்பை.

சீமான் நன்றாகப் பேசுகிறார். ஆனால், அதில் உண்மை இருக்கிறதா... நம்பி ஓட்டு போடலாமா?

உண்மை இருக்கிறதோ இல்லையோ... உப்பு இருக்கிறது. முதுகு பத்திரமாக இருக்கவேண்டும் என்றால், ஓட்டுப் போட்டுவிடுங்கள்.

ஹெச்.மோகன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

நாரதர் வேலை, நக்கீரர் வேலை, சகுனி வேலை... இவற்றில் தங்களுக்குப் பிடித்தது எது?

ஓ... உங்களுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையோ மோகன்?

@பாலசுப்ரமணியன் கந்தசாமி.

பஞ்சாயத்துத் தேர்தல் வருமா?

‘பஞ்சாயத்தைக் கலைக்க’ நம் ‘சூனாபானா’க்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இருந்தும் குத்திவிட்டுக் கொண்டே இருக்கிறீர்களே!

@கணேசன்.என்.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தொடங்கிவிட்டது. இயற்கைப் பேரிடர்களிலிருந்து தப்பிக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதாவது எடுத்துள்ளதா?

ஏற்கெனவே இரண்டு, மூன்று முறை கூட்டம்போட்டுப் பேசிவிட்டனர். கஜா புயலின்போது ஆரம்பத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு, பெருமளவு உயிர்ச்சேதங்களைத் தவிர்த்து சபாஷ் வாங்கியது தமிழக அரசு. இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஆனால், புயலுக்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளில்தான் கொஞ்சம் சொதப்பிவிட்டனர். அவற்றையெல்லாம் பாடமாக எடுத்துக்கொண்டு, இந்த முறை பேரிடர் ஏதும் ஏற்பட்டால் நூறு சதவிகிதம் சரியாகச் சமாளிப்பார்கள் என்று நம்பிக்கையோடு இருப்போம்.

@கே.வி.நரசிம்மன்.

நகைக்கடைக் கொள்ளையர்களை பா.ஜ.க கட்சியுடன் தொடர்புபடுத்தி வரும் மீம்ஸ்கள் சரியா கழுகாரே?

சரியில்லைதான். ஆனால், சண்டையில் கிழியாத சட்டை என்று ஏதுமில்லையே!

@பி.அசோகன், கொளப்பலூர்.

விரக்தியின் எல்லை எது?

தொடர்பு எல்லைக்கு அப்பால்.

@பி.மூக்கையா, தஞ்சாவூர்-7.

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறும் கருத்துகளைப் பற்றி?

சமயங்களில், ஏற்றுக்கொள்ள இயலாத வகையிலான கருத்துகளைக்கூட வெளியிடு கிறார்கள். நல்ல கருத்துகளும் இருக்கின்றன. இந்த நல்ல கருத்துகளை எல்லாம் தங்களின் தீர்ப்புகளாகப் பதிவுசெய்யாமல், வெறும் கருத்துகளாகச் சொல்லிவிட்டு இந்த நீதிதேவன்கள் ஒதுங்கிப்போவதுதான் புரியவில்லை.

@லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.

ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளிவருமா?

நம்மை சஸ்பென்ஸிலும் த்ரில்லிலும் மிதக்கவைப்பதில், தேர்தல் ஆணையத்தை அடித்துக்கொள்ளவே முடியாது. இப்போது, அது நீதிமன்றத்தின் முறை. தேர்தல் ஆணையத்தைவிடக் கூடுதலாக நம்மை த்ரில்லில் ஆழ்த்துவதில் நீதிமன்றம் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் என்றே தோன்றுகிறது. அக்டோபர் 25-ம் தேதிகூட உச்ச நீதிமன்றம் த்ரில்லுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளதே!

@ஆ. மனோகரன், நன்மங்களம், சென்னை.

அடாவடியாகச் சம்பாதித்த சொத்து, அடாவடியாகத்தானே போகும்?

பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லை. அதிரடியாகப் பெருகிக்கொண்டே அல்லவா இருக்கிறது!

@கி.முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

‘ஜெயலலிதா ஆன்மா, ப.சிதம்பரத்தைப் பழிவாங்குகிறது’ என்கிறாரே முதல்வர் பழனிசாமி?

ஏற்கெனவே ஜெயலலிதாவும் பலமுறை சிறையில் இருந்துள்ளார். யாருடைய ஆன்மா அவரைப் பழிவாங்கியது என்பதையும் டாக்டர் பழனிசாமி ஆராய்ந்து சொன்னால், இன்னொரு டாக்டர் பட்டம்கூட கிடைக்கலாம்.

க.சு.ஸ.மழாஹிரி, காயல்பட்டினம்.

அகன்று விரிந்திருக்கும் நம் பாரதத் திருநாட்டைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே அடையாள அட்டை என்பது நடைமுறைக்கு சரிப்பட்டு வருமா (தெரியாமத்தான் கேட்கிறேன், தப்பா எடுத்துக்காதீங்க)?

ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என ஒவ்வொருவரிடமும் பல அட்டைகள் இருந்தாலும், அவை அனைத்திலுமே ஒரே நபர், ஒரே பெயர், ஒரே முகவரி, ஒரே தொடர்பு எண்தானே. அப்படியிருக்கும்போது ஏன் சரிப்பட்டு வராது (தெரிஞ்சுதான் சொல்றேன், தப்பா எடுத்துக்காதீங்க.)

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல், கர்நாடக மாநிலம்.

‘நான் நக்ஸலைட்டாக இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தவன். மீண்டும் நக்ஸலைட்டாக ஆக்கிவிடாதீர்கள்’ என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் ஆவேசம் பற்றி?

நானும் ரௌடிதான்!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘காங்கிரஸ், தன் தவறான கொள்கைகளால் நாட்டைச் சீரழித்துவிட்டது’ என்று இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் பிரதமர் மோடி முழங்குவார்?

காங்கிரஸ் ஆட்சியில்... ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, போஃபர்ஸ் ஊழல் போன்ற பல பிரச்னைகள் இருந்தன. இப்போது பி.ஜே.பி ஆட்சியிலும் ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, அயோத்தி பிரச்னை, ரஃபேல் ஊழல் எனப் பல பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. ஆக, யானைக்கும் பானைக்கும் சரி என்பதாகத்தான் ஆட்சிகள் நகர்கின்றன. ‘மக்களுக்காக மட்டுமே ஆட்சி செய்வேன்’ என உளமார உறுதியேற்று, அதன்படியே பணியாற்றுபவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் நாட்டை சீர்படுத்தவே முடியும். இல்லையென்றால், மாறி மாறிக் குற்றம்சாட்டிக்கொண்டே சீரழிக்கத்தான் செய்வார்கள்.

@யோகா வெங்கட் சத்துவாச்சாரி, வேலூர்.

காங்கிரஸ் மீண்டும் தலையெடுக்குமா?

மோடியை அசைக்கக்கூட முடியாது என்று சொல்லப்படும் அவருடைய குஜராத் மாநிலத்தில் நடந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளைக் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்துள்ளது காங்கிரஸ். இத்தனைக்கும் அங்கே ஆளுங்கட்சி பி.ஜே.பி-தான். அதேபோல், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் ஆளுங்கட்சியான பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியே! ஒருவேளை, தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் சரியாக ‘பல்ஸ்’ பார்த்திருந்தால், பலத்த அதிர்ச்சியாகக்கூட மாறியிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!