அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

‘இருவர் குதிரையில் ஏறினால், ஒருவர் பின்னால்தான் உட்கார வேண்டும்!’ என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாததால்தான்!

குரு சண்முகம், கோத்தகிரி.

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா - இவர்களில் யாரிடமிருக்கிறது அ.தி.மு.க?

எல்லாம் மேல இருக்கிறவர்கிட்ட பத்திரமா இருக்குது... கவலைப்படாதீங்க குரு!

வண்ணை கணேசன், சென்னை.

“20 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதல்வராக ஆனபோது, பிரதமர் ஆவேன் என்று நினைக்கவே இல்லை” என்று சொல்லியிருக்கிறாரே மோடி?

அத்வானியும் இதையேதான் மனசுல நினைச்சிருப்பார்!

ப.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

`சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், சிலர் சிரித்துக்கொண்டே அழுகின்றார், சிலர் அழுதுகொண்டே சிரிக்கின்றார்’ - இதற்கு அரசியல் உதாரணம் கூற முடியுமா?

இதுக்கு, நீங்க இந்தப் பாட்டை ரெட்டைத் தலைமைக்கு நேரடியாவே டெடிகேட் பண்ணிருக்கலாமே ஜெயப்பிரகாஷ்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

ஜெயலலிதா சமாதியில் சசிகலா, “ஐந்து ஆண்டுக்கால பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன்” என்றாரே... அது என்ன பாரம்?

ஏற்கெனவே செய்த சபதமே இதுவரைக்கும் என்னான்னு தெரியலை... இதுல புதுசா பாரம் வேறயா?

கழுகார் பதில்கள்

பி.ஓம்பிரகாஷ், சென்னை-118.

சினிமாவில் ஹீரோ அந்தஸ்து கிடைத்தவுடன் புகழும், கோடிக்கணக்கான வருமானமும் வருகின்றன அல்லவா... அதேபோல எம்.எல்.ஏ., மந்திரி என்கிற அந்தஸ்து கிடைத்தவுடன் என்னென்ன கிடைக்கும்?

அப்போ `இந்த எம்.எல்.ஏ., மந்திரி பதவிகளெல்லாம் மக்களுக்கு சேவை செய்யறதுக்காக அல்ல’ன்னு முடிவே பண்ணீட்டீங்களா!

ஜெயக்குமார், விழுப்புரம்.

ஜி 20 மாநாட்டில், “ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி?

மோடி ஜி... கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கிட்டிருக்கீங்க!

ஜீவன், காரைக்கால்.

கட்சித் தலைமை விவகாரத்தில் எதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இடையே பிரச்னை நீடிக்கிறது?

ரொம்ப சிம்பிள்! ‘இருவர் குதிரையில் ஏறினால், ஒருவர் பின்னால்தான் உட்கார வேண்டும்!’ என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாததால்தான்!

டி.ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.

22 வயது மாணவி, 90 வயது பாட்டி இவர்களெல்லாம் ஊராட்சித் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்களே!?

மக்கள் பணி செய்ய 20 என்ன 90 என்ன, வயது ஒரு தடையே அல்ல என்பதற்கான சான்றுகள்தான் இவை!

கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

ரெய்டுக்கு ஆளானவர்கள், “வழக்குகளைக் கண்டு அஞ்ச மாட்டோம்; சட்டப்படி எதிர்கொள்வோம்” என்கிறார்கள். இதற்கான நிஜமான அர்த்தம்தான் என்ன?

அர்த்தத்தை விடுங்க... இப்பவாவது சட்டப்படி செயல்படுவோம்னு சொல்றாங்களே... அதுவரைக்கும் சந்தோஷம்!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

அஸ்ஸாமின், மாநில பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் பாபேஷ் கலிதா. “பெட்ரோல் விலை லிட்டர் 200 ரூபாயைத் தொட்டால், இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்வதற்கு அஸ்ஸாம் மாநிலத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான அனுமதி அரசிடம் பெறப்படும்” எனத் தெரிவித்திருக்கிறாரே?

உளறல்ங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்... பெட்ரோல் விலை ஏறினா என்ன பண்ணலாம்னுதான் யோசிக்கறாங்களே தவிர, விலையக் குறைக்கற ஐடியாவே இல்லை... அதான் வேதனையா இருக்கு!

கழுகார் பதில்கள்

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

‘காங்கிரஸ் ஒரு புளுகுமூட்டைக் கட்சி’ என்று பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறினார். கபில் சிபல் கட்சிக்கு எதிராகக் குரலெழுப்புகிறார். காங்கிரஸில் மட்டும் ஏன் இப்படி?

‘அட போங்க... இதைக் கேட்டா... எங்க கட்சியிலதான் ஜனநாயகம் இருக்குது’னு சொல்வாங்க!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!