அரசியல்
அலசல்
Published:Updated:

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?
பிரீமியம் ஸ்டோரி
News
கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

நானும் சிலரும் அங்கு போய்ப் பார்த்தபோது, அங்கே சிலர் பழைய கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணுக்கழிவுகளை எரித்துக்கொண்டிருந்தார்கள்.

‘‘சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கழிவுகளை, கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்குள் கொண்டுவந்து கொட்டிச் செல்கின்றனர். தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பைத் தொட்டியா....’’ என்று குமுறுகின்றனர் நெல்லை மாவட்ட மக்கள்.

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள இடைகால் கிராமத்தின் காட்டுப்பகுதியில், அண்மையில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகளைக் கொட்டி, சிலர் எரித்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார், இடைகால் பஞ்சாயத்து துணைத் தலைவரான தர்மராஜ்.

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?
கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

இது பற்றி நம்மிடம் பேசியவர், “எங்கள் ஊர் காட்டுப்பகுதிக்கு கன்டெய்னர் லாரிகள் அடிக்கடி வந்து சென்றன. நானும் சிலரும் அங்கு போய்ப் பார்த்தபோது, அங்கே சிலர் பழைய கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணுக்கழிவுகளை எரித்துக்கொண்டிருந்தார்கள். கேரளாவில், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இவற்றை எரிக்க முடியாது. அதேபோல இறைச்சி, மீன், மருத்துவக் கழிவுகளையும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் புதைக்க முடியாது என்பதால், இங்கே அனுப்பிவிடு கிறார்கள். பணம் கிடைக்கிறது என்பதற்காக லாரி டிரைவர்களும் அவற்றை அள்ளிக்கொண்டு வந்து விடுகிறார்கள். செக்போஸ்ட்களில் இதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளும் பணத்துக்காக அனுமதிப் பதால் கேரளாவின் கழிவுகளெல்லாம் தமிழ்நாட்டுக்குள் வந்து கொட்டப்படுகின்றன. கிராமப் பகுதிகளிலுள்ள அப்பாவி களுக்கு பண ஆசையைத் தூண்டி அவர்களின் சொந்த நிலத்தில் கொட்டி எரித்துவிடுகிறார்கள். இது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்றார் பதைபதைப்புடன்.

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?
கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

கேரள எல்லையான புளியரை செக்போஸ்ட் பகுதியில் கடை வைத்திருக்கும் சிலரிடம் பேசினோம். ‘‘கேரளாவிலிருந்து தினம் தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில், தமிழ்நாட்டுக்குள் கழிவுகள் கொண்டுவரப்படுகின்றன. கடந்த வருடம் கழிவுகளோடு வந்த ஆறு லாரிகளைப் பிடித்த அதிகாரிகள், அந்த லாரிகளை திருப்பி அனுப்ப முயன்றார்கள். ஆனால் பக்கத் திலேயே இருக்கும் கேரள செக்போஸ்ட் அதிகாரிகள் லாரிகளை மறுபடியும் தங்கள் எல்லைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். ஒரு வாரம் பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு கிடைக்காததால் துர் நாற்றம் அடித்த கழிவுகளை யாருக்கும் தெரியாமல் தமிழ்நாட்டு அதிகாரிகளே புதைத்தார்கள்” என்றனர்.

தர்மராஜ்
தர்மராஜ்
ஆகாஷ்
ஆகாஷ்

இந்த விவகாரம் குறித்து தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள ஆகாஷ் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். கவனமாகக் கேட்டவர், “இந்தப் பிரச்னையை எனது கவனத் துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. நீண்டகாலமாக இருப்பதாகச் சொல்லப்படும் இந்த விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார்.