Published:Updated:

ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது!

ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது!
ஈரோட்டில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் கைது!

ஈரோட்டில், 13 வயது சிறுமியை அழைத்துச்சென்று, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், வெள்ளிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி வர்ஷா (13) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர், கடந்த 22-ம் தேதி வீட்டில் இருந்து இரவு 8 மணியளவில் மாயமாகியிருக்கிறார். சிறுமி மாயமானதையடுத்து பதறிப்போன பெற்றோர், அரச்சலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அதன்பேரில், சிறுமியைக் கண்டுபிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, போலீஸார் பல இடங்களில் தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கின்றனர். சிறுமி, திருப்பூர் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைக்க, தனிப்படை போலீஸார் அங்கு விரைந்திருக்கின்றனர். அப்போது, சிறுமி வர்ஷாவுடன் அவரை அழைத்துச்சென்ற விக்னேஷ் (19 ) மற்றும் அவருடைய கூட்டாளிகளான  18 வயது சிறுவன் ரமேஷ் (22) ஆகியோர் போலீஸாரிடம் வசமாகச் சிக்கினர். 

அதையடுத்து, சிறுமி மற்றும் அவருடன் இருந்த மூன்று இளைஞர்களையும் தனிப்படை போலீஸார் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், இளைஞர் விக்னேஷ் என்பவர், திண்டல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்ததும், அப்போது அதே வேனில் பள்ளிக்குச் சென்று வந்த சிறுமி வர்ஷாவுடன், இளைஞர் விக்னேஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும், வர்ஷாவிடம் அவ்வப்போது ஆசைவார்த்தை பேசிவந்த விக்னேஷ், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வீட்டை விட்டு ஓடிவரச் சொல்லியிருக்கிறார். சிறுமியும், நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல், வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அதையடுத்து, தன்னுடைய நண்பர்களின் உதவியால் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச்சென்ற இளைஞர் விக்னேஷ், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். 

 சிறுமியைச் சீரழித்த இளைஞர் விக்னேஷுக்கு, திருமணமாகி கைக்குழந்தை ஒன்றும் இருக்கிறது. அதை மறைத்து ஏமாற்றி, சிறுமியிடம் பழகியிருக்கிறார். சிறுமி வர்ஷா காணாமல்போனதாக ஈரோடு மாவட்டம் அரச்சலூர் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த வழக்கை, போலீஸார் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளனர். மேலும், இளைஞர் விக்னேஷ் மீது ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். மேலும், சிறுமியைக் கடத்துவதற்கு உதவியாக இருந்த விக்னேஷின் கூட்டாளிகளான ரமேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீதும் கடத்தல் வழக்குப் பதிவுசெய்து, போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.