நடப்பு
Published:Updated:

இண்டஸ்இண்ட், கோட்டக் இணைப்பு உண்மையா? - நடப்பது என்ன..?

இண்டஸ்இண்ட்,
கோட்டக்
இணைப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
இண்டஸ்இண்ட், கோட்டக் இணைப்பு

இந்த இணைப்பு உறுதியானால், அதிக சொத்துகளைக் கையாளும் நான்காவது பெரிய தனியார் வங்கியாக கோட்டக் மாறும்!

பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டுவரும் சூழலில் தற்போது இரு தனியார் வங்கிகள் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்கி யிருப்பதாகச் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இண்டஸ்இண்ட் வங்கியைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள கோட்டக் மஹிந்திரா வங்கி திட்டமிட்டி ருப்பதாகப் பரவிய செய்திதான் இந்தப் பரபரப்புக்குக் காரணம்.
இண்டஸ்இண்ட், கோட்டக் இணைப்பு உண்மையா? - நடப்பது என்ன..?

1994-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இண்டஸ்இண்ட் வங்கியின் 14.5% பங்குகள் ஹிந்துஜா சகோதரர்கள் வசம் உள்ளன. நிறுவனர்களுக்கு இடையே உள்ள கருத்துவேறுபாடு காரணமாக இந்த நிறுவனப் பங்குகளை விற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கோட்டக் மஹிந்திரா வங்கியின் சந்தை மதிப்பு ரூ.2.75 லட்சம் கோடி. மாறாக, இண்டஸ்இண்ட் வங்கியின் சந்தை மதிப்பு சுமார் ரூ.50,000 கோடி மட்டுமே. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 60% அளவுக்கு இந்தப் பங்கில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த இணைப்பு உறுதியானால், அதிக சொத்துகளைக் கையாளும் நான்காவது பெரிய தனியார் வங்கி என்னும் பெயரைக் கோட்டக் மஹிந்திரா வங்கி எட்டும். இரு வங்கிகள் இணையும்பட்சத்தில் 3,511 கிளைகள் கொண்ட வங்கியாக கோட்டக் வங்கி உருவெடுக்கும்.

ஆனால், இண்டஸ்இண்ட் வங்கி இந்தச் செய்தியை மறுத்திருக்கிறது. உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நாம் இன்னும் சில காலம் பொறுமை காப்பது அவசியம்!