
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

‘வீடு தேடி வரும் நறுக்கப்பட்ட காய்கறிகள்’ - ‘ஆவின்’ பாணி... 500 கோடி!
மாம்பழம், புளிக்கு அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய வளம் கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், Broccoli போன்ற English காய்கறிகள்!
பொதுவாக, குளிர் அதிகமாக இருக்கும் பகுதிகளிலேயே இந்த வகைக் காய்கறிகள் நன்றாக விளையும். தமிழ்நாட்டில் ஊட்டியை அப்படி முன்னுதாரணமாகச் சொல்லலாம். அதற்கு அடுத்து English காய்கறிகள் அதிகமாக விளைவது கிருஷ்ணகிரியில்தான். 30 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான வெப்பநிலையில் நல்ல உயர்தரமான, ஆரோக்கியமான A1 English Vegetables கிருஷ்ணகிரியில் விளைகின்றன. தளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி பகுதி மக்களுக்கு இந்தக் காய்கறிகள்தான் பிரதான தொழில். அதிகாலை நேரத்தில், நெற்றியில் டார்ச் லைட்டைக் கட்டிக்கொண்டு அறுவடைக்குச் செல்லும் மக்களை அங்கே அடிக்கடி பார்க்க முடியும்.
கிருஷ்ணகிரியில் மொத்தமாக 90,000 டன் அளவுக்கு English காய்கறிகள் விளைகின்றன. இவற்றைப் பெரும்பாலும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை சந்தைக்கு Loose-ல் கொண்டுவந்து விற்றுவிடுகிறார்கள் விவசாயிகள். கேரட் 1 கிலோ 50 ரூபாய்க்குப் போகும். பீன்ஸ் 1 கிலோ 80 ரூபாய்க்குப் போகும். காலிஃபிளவர் 1 கிலோ 50 ரூபாய்க்குப் போகும். முட்டைக்கோஸ் 1 கிலோ 25 ரூபாய்க்குப் போகும். ஆக மொத்தம், எல்லாக் காய்கறிகளுமே விவசாயிகள் காசைச் சுருக்குப்பையில் எடுத்துச்செல்லும் அளவுக்கே விலைபோகும். எனவே, வேறு மாதிரி சிந்திக்க வேண்டும். அந்தக் காய்கறிகளுக்கு உச்சபட்ச மதிப்பு கிடைக்கும் வகையில் அந்தச் சிந்தனை இருக்க வேண்டும். அப்படிச் சிந்தித்து, நானும் என் அணியினரும் வந்து சேர்ந்த இடம், ‘Ready to use’ Vegetables to Households!

எப்போதுமே காய்கறிகளை வெட்டி நறுக்குவதுதான் சமையலின் மிகப்பெரிய மற்றும் சிரமமான வேலை. முக்கியமாக, English காய்கறிகளை வெட்டாமல் பயன்படுத்தவே முடியாது. குழம்புக்கு, பொரியலுக்கு, துரித உணவுக்கு என ஒவ்வொரு வடிவமாக வெட்ட வேண்டும். எனவே, Ready to use Vegetables-ஐ இயல்பாகவே பெரும்பாலானோர் விரும்புவார்கள். அடுத்து, இந்தக் காய்கறிகளை நீண்ட நாள் Shelf Life கொண்டதாகவும் நாம் Pack செய்ய முடியும். கிருஷ்ணகிரியின் மொத்த English காய்கறிகள் விளைச்சலை அப்படியே Ready to use Vegetables-ஆக நாம் மதிப்புக்கூட்டல் செய்துவிடலாம். இதை நிறைவேற்ற, ஒரு நவீன தொழிற்சாலையை நாம் தேன்கனிக்கோட்டை அல்லது தளி வட்டாரத்தில் அமைக்க வேண்டும். அந்தத் தொழிற்சாலை எல்லாவிதத்திலும் நவீன இயந்திரங்களைக்கொண்டதாகவும், ஊழியர்களுக்கு ID Card, Uniform, Monthly Salary Slip என அனைத்தும் அளித்து மதிப்பை உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும்.
இனி தொழிற்சாலையில் Pack செய்யப்பட்ட காய்கறிகளை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் முறையாகக் கொண்டுசேர்ப்பது எப்படி என்பதைப் பார்க்க வேண்டும். இங்கே நமக்கு ஆவினின் கட்டமைப்பு சரியாக உதவும். I bet. ஆவின்தான் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த Supply chain network!
ஏனென்றால், சில நாள்களுக்கு மட்டுமே Shelf Life கொண்ட பாலையே மிகச்சரியாக, தமிழ்நாட்டின் கடைக்கோடி வீடுகளுக்கும் கொண்டு சேர்த்துவருகிறது ஆவின். அந்த அளவுக்கு ஆவினிடம் வாகனங்கள், Checking Points, Distribution Points என அத்தனை வசதிகளும் இருக்கின்றன. கிட்டத்தட்ட அது ஒரு Conveyor Belt-போல. செங்கல்லை வைத்தாலும் போகும், வேறு எந்தப் பொருளை வைத்தாலும் போகும். நாம் ‘Ready to use Vegetables’-ஐ வைப்போம். சிறப்பாகவும் சீராகவும் ஒவ்வொரு வீட்டுக்கும் கிருஷ்ணகிரியின் காய்கறிகள் சென்று சேரும்.
Ready to use English Vegetables-ன் சந்தை விலை 100 ரூபாய். கிருஷ்ணகிரியில் 90,000 டன் English காய்கறிகள் கிடைக்கின்றன. இதில் 50,000 டன் அளவுக்கான காய்கறிகளை நாம் Ready to use காய்கறிகளாக மாற்றலாம். ஏனென்றால், English காய்கறிகளில் Wastage குறைவுதான். 50,000 டன் காய்கறிகளிலிருந்து 5 கோடி Ready to use பாக்கெட்களை உண்டாக்க முடியும். ஒரு Ready to use பாக்கெட்டின் சந்தை விலை 100 ரூபாய். இதை வைத்துக் கணக்கிட்டால், ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வருமானத்தை நாம் கிருஷ்ணகிரியில் உருவாக்க முடியும்.

English காய்கறிகளுக்கு அடுத்தபடியாக மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, சிறுதானியங்கள் போன்றவையும் கிருஷ்ணகிரியில் கிடைக்கின்றன. ஆனால், அவை மிகப்பெரிய அளவில் இல்லை. ரோஜாவுக்கு மட்டும் ஏற்கெனவே `கனவு ஓசூர்’ அத்தியாயத்தில் காஷ்மீர் துலிப் கார்டனைப் போன்ற ரோஜாப் பூங்காவைப் பரிந்துரைத்திருக்கிறேன். மேலும், இதுவரை ரோஜாவை மிகச்சரியாகவே கிருஷ்ணகிரி விவசாயிகளும் அதிகாரிகளும் மார்க்கெட் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. குறைகளைச் சொல்லும்போது நிறைகளையும் சொல்லியாக வேண்டும்தானே! ஆகவே, இனி விவசாயத்துக்கு அடுத்த கிருஷ்ணகிரியின் இரண்டு முக்கிய வளங்களான கிரானைட் மற்றும் பர்கூர் ஜவுளிக்கு நகர்வோம்.
கிரானைட் தொழிற்சூழலை அரசு கண்காணிக்க வேண்டும்!
முதலில் கிரானைட்! ஒன்று தெரியுமா... கிருஷ்ணகிரிக்கான பெயர்க் காரணமே கிரானைட் வளத்திலிருந்துதான் வந்தது. அதாவது, ‘கிருஷ்ண’ என்ற வடமொழிச் சொல்லுக்கு, `கறுப்பு’ என்று பொருள். கிரி என்றால் மலை. கறுப்பு மலைகள் அதிகம்கொண்ட பகுதி என்பதால், ‘கிருஷ்ணகிரி’ என்ற பெயர் ஏற்பட்டது. இந்தப் பெயர்க் காரணத்துக்கு ஏற்றபடியே, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் Black, Paradise, Red multi colour, Dakota போன்ற பலவகை கிரானைட் கற்கள் 20,000 டன்கள் அளவுக்குக் கிடைக்கின்றன. இந்த கிரானைட்டை வெட்டி எடுப்பதற்காக 100-க்கும் அதிகமான கிரானைட் குவாரிகளும் இருக்கின்றன. Simply, It’s a mini KGF inside Tamilnadu territory. ஆனால், இவ்வளவு வளமிருந்தும் கிரானைட்டிலிருந்து கிருஷ்ணகிரிக்குக் கிடைக்கும் வருமானம் என்பது சில கோடி ரூபாய் அளவுக்கே உள்ளது. நான் சொல்வது வெள்ளைக் கணக்கு. கறுப்பு லட்சக்கணக்கான கோடிகளில்கூட இருக்கலாம்!

கிருஷ்ணகிரி கிரானைட் தொழிற்சூழலின் முதன்மையான பிரச்னையாக நான் பார்ப்பது, குவாரிகளின் சண்டித்தனம். என்னிடம் பேசிய கிருஷ்ணகிரி பொதுமக்கள் சிலர், “ஊருக்கு ஒரு கிரானைட் குவாரி இருக்கிறது. நினைத்த நேரத்தில் மலைக்கு வெடி வைக்கிறார்கள். இரவு நேரங்களில்கூட கிரானைட் கல் ஓட்டுகிறார்கள். யாரும் அரசின் விதிமுறைகளைத் துளியளவுக்கு மதிப்பதில்லை” என்று புகார் சொன்னார்கள். `மக்கள் சொல் மகேசனின் சொல்’ என்று அண்ணாவே சொல்லியிருக்கிறார். எனவே, அவர்களின் கருத்துகளின்படி பார்த்தால், கிருஷ்ணகிரி கிரானைட் தொழிற்சூழலை நிறையவே அரசு கண்காணிக்க வேண்டியிருக்கிறது. முதல் தேவை, மிக கறாரான கிரானைட் தொழிற்கொள்கை. அந்தக் கொள்கை குவாரி முதலாளிகள் யாராக இருந்தாலும் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டதாக இருக்க வேண்டும். இரண்டாவது தேவை, கிரானைட் வெட்டுவது, விற்பது உள்ளிட்ட அத்தனையையும் கண்காணிக்க ஒரு சிறப்பு கண்காணிப்புக்குழு.

பிரமாண்ட கிரானைட் பார்க்!
இரண்டாவது பிரச்னையாக நான் பார்ப்பது, வெட்டியெடுக்கப்படும் கிரானைட்டுகளை உள்ளூரிலேயே பாலிஷ் செய்து Product-ஆக மாற்றாமல், கற்களை அப்படியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுவது. இங்கும் அதே Raw Material ஆதங்கத்தைப் பொருத்திக்கொள்ளுங்கள். பெருமளவு கிரானைட்டை Raw Material-ஆக வெளிநாட்டுக்கு அனுப்புகிறோம் நாம். இதோ, இந்த நிமிடம்கூட கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் வாட்டர் டேங்க் அளவு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும். விதிவிலக்காகச் சில நிறுவனங்கள் கிரானைட்டை Polish செய்து பீஸ்கள் மற்றும் Product-களாக விற்கவும் செய்கிறார்கள். ஜெகதேவியில் அப்படி நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் பெரும்பாலும் நியாயமான விலை வைத்து விற்பதில்லை. நிறைய நிறுவனங்கள் Broker-களை நியமித்து, Mofussil bus-க்கு ஆள் பிடிப்பதைப்போல வாடிக்கையாளர்களை அழைத்துவந்து அதீத பணம் பறிக்கிறார்கள். எனவே, கிருஷ்ணகிரியில் ஒழுங்கான கிரானைட் Value Chain-ஐ ஏற்படுத்துவதற்காகவும், கிரானைட் சார்ந்து உலக அளவில் இருக்கும் சந்தை வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்துவதற்காகவும், ஒரு பிரமாண்ட கிரானைட் பார்க்கை (Granite Park) கிருஷ்ணகிரியில் அரசு தொடங்க வேண்டும்!
(இன்னும் காண்போம்)