Published:Updated:

தேர்வுக்கு 11 பேனாக்களில் பிட்; பேராசிரியைக்கு ஷாக் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவர்- வைரலாகும் போட்டோஸ்

வித்தியாசமான முறையில் பிட் அடித்த மாணவர்
News
வித்தியாசமான முறையில் பிட் அடித்த மாணவர் ( ட்விட்டர் )

ஸ்பெயினில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் பேனாவின் மேற்பகுதியில் பிட் எழுதியது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

பொதுவாகவே பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேர்வு என்றாலே ஒரு சின்ன பயம் இருக்கும். தேர்வில் பிட் அடிப்பவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதுவார்கள் அல்லது மற்றவர்களைப் பார்த்து அப்படியே எழுதுவார்கள். மேலும், சிலர் புத்தகங்களிலிருந்து கிழித்தெடுத்த பகுதிகளை ரகசியமாக வைத்துக்கொண்டு பார்த்து எழுதுவார்கள். இவ்வளவு ஏன்... ஒரு சிலர் கை கால்களிலெல்லாம் எழுதிச் சென்று பிட் அடிப்பதைக்கூட பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், ஸ்பெயினிலுள்ள சட்டக் கல்லூரியொன்றில் மாணவர் ஒருவர், தேர்வின்போது பிட் அடிப்பதற்காக பேனாவில் மிகச் சிறிய எழுத்துகளில் ‘நோட்ஸ்’ எழுதியிருக்கிறார்.

தேர்வு கண்காணிப்பு அறையில் இருந்த பேராசிரியர் ஒருவர் இந்த மோசடியை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து, மாணவனிடமிருந்து பேனாக்களைக் கைப்பற்றியிருக்கிறார்.

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த யோலான்டா என்ற சட்டக் கல்லூரி பேராசிரியை இந்த `பிட் நோட்ஸ்' கொண்ட பேனாக்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், `சில வருடங்களுக்கு முன்பு ஒரு தேர்வின்போது மாணவர் ஒருவரிடமிருந்து கைப்பற்றினோம். அந்த மாணவர் 11 பேனாக்களில் பாடம் முழுவதையும் எழுதியிருந்தார். என்ன ஒரு கலைநுணுக்கம்' என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.