Published:Updated:

ஜு.வி. நூலகம் - நிகழ்காலம் (தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம்)

ஜு.வி. நூலகம் - நிகழ்காலம் (தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம்)

பிரீமியம் ஸ்டோரி

தோலும் தோளும் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. சுட்டெரிக்கும் வெயில் பருவ மாற்றத்தை மட்டுமல்ல, இயற்கையின் கோபத்தையும் நமக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அந்த யதார்த்தத்தை இன்னமும் மக்கள் உணர்ந்தது மாதிரித் தெரியவில்லை. அதை உணர்த்துவதற்காகப் பத்திரிகையாளர் பொன்.தனசேகரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

ஜு.வி. நூலகம் - நிகழ்காலம் (தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம்)

 ''சூழலியல் அமைப்புகளின் சீர்குலைவினால் 4,000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் இருந்த சுமேரிய நாகரிகம் அழிந்தது என்ற செய்தியைப் படித்தபோது சற்று வியப்பாக இருந்தது. இயற்கைச் சீற்றத்தினால் அந்த நாகரிகம் அழிந்திருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், மனிதச் செயல்பாடுகளால் பாசனக் கால்வாய்களின் உப்புத்தன்மை அதிகரிப்பின் விளைவுகள், அந்த நாகரிகத்தை அழிவை நோக்கிச் செலுத்தியதாக வரலாற்று தொல்லியல் ஆதாரங்கள் சொல்கின்றன' என்ற ஆதங்கத்தின் விளைவே இந்தப் புத்தகம். 4,000 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய நிலைமை என்றால், இன்று பேரழிவுச் செயல்கள் பெரிய மலையளவு குவிந்துள்ளன. தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதி மீனவர்களுக்கு, வருவாய் தந்துவந்த குதிப்பு மீன்கள் காணாமல் போய்விட்டன. நீலகிரி மலைப்பகுதியில் கிடைக்கும் தேன் அளவு குறைந்துவிட்டது. மீன்குஞ்சுகளின் வாழ்விடமாக இருக்கும் பவளப் பாறைகள் அழிந்து வருகின்றன. கடல் நீர் மட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் கடலோர வேளாண்மை பாதிக்கப்படுகிறது. சுனாமியைத் தடுக்கும் அலையாத்திக் காடுகள் சுருங்கி வருகின்றன. பருவ மழை ஒவ்வோர் ஆண்டும் ஏமாற்றி வருகிறது. அது நிரந்தர வறட்சியை நோக்கித் தள்ளுகிறது... என்பது போன்ற பல்வேறு அபாய எச்சரிக்கைகள் இதில் இருக்கின்றன.

மிக முக்கியமானது, ''வறட்சியை எதிர்கொள்ளக்கூடியதாகவும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியதாகவும் இருக்கக்கூடிய பாரம்பர்ய நெல் ரகங்களை அழியாமல் காக்க வேண்டுமானால், அந்த விதைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தேவை. அதைப் பயிரிடும் விவசாயிகளுக்கு அந்த விளைபொருட்களை விற்பதற்கான வழிமுறைகளும் தேவை. ஏற்கெனவே பாரம்பர்யமாக இருந்த பல நெல் வகைகள் காணாமல் போய்விட்டன. வரும்முன் காக்க வேண்டியதில் அரசுக்கும் பங்கு இருக்கிறது' என்கிறார் பொன்.தனசேகரன். பொன்னான வார்த்தைகள். அரசும் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் சேர்ந்து செயல்பட வேண்டிய அவசியம் இதன்மூலம் உணர்த்தப்படுகிறது.

''ஒவ்வொரு மனிதனின் தேவையைப் பூர்த்திசெய்ய பூமி போதுமான அளவு வழங்குகிறது... ஆனால், மனிதனின் பேராசையைப் பூர்த்திசெய்ய அல்ல' என்றார் மகாத்மா காந்தி. வாழும் ஆசை இருக்கட்டும். பேராசை வேண்டாம்.

வெளியீடு: கார்த்திலியா புக்ஸ், பி.எஃப்4, பத்திரிகையாளர் குடியிருப்பு, ஸ்ரீனிவாசபுரம்,

திருவான்மியூர், சென்னை41. விலை:

ஜு.வி. நூலகம் - நிகழ்காலம் (தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம்)

90

புத்தகன்

பொன்.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு