Published:Updated:

`பத்திரிகையாளர்களுக்கு மோசமான ஆண்டு 2018' - அதிர்ச்சியூட்டும் ஆர்.எஸ்.எஃப் ஆய்வு முடிவு

காஷ்மீரின் முன்னாள் பா.ஜ.க அமைச்சர் லால் சிங், ``காஷ்மீர் பத்திரிகையாளர்கள் தங்கள் எல்லையை மீறாமல் எழுத வேண்டும்; மீறினால் சுஜாத் புகாரியின் நிலைதான் ஏற்படும்" என்று பொது நிகழ்ச்சி ஒன்றிலேயே பேசி சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

`பத்திரிகையாளர்களுக்கு மோசமான ஆண்டு 2018' - அதிர்ச்சியூட்டும் ஆர்.எஸ்.எஃப் ஆய்வு முடிவு
`பத்திரிகையாளர்களுக்கு மோசமான ஆண்டு 2018' - அதிர்ச்சியூட்டும் ஆர்.எஸ்.எஃப் ஆய்வு முடிவு

80 பத்திரிகையாளர்கள் படுகொலை, எழுதிய, வெளிக்கொணர்ந்த உண்மைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட 348 பத்திரிகையாளர்கள், பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 60 பத்திரிகையாளர்கள் - பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைகளின் உச்சம் 2018-ம் ஆண்டு எனத் தெரிவித்திருக்கிறது எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்களுக்கான அமைப்பான ஆர்.எஸ்.எஃப் (Reporters Without Borders) கடந்த பத்து ஆண்டுகளில், இந்த வன்முறைகளில் இருக்கும் கொடூரத்தன்மையும், குற்றங்களுக்குப் பின்னுள்ள திட்டமிடல்களும் மிகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது இந்த அரசு சாரா அமைப்பு.

``பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகை நிறுவனங்களுக்கும் எதிரான இத்தகைய வன்மம், நேர்மையற்ற, சார்புத்தன்மை கொண்ட அரசியல்வாதிகளாலும், மதத் தலைவர்களாலும், பெருமுதலாளிகளாலும் வளர்க்கப்படுகிறது. துருக்கியில் இருக்கும் சவுதி அரேபியாவின் தூதரகத்துக்குச் சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, ஸ்லோவாக்கைச் சேர்ந்த தரவுப் பத்திரிகையாளர் ஜேன் குசியாக் ஆகியோரின் படுகொலைகள், பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் எவ்வளவு மோசமான எல்லைக்கும் செல்வார்கள் என்பதைக் காட்டியிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் ஆர்.எஸ்.எஃப் நிறுவனத் தலைவர் கிறிஸ்டோஃப் டெலோர்.

சில மாதங்களுக்கு முன்பு, 'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி மர்ம நபர்களால் காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டார். `சுஜாத் புகாரியைக் கொன்றது யார்?' என்ற விசாரணை நடந்துகொண்டிருக்கும் வேளையில், காஷ்மீரின் முன்னாள் பா.ஜ.க அமைச்சர் லால் சிங், ``காஷ்மீர் பத்திரிகையாளர்கள் தங்கள் எல்லையை மீறாமல் எழுத வேண்டும்; மீறினால் சுஜாத் புகாரியின் நிலைதான் ஏற்படும்" என்று பொது நிகழ்ச்சி ஒன்றிலேயே பேசி சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.