Published:Updated:

“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”

“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”
பிரீமியம் ஸ்டோரி
“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”

“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”

“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”

“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”

Published:Updated:
“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”
பிரீமியம் ஸ்டோரி
“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”

‘இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக...’ திருப்புமுனைத் தீர்ப்பினை வழங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். விடுதலைப் புலிகளின் போராட்டக் களம் பற்றிய சம்பவங்களைத் தொகுத்து, பழ. நெடுமாறன் எழுதியிருக்கும் ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற தலைப்பிலான புத்தகங்களை அழிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”

‘‘1994 ஆம் ஆண்டு, ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்று ஒரு நூல் எழுதினேன். தமிழீழப் போராட்டத்தில், உயிர் துறந்த திலீபனில் ஆரம்பித்து கிட்டுவின் உயிர்த் தியாகம் வரை தமிழீழப் போராட்டங்களைத் தொகுத்து எழுதப்பட்டது அந்த நூல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலையாள நாவல் `மீசா’வுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘ஓர் எழுத்தாளரின் எழுத்தை மதிப்பீடு செய்து அதைப் பற்றி முடிவு செய்யும் உரிமை வாசகர்களுக்கே உண்டு. நடுவில் யாரும் குறுக்கிடுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. புத்தகங்களுக்குத் தடை போடுவதென்பது அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற ஜனநாயக உரிமைகளை அடியோடு பறிப்பதாகும்’ என்று திட்டவட்டமாகக் கூறி, அந்தப் புத்தகத்துக்குத் தடை போட மறுத்துவிட்டது.

இதுவரை இந்திய நீதிமன்றங்கள் எதிலும், புத்தகத்தை அழிப்பதற்கு உத்தரவு போட்டதே கிடையாது. அந்த வகையில், முதன் முறையாக அந்தப் பெருமையை எனது புத்தகத்துக்கு அளித்த நீதிபதிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!’’ - ஆதங்கத்தை மறைக்கும் புன்னகையினூடே பேசுகிற பழ.நெடுமாறனிடம் என் கேள்விகளை முன்வைத்தேன்.

‘‘இந்தத் தீர்ப்பில், தவறு என்று எதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள்?’’

‘‘ ‘இந்திய அமைதிப்படையை இந்தப் புத்தகத்தில் நெடுமாறன் குற்றம் சாட்டியிருக்கிறார். இது பொதுமக்களின் மத்தியில், இந்திய ராணுவத்தின் மீது வெறுப்பை உண்டாக்கும்’ என்பதுதான் அரசு வழக்கறிஞரின் வாதம். இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற, லெப்டினன்ட் ஜெனரல் ஹர்கரன்சிங் மற்றும் சில தளபதிகள் ‘இலங்கையில் என்ன நடந்தது...’ என்பதைப் பற்றிப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதில், ‘புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது இந்தியத் தூதுவராக இருந்த தீட்ஷீத். இந்தியாவின் அரசியல் தலைமை இந்தப் பிரச்னையை சரியான முறையில் கையாளாததால்தான், புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது’ போன்ற உண்மைகளை எழுதியிருக்கிறார்கள். அதைத்தான் இந்தப் புத்தகத்தில் நானும் மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறேன். ஆனால், இந்தக் கருத்தையெல்லாம் நானே சொன்னதாகக் கருதி, இந்தப் புத்தகங்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.’’

‘‘ ‘தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவானதொரு கண்ணோட்டத்தைப் பொதுமக்களிடையே இந்தப் புத்தகம் ஏற்படுத்தக்கூடும்’ என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறதே...?’’


‘‘உண்மை. விடுதலைப் புலிகளுக்கு அன்றும் சரி... இன்றும் சரி... நாளையும் சரி... தொடர்ந்து தமிழகத்தில் ஆதரவு திரட்டுவேன்... திரட்டிக் கொண்டுமிருக்கிறேன்.

ஏற்கெனவே இதற்காகத் தடா, பொடா போன்ற சட்டங்கள் என்மீது பாய்ந்தன. என்னைப் போலவே வைகோமீதும் எங்கள் தோழர்கள்மீதும் பொடா சட்டத்தைப் பயன்படுத்தி ஒன்றரை ஆண்டுகள் சிறையில் தள்ளினார்கள். ஆனால், இதுகுறித்த வழக்கில், ‘தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதோ, எழுதுவதோ குற்றமல்ல. அவர்களுக்கு ஆயுத ரீதியாகவோ பண ரீதியாகவோ உதவி செய்வதுதான் குற்றம்’ என்றுதான் உச்ச நீதிமன்றமும் பொடா மறு ஆய்வுக் குழுவும் தீர்ப்பளித்து எங்களை விடுதலை செய்தார்கள். இப்போது மீண்டும் அதே குற்றச்சாட்டைச் சொல்வது எப்படிச் சரியாகும்?’’

“சாதியை ஆதரிப்பவன் தமிழ்த் தேசியவாதியே அல்லன்!”

‘‘இறுதிப்போரில், இந்திய அரசின் உதவி பற்றி சமீபத்தில், ராஜபக்‌சே பேசியிருப்பது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை பாதிக்குமா?’’

‘‘சுப்பிரமணியன் சுவாமிதான் ராஜபக்‌சேவை டெல்லிக்கு அழைத்துவந்தார். ‘காங்கிரஸ் கட்சிதான் எங்களுக்கு ராணுவ ஆலோசனை, ஆயுத உதவி எல்லாம் செய்தது’ என்று ராஜபக்‌சேவை இந்த நேரத்தில் சொல்லவைத்ததன் பின்னணியும் ஆழமான உள்நோக்கம் கொண்டது.

காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டுகிற மோடி அரசும் இப்போது அதைத்தானே செய்துவருகிறது... இன்றைக்கும் சிங்கள ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பதோடு ஆயுத உதவி, பொருளாதார உதவியும் செய்யப்படுகிறதே.

இந்தியாவைச் சுற்றியிருக்கிற நாடுகளில் ஒன்றுகூட இந்தியாவின் நட்பு நாடாக இல்லை. ஈழத் தமிழர்கள்தான் நட்பு மக்களாக விளங்குகிறார்கள். ஆனால், ஈழத்தமிழர்களை ஒழிப்பதற்கு இந்திய அரசுகள் சிங்கள அரசுக்குச் செய்துவரும் உதவிகள் என்பது, யானை தன்னுடைய தலையில் மண்ணைப் போட்டுக் கொள்வதற்கு சமமானது.

‘சீனாவின் பிடியிலிருந்து இலங்கையைத் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற நோக்கில், இந்திய அரசு, ஈழத் தமிழர்களைப் பலிகடாவாக்கி இந்த உதவிகளைச் செய்துவருகிறது. ஆனால், இந்த முயற்சியில் இந்தியாவின் ராஜதந்திரம் படுதோல்வி அடைந்துவிட்டது. சீனாவின் பிடி இலங்கையில் இறுகிவிட்டது.’’

‘‘தமிழகத்தில், ஈழ ஆதரவாளர்களான வைகோ - சீமான் இருவரும் எதிரெதிர் துருவங்களாக மோதிக்கொள்ளும் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘அரசியல் கட்சிகளுக்குள் போட்டியும் கருத்து மோதல்களும் இருப்பது, ஜனநாயக முறையில் தவிர்க்க முடியாதது. ஆனால், ஈழத் தமிழர், காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற பொதுப்பிரச்னைகளில், கட்சி எல்லைக்கோடுகளுக்கு அப்பால், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தமிழர்களும் ஒன்றுசேர்ந்து நின்றால்தான் நாம் வெற்றிபெற முடியும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். இதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.’’

‘‘தமிழ்ச் சூழலில் உள்ள சாதிய வேறுபாடுகள் குறித்து இங்குள்ள தமிழ்த்தேசிய இயக்கங்கள் உரத்துப் பேசத் தயங்குவது ஏன்?’’

‘‘தமிழ்த்தேசியம் என்று சொன்னாலே, சாதிய மத வேறுபாடுகளற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவதுதான். தமிழர்களுக்கும் சாதிகளுக்கும் எப்போதும் தொடர்பு இருந்ததே இல்லை. சாதி என்ற சொல்லே வடமொழிச் சொல்தான். தொல்காப்பியர் தன் நூலில், புல், பூண்டு, மரம் போன்றவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காகத்தான் சாதியைப் பயன்படுத்தியிருக்கிறாரே தவிர... மனிதர்களை வேறுபடுத்துவதற்கு அவர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆக, நமக்குச் சாதியே கிடையாது. சாதி என்பதே பிற்காலத்தில் புகுத்தப்பட்டவை.உண்மையான தமிழ்த்தேசியவாதி, சாதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான்!’’

‘‘தமிழகத்தில், ‘தூய தமிழ்த்தேசியம்’ பேசுவோர்தான் ‘தூய சாதிய வாதமும்’ பேசுகிறார்கள்... இப்படியொரு தேசியம் சாத்தியம்தானா?’’

‘‘அது நடைமுறைக்கே சாத்தியமற்றது!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஆன்மிகவாதிகளான வல்லபபாய் படேல், ராஜேந்திர பிரசாத் போன்றாரோடு நேரு, காமராஜர் போன்ற ஆன்மிக நம்பிக்கை அற்றவர்கள், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற சோஷலிஸ்ட்டுகள், சோஷலிஸத்தையே கடுமையாக எதிர்த்த மொரார்ஜி தேசாய் என அனைவரையும் ஒன்றிணைத்து சுதந்திரப் போராட்டத்தை நடத்தியதால்தான் காந்தியால் வெற்றிபெற முடிந்தது. அதேவழியில், அனைவரையும் ஒருங்கிணைத்துத்தான் தமிழ்த் தேசியத்தையும் வெற்றி பெறச் செய்யமுடியும்!’’

‘‘வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் கூட்டமைப்பின் ஆதரவு காங்கிரஸுக்கா அல்லது பா.ஜ.க-வுக்கா?’’

‘‘ஈழத்தமிழர் பிரச்னையில் மட்டுமல்லாமல், தேசிய இனவாதப் போராட்டங்களை ஒடுக்குவதிலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான். உண்மை இப்படியிருக்க... இவர்களில் யாரை நாம் ஆதரிக்க முடியும்? அப்படி ஆதரித்தால், அது கொள்ளிக் கட்டையால் நம் தலையை நாமே சொறிந்து கொள்ளுவதாகத்தான் அமையும். அதனால் யாருக்கும் எங்கள் ஆதரவு கிடையாது!’’

‘‘வருகிற நவம்பர் 26 பிரபாகரன் பிறந்தநாள்! இப்போதும் அவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்புகிறீர்களா?’’


‘‘நிச்சயமாக!’’

‘‘ ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று இன்றளவிலும் நாம் பேசிவருவது, அவரது புகழைச் சிறுமைப்படுத்துவதாகும்’ என்று தோழர் தியாகு கூறுகிறாரே..?’’

‘‘அது அவருடைய கருத்து. எந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் சில பின்னடைவுகள் ஏற்படும். ஆனால், அந்தப் போராட்டத்தை நடத்தவேண்டிய முக்கியமான தலைவர், உரிய காலத்தில், உரிய நேரத்தில் மீண்டும் முன்னெடுக்கும்போதுதான் வெற்றி பெற முடியும். அதற்கு சர்வதேசச் சூழ்நிலை மாற வேண்டியது அவசியம். அந்த மாற்றம் வரும்போது பிரபாகரன் வெளிப்படுவார்... போராட்டத்தை முன்னெடுப்பார்!’’

த.கதிரவன் - படங்கள்: தி.குமரகுருபரன்