Published:Updated:

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் இப்படிதான் இருக்குமா?

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் இப்படிதான் இருக்குமா?
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் இப்படிதான் இருக்குமா?

ஒரு மனநல மருத்துவமனை எப்படியிருக்கும்? மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளே எப்படி இருப்பார்கள்?  தொளதொளப்பான பச்சை நிற உடை, அவர்கள் காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கும், நங் நங் என சத்தமிட்டபடி தலையை தட்டிக் கொண்டிருப்பார்கள், சுவரைப் பிராண்டிக் கொண்டிருப்பார்கள் என்கிற சித்திரம்தான் நமக்கு எழும். இப்படியொரு அபிப்ராயம் நமக்கு திரைப்படங்கள் மூலமாகவே எழுந்தது எனச் சொன்னால் அது மிகையில்லை.

உண்மையில் ஒரு மனநல காப்பகம் எப்படியிருக்கும் அதிலும், மனநல மருத்துவமனை என்றதும் நம் நினைவுக்கு வருவது கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்தான். வெளியுலகத்துக்குத் தெரியாமல் அங்கே உள்ளே பல விஷயங்கள் நடக்கிறதென்று அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். உள்ளே என்ன நடக்கிறது என, பரபரப்பு தேடும் முயற்சி அல்லாமல், உண்மையைத் தேடும் முயற்சியாக அங்கே செல்வதென முடிவெடுத்தோம். கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் வெளியாட்கள் நுழையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதி.

இப்படியான நிலையில்தான் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு உள்ளே நாம் அனுமதிக்கப்பட்டோம். கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ளே நாங்கள் சந்தித்த மனிதர்கள், கண்ட காட்சிகள் எங்களை நொறுக்கியது. இரும்புக் கதவால் பூட்டப்பட்ட அறையில் உடம்பில் ஆடையின்றி ஆதி மனிதர்களைப் போன்று உள்ளே இருந்த மனிதர்கள், “Daddy, nobody’s recoginze me... nobody’s recoginze me...” என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தந்தையின் சட்டையைப் பிடித்து உலுக்கிய பெண்ணின் அழுகை என பல காட்சிகள் அவற்றையெல்லாம் வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறோம். கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த ஆவணப்படத்தை நீங்கள் பார்ப்பீர்கள் எனில் சகமனிதன் மீது அன்பு செலுத்துவதைவிட வேறெதுவும் பிரதானமே இல்லை என்கிற முடிவுக்கு வருவோம்.