Published:Updated:

ப்ரக்யா தாக்கூரை விமர்சித்த மும்பை மருத்துவர் மீது எஃப்.ஐ.ஆர்

ப்ரக்யா தாக்கூரை விமர்சித்த மும்பை மருத்துவர் மீது எஃப்.ஐ.ஆர்
ப்ரக்யா தாக்கூரை விமர்சித்த மும்பை மருத்துவர் மீது எஃப்.ஐ.ஆர்

மும்பையைச் சேர்ந்த மருத்துவரான சுனில்குமார் நிஷாத் என்பவர் மீது ‘இந்து மதத்துக்கு எதிரான’ ஃபேஸ்புக் பதிவுகளை எழுதியதாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!


கோட்சேவை தேசபக்தர் எனக் கூறிய ப்ரக்யா தாக்கூரை விமர்சித்த மும்பையைச் சேர்ந்த மருத்துவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிந்திருக்கிறது மும்பை காவல்துறை.

ப்ரக்யா தாக்கூரை விமர்சித்த மும்பை மருத்துவர் மீது எஃப்.ஐ.ஆர்

“கோட்சேவை தேசபக்தர் எனச் சொல்லியதற்கு ப்ரக்யா தாக்கூர் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அது வேறு விஷயம். ஆனால், அவரை என்னால் மன்னிக்க முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. ``நாதுராம் கோட்சே அப்போதும், இப்போதும் ஒரு தேசபக்தர்தான். அவரைத் தீவிரவாதி என விமர்சிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தத் தேர்தலில் சரியான பதிலடி கொடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார் போபால் மக்களவை வேட்பாளர் ப்ரக்யா தாக்கூர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ப்ரக்யாவின் கருத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்த பா.ஜ.க தலைமை, 10 நாள்களுக்குள் கட்சித் தலைமைக்கு இந்த சர்ச்சைப் பேச்சுக்காகப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. எனினும், கண்டன அறிக்கையில் தவறாமல் ப்ரக்யாவை பா.ஜ.க உறுப்பினர் என்றும், மக்களவை வேட்பாளர் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

 பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் கண்டனங்களை எதிர்கொண்டதையடுத்து, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருக்கும் ப்ரக்யா, “நான் யாருடைய உணர்வையும் காயப்படுத்த வேண்டும் என நினைக்கவில்லை. யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். காந்தி இந்த நாட்டுக்குச் செய்ததை யாராலும் மறக்க முடியாது. ஊடகங்களால் எனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

 ``பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நானும் இருந்தேன் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ராமரின் மண்ணிலிருந்து ஒரு கறை அகற்றப்பட்டுள்ளது. கடவுள் எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ஹேமந்த் கர்கரே, நான் சாபம் விட்டதால்தான் மரணித்தார்” எனத் தொடர்ந்து தேச விரோத கருத்துகளைத் தெரிவித்து வரும் ப்ரக்யாவின் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக, அவரை விமர்சித்த மும்பையைச் சேர்ந்த மருத்துவரான சுனில்குமார் நிஷாத் என்பவர் மீது ‘இந்துமதத்துக்கு எதிரான’, ‘பிராமணீயத்துக்கு எதிரான’ ஃபேஸ்புக் பதிவுகளை எழுதியதாகக் குற்றம்சாட்டப்பட்டு எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது. மும்பை விக்ரோலி பகுதியில் வசித்து வரும் ஹோமியோபதி மருத்துவரான சுனில்குமார் நிஷாத்தின் மீது புகார் அளித்திருக்கும் ரவீந்திர திவாரி, “நாங்கள் வசிக்கும் பகுதியில் வசிக்கும் இவர், எங்களது மத உணர்வுகளை புண்படுத்துகிறார்’ எனப் புகார் அளித்திருப்பதாகத் தெரியவருகிறது.

“கோட்சேவின் ஆதரவாளர்களாக பா.ஜ.க-வில் பலர் இருப்பது தெளிவாகிறது. கோட்சே தியாகியென்றும், தியாகி ஹேமந்த் கர்கரேவைத் துரோகியென்றும் பேசுகிறார்கள். வன்முறைக் கலாசாரமும் தியாகிகளை அவமதிக்கும் குணமும் பா.ஜ.க-வின் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. பா.ஜ.க தலைமை இந்த பிரச்னையை மறைக்க நினைக்காமல், ப்ரக்யாவைத் தண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா. 
 

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு