Published:Updated:

பதவிக்காலத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு - பிரதமர் பேசிய 10 விஷயங்கள் இவைதான்

அடுத்தமுறை இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு அமித்ஷா உங்களை அனுமதிக்கலாம் என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

பதவிக்காலத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு - பிரதமர் பேசிய 10 விஷயங்கள் இவைதான்
பதவிக்காலத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு - பிரதமர் பேசிய 10 விஷயங்கள் இவைதான்

பிரதமர் மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அவருடனான முதல் செய்தியாளர் சந்திப்பு நேற்று நிகழ்ந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரான ராகுலும் மற்ற கட்சி உறுப்பினர்களும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த அந்தச் செய்தியாளர் சந்திப்பு கடைசியாக நடந்தேவிட்டது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தச் செய்தியாளர் சந்திப்பில், “பிரதமரே உங்களது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் எனும் அவசியமில்லை. நான் பதிலளிக்கிறேன்” என்று ஒரு வாக்கியத்தில் முடித்துவிட்ட பா.ஜ.க தலைவர் அமித்ஷாவை கவனித்தவாறே அமர்ந்திருந்தார் பிரதமர் மோடி. ``வாழ்த்துகள் மோடிஜி. மிகச்சிறந்த செய்தியாளர் சந்திப்பு. செய்தியாளர்கள் முன்பாகத் தோன்றியதே பாதி வெற்றிதான். அடுத்தமுறை இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு அமித்ஷா உங்களை அனுமதிக்கலாம்” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

பதவிக்காலத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு - பிரதமர் பேசிய 10 விஷயங்கள் இவைதான்

செய்தியாளர் சந்திப்பின் இடையிடையே, பிரதமர் மோடி நேற்று பேசிய 10 விஷயங்களின் பட்டியல் இது.

1. செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ``நான் ஒரு ஒழுக்கமான போர்வீரன். கட்சியின் தலைவர்தான் எனக்கு எல்லாம்” என்று பதிலளித்தார் பிரதமர் மோடி.

2. கடந்த ஐந்து வருடங்களாக உங்களுக்கு சேவையாற்ற என்னை அனுமதித்ததற்காக உங்களது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே வந்திருக்கிறேன்.

3. எங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்களை ஆட்சிக்கு வந்ததும் உடனடியாகச் செயல்படுத்துவோம்.

4. அமையவிருக்கும் அரசு உடனடியாகத் தனது பொறுப்புகளைக் கையில் எடுத்துக்கொள்ளும். 

5. பெரும்பான்மையை வென்ற அரசு, மறுபடியும் பெரும்பான்மை வெற்றி பெறுவது நமது நாட்டைப் பொறுத்தவரை சாதாரண விஷயமல்ல. அது நடக்க இருக்கிறது.

பதவிக்காலத்தின் முதல் செய்தியாளர் சந்திப்பு - பிரதமர் பேசிய 10 விஷயங்கள் இவைதான்

6. மக்களுக்கு நன்றி சொல்வதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். சரிவுகளிலும் மகிழ்ச்சியான விஷயங்களிலும் மக்கள் எங்களோடு இருந்திருக்கிறார்கள். பிரசாரம் என்பது மக்களுக்கு நன்றி சொல்வதற்கான வழிதான். உங்கள் வழியாக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

7. சில விஷயங்களைப் பெருமையாகச் சொல்ல முடியும். நமது ஜனநாயகம் உறுதியானது. மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டைப் பற்றி எடுத்துக் கூறுவதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.

8. தேர்தலுக்காக ஐ.பி.எல் விளையாட்டைத் தள்ளிவைத்த காலம் இருந்திருக்கிறது. ஆனால், ஒரு திறமையான அரசு இருக்கும்போது, ரம்ஜான், ஈஸ்டர் கொண்டாட்டங்களோடு சேர்த்தே தேர்தலை நடத்த முடியும்.

9. பிரசாரம் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. எங்கள் பிரசாரத்தைக் குறித்து எவரேனும் ஆய்வு செய்ய நினைத்தால், கட்சித் தலைவர் உங்களுக்கு விளக்குவார். ஒரு பிரசாரக் கூட்டம்கூட ரத்து செய்யப்படவில்லை. வானிலைகூட எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.

10. தனிப்பட்ட ரீதியிலும் பொதுவாகவும் சமூக வலைதளங்கள் இரண்டு பொறுப்புடைமையைக் கொடுத்திருக்கின்றன. 
 

Vikatan