Published:Updated:

`யார் நேர்மையானவர்னு தெரியவில்லை!'- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வர்

`யார் நேர்மையானவர்னு தெரியவில்லை!'- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வர்
`யார் நேர்மையானவர்னு தெரியவில்லை!'- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வர்

``யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கைப் பொறுத்தவரை நடைமுறைகள் வித்தியாசமானதாகவும் சரியானதாகவும் நடத்தப்படவில்லை. இந்த நேரத்தில் தனிநபர்களைக் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் இதில் யார் நேர்மையானவர் என்பது தெரியவில்லை” என்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் தெரிவித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்த 35 வயதான பெண் ஒருவர் கடந்த மாதம் 19-ம் தேதி மாலை உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 22 நீதிபதிகளுக்கு ஒரு வாக்குமூலத்தை அனுப்பியிருந்தார். அதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தச் சம்பவத்தினால் தானும் தன் குடும்பமும் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். தன் மீது வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்திருந்தார். இதையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி, நீதிமன்ற நடைமுறைகள் குறித்த எதுவும் தனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று கூறி வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

`யார் நேர்மையானவர்னு தெரியவில்லை!'- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வர்

இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் நடக்காத சம்பவம் ஒன்று 2018-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி நிகழ்ந்தது. நீதியரசர் செல்லமேஷ்வர் உட்பட நான்கு மூத்த நீதிபதிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ``இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வெளிப்படையாகப் பேசவேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். உச்ச நீதிமன்ற நடைமுறைகளில், கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால், இந்தியாவில் ஐனநாயகம் நீடிக்காது” எனத் தெரிவித்திருந்தார் நீதிபதி செல்லமேஷ்வர். நீதித்துறை செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த அவருடன், நீதிபதிகள் குரியன் ஜோசஃப், மதன் லோகூர் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் உடனிருந்தனர். 

Vikatan