Published:Updated:

'டாஸ்மாக்: பொதுமக்கள் சாபத்துக்கு ஆளாகாதீர்கள்!'

'டாஸ்மாக்: பொதுமக்கள் சாபத்துக்கு ஆளாகாதீர்கள்!'
'டாஸ்மாக்: பொதுமக்கள் சாபத்துக்கு ஆளாகாதீர்கள்!'

'டாஸ்மாக்: பொதுமக்கள் சாபத்துக்கு ஆளாகாதீர்கள்!'

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'செய்வீர்களா... செய்வீர்களா ?'  என்ற தலைப்பில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி 22.7.15 தேதியிட்ட ஆனந்த விகடன் வார இதழில் இடம்பெற்றிருந்த தலையங்கத்திற்கு (https://www.vikatan.com/anandavikatan/2015-jul-22/editorial/108360.html) வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பு...

தலையங்கத்தை படித்துவிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கொந்தளித்த வாசகர்கள் சிலரின் கருத்துக்கள் இங்கே....

Muthukumaran : மது என்னும் அரக்கனை ஒழிக்க ஏன் இன்னும் தாமதம்?! தேர்தல் வரும் வரை சம்பாதித்து விடலாம் என்ற நப்பாசையா!?

Nanda : "மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான விதவைப் பெண்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு

'டாஸ்மாக்: பொதுமக்கள் சாபத்துக்கு ஆளாகாதீர்கள்!'

தத்தளிக்கின்றனர்." , முற்றிலும் உண்மை. பி.எஸ்.வீரப்பாவின் வசனம் நினைவுக்கு வருகிறது - "இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"

Mohamed Razvi : வருமானத்திற்கு மட்டும்தான் டாஸ்மாக் என்றால் அதைவிட வருமானம் அதிகம் வரும் சட்ட விரோத பிசினஸ் நிரம்ப உண்டு. பொதுமக்கள் சாபத்துக்கு ஆளாகாதீர்கள். கேவலப்பட்டு போவீர்கள்...

GANDHI NARASIMMAN : 'ஹெல்மெட் கட்டாயம்’ என்ற நீதிமன்ற உத்தரவை ஒரே மாதத்தில் இத்தனை தீவிரமாகச் செயல்படுத்தும் வலிமை கொண்ட அரசால் - மிக சரியான விமர்சனம். சாலை விபத்துக்கள் பலர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதினாலேயே நிகழ்கிறது என்பது நிதர்சனமான உண்மை. போக்குவரத்து காவல் அதிகாரிகள் அதனை ருசுபடுத்துவதில் உள்ள கடினமான நடைமுறை சிக்கல் காரணமாக "drunk அண்ட் டிரைவ் " குற்றத்தின் கீழ் பதிவு செய்வதே இல்லை. ஹோண்டா காரில் சொகுசு பயணம் செய்யும் நீதிபதிகளுக்கு இரு சக்கர ஓட்டிகளின் கஷ்டங்கள் தெரிவதே இல்லை. எவ்வளவு மோசமான சாலை கண்டிஷன்!

TAMIL : தரகு துட்டுக்கு ஆசைப்பட்டு இது அறுத்த தாலிகள் போதும்... இனியும் காலம் தாழ்த்தாது உடனே முழு மதுவொழிப்பை தமிழகத்தில் அமுல்படுத்துங்கள்....

Easwaran : செவிடன் காதில் ஊதிய சங்கு.

chinniahmuthuraman : மதுவினால் அரசுக்கு வருமானம் என்பதைவிட அரசாள்பவர்களுக்கு லாபம் அதிகம் என்பதால் அதை தடை செய்ய மறுக்கிறார்கள். மேலும் ஹெல்மெட் வழக்கில் காட்டிய தீவிரத்தை மதுவின் பக்கம் திருப்ப மறுத்த நீதிபதியும் தவறு செய்பவர்களே!

villavar : தமிழன் போதையில் இருந்தால்தான் அரிதாரம் பூசிய திராவிட இயக்கங்கள் கல்லா கட்ட முடியும். திருச்சியில் டாஸ்மாக்கை சூறையாடிய நாம் தமிழர் இயக்கத்தினரை பாராட்டுவோம்.

sasibalan : அரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ அல்லது பள்ளி மாணவர்களைப் பற்றியோ இவர்கள் ஒருபோதும் கவலைகொள்ளப் போவதில்லை. டாஸ்மாக்கை பொறுத்தவரை, மக்கள் ஆற்றாது அழுது புலம்பினாலும், எத்தனை எதிர்ப்புகள் தெரிவித்தாலும், கண்டனக் கணைகளை தொடுத்தாலும் அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு ஓசைதான். தமிழக மக்களின் இன்றியமையாத எத்தனையோ பிரச்னைகளில் ஒத்து போகாமல் வட துருவம் தென் துருவம் போல் எதிரும் புதிருமாக உள்ள இரு திராவிட கட்சிகளும், டாஸ்மாக் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இருவரும் ஒத்துப்போவது தமிழகத்தின் சாபக்கேடு என்றுதான் கூற வேண்டும்.

Padhu : டாஸ்மாக் கடைகளை மூடுவது ஒருபுறம் இருக்கட்டும், எங்கே போனது மக்களின் ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு. மது போன்றே துரித உணவுகளால் தொந்தி தள்ளி எமனுக்கு அவசர தந்தி கொடுப்போர் ஏராளம். அதற்காக அனைத்து துரித உணவுக் கடைகளையும் தமிழ்நாட்டில் மூட இயலாது. ஒவ்வொரு மனிதனும் தன் உடலைப்பேண வேண்டும் என்று மனதில்  உறுதிகொண்டாலே மாற்ற முடிந்த ஒன்று அது. முடிந்தவரை அரசாங்கம் மதுக்கடைகளை மூடவேண்டும், இல்லையென்றாலும் மதுவுக்கு எதிரான விளம்பரங்கள், விழிப்புணர்வை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். இது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

SBala : அரசுக்கு வருமானத்தை பெருக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் கோவில்களையும். அவற்றின் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக்கி அவற்றுக்கு வெளிநாட்டினர் வந்து செல்ல அடிப்படை வசதிகளை உண்டாக்கி விளம்பரப்படுத்தினால் சுற்றுலா மூலம் மிகுந்த வருமானம் கிடைக்க வழி உண்டு. அரசு அலுவலகங்களில் சிக்கன நடவடிக்கை கடைப்பிடிப்பதன் மூலம் செலவுகளை வெகுவாக குறைக்க முடியும். சினிமாவுக்கு கேளிக்கை வரியை இரு மடங்காக்குவதோடு, வரிச் சலுகைகளை நீக்கலாம். அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்கள் அத்தனையையும் தவிர்க்கலாம். இப்படி எத்தனையோ வழிகள் இருக்கின்றன - விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்கலாம் அல்லது மக்களிடம் கருத்து கேட்கலாம். நாம்தான் "நான்", "எனது தலைமை", "என் உத்தரவுப்படி" என இருக்கிறோமே!

Boopathy : அரசுக்கு வருமானம் குறையாமல், மக்களுக்கு நல்லது நடக்க ஒரு யோசனை. இது பிரேசில் நாடு பல வருடங்களாக நடைமுறைபடுத்தியுள்ள டெக்னாலஜிதான். "கரும்பு ஆலைகளின் சாராய தயாரிப்பு முறையை மாற்றி, எத்தனால் தயாரிப்புக்கு கொண்டுவர வேண்டும். வருமான கணக்கு... 1. மொத்த சர்க்கரை ஆலைகள் 40. அரைக்கும் திறன் 20,000 டன்/நாள் / ஆலை --> இதில் இருந்து 20,000 x 70 லிட்டர் = 14,00,000 லிட்டர் எத்தனால் --> அரசாங்க கொள்முதல் விலைப்படி (ரூ 50 / லிட்டர்) மொத்தம் ரூ.7,00,00,000 (7 கோடி)..இதன்படி 1 டன் கரும்பு விலை ரூ. 3,500. விவசாயிக்கு ரூ. 2,500 மற்றும் அரசாங்கத்திற்கு ரு1,000 / டன் கிடைக்கும் (ரூ. 2 கோடி /நாள்/ஆலை). 2. 300 நாட்கள் x 40 ஆலைகள் x ரூ.2 கோடி = 24,000 கோடி. இது நிரந்தர வருமானம். இதுபோக, சரியாக திட்டமிட்டால் ஒரு ஆலையில் 25 MW மின்சாரம் உற்பத்தி செய்யலாம் (40 x 25 MW = 1000 MW )..இது 9% மின் தேவையை ஈடு செய்யும்..மேலும் பல உபரி பலன்களும் கிடைக்க வாய்பு உள்ளது.

Mano : கள்ளச் சாராயம் விற்ற காலத்திலும் மக்கள் குடித்தார்கள், எப்படி? ஊரை விட்டு தள்ளி ஒளிந்து, மறைந்து, காடுகளிலும், மலைகளிலும். இன்றும் நாட்டு சாராயம் இல்லாமல் இல்லை. அப்பொழுது 10 பேர் குடித்தால், தற்சமயம் 100 பேர் குடிகிறார்கள். முன்பு கள்ளச் சாராயம் குடிப்பது கேவலமாக பார்க்கப்பட்டது. தற்சமயம் குடி கார்ப்பரேட் லெவலுக்கு போய் விட்டது. சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது. ஒரு தொழிலை தொடங்கியவுடன் அது தீங்கு என்று தெரிந்தால் அதை விட்டு விலக வேண்டியதுதான். அதை விடுத்து  வருமானம் வருவதால் தீயவை செய்யாமல் இருக்க மாட்டேன் என்று சொல்லக் கூடாது. தமிழகத்தில் சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, நஞ்சில்லா உணவு என்று தொடங்கினாலே பணம் கொட்டும். எனவே மதுவினால் வரும் வருமானத்திற்கு மாற்று ஒன்றை அரசாங்கம் கண்டுபிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனை சிறிது சிறிதாக நடைமுறைபடுத்தினால் நலம்.

SBala : 'உங்களால் முடியுமா?’ என்பதே கேள்வி! யாராலும் முடியாது என்பதோடு, தேவையும் இல்லை என்பதே பதில். உலகெங்கும் மக்கள் குடிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தில் வீட்டு செலவிற்கு மீந்த காசிலேயே குடிக்கிறார்கள் (சில விதிவிலக்கு உண்டு). ஆனால் இங்கே மட்டும் குடி இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் காரணம் என்ன? ஊழல் பணத்தில் எப்போதும் தன்னுடன் சிலரை வைத்து ஊற்றிக் கொடுக்கும் அரசியல்வாதி; இலவசமாக பல்பொடி முதல் காண்டம் வரை தருவதாக சொல்லி அதில் ஊழல் செய்யும் அரசியல்வாதி; ஆட்சியை பிடிக்க பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல்வாதி; சம்பாதித்த பணத்தை சினிமாவில் போட்டு அதை கணக்கில் கொண்டுவரும் அரசியல்வாதி. இதெல்லாம் உண்மையென்றாலும், இதையெல்லாம் அவனுக்கு சொல்லித் தரும் படித்த அதிகாரவர்க்கம்தான் இதன் மூலகாரணம். ஒருவன் வேலையை ஒன்பது பேர் செய்யும் அவர்களுக்கு, சம்பளமும், வசதிகளும், சலுகைகளும் கொடுக்கவே சாராய வருமானத்தின் பெரும் பகுதி செலவிடப்படுகிறது.

RAMAKRISHNAN : இது சாட்டைஅடி. இந்த தலையங்கம் போய்சேர வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்தால் நிச்சயம் மாற்றம் நடக்கும் என்று நம்புவோம்

SBala : ஹெல்மெட் போடாமல் போகிறவனை பிடிக்க தீவிரம் காட்டும் அளவுக்கு, குடித்துவிட்டு சாலைகளில் அலைபவரை அப்புறப்படுத்துவதிலும், சிறாருக்கு மது விற்கும் கடைக்காரனை கைது செய்வதிலும் காட்டினால் இந்த பிரச்னை குறையும். செய்வார்களா? அவர்கள் செய்வார்களா? செய்ய சொல்வார்களா? இவர்கள் சொல்வார்களா?

S : புதிதாக அரசின் வருவாய் வழிமுறைகளை கண்டறிய வேண்டும். அதேசமயம் அரசு செலவினங்களில் சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டும் தனியாக ஒரு நிபுணர் குழு அமைத்து எந்தெந்த துறைகளில் என்னென்ன வழிகளில் அரசுப் பணம் விரயமாகிறது என்பதை கண்டறிந்து அவற்றை ஒழிக்க வேண்டும். மலிவான இலவச திட்டங்களையும், மானியங்களையும் ஒழிக்க வேண்டும். நிதி மேலாண்மை சிறப்பாக இருந்தாலே, டாஸ்மாக் வருமானம் இல்லாமலேயே, அரசை நிர்வகிக்க முடியும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மாக்கை ஒழித்துவிட அரசால் முடியும். ஆனால் ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்பதற்கு அரசின் வருமானம் பெரிதும் பாதிக்கும் என்பதைவிட, அந்த பெரும் பவரான புள்ளி விற்பனையாகும் ஒவ்வொரு பாட்டில் மதுவிடமிருந்து அள்ளும் கமிஷன் பல நூறு கோடிகளாகி, தன் மகன் மூலம் வெளி மாநிலம், வெளிநாடு என எங்கு முதலீடு செய்வது என்று திணறுவதே காரணம். அவ்வளவு பணம் ஒருவருக்கு மட்டுமே குவியும்போது எப்படி டாஸ்மாக்கை ஒழிப்பார்கள்?

சி.அ. காதர் : சரியான நெற்றியடித் தலையங்கம். இம்மாதிரி மதுக்கடைகளை நடத்தி மக்களைச் சாகடித்து நிறைய பெண்களை விதவைகளாக்கும் அரசுக்குப் பெண்களின் ஆதரவு எப்படிக் கிடைக்கிறது என்பதே புரியாத புதிராக உள்ளது. அல்லது பெண்களின் ஓட்டுக்கள் எல்லாம் கள்ள ஓட்டுக்களாக மாறுகின்றனவா? இதற்கு ஒரேவழி எந்தக்கட்சிக்கும் ஓட்டுப்போடாமல் "NOTA " வே சிறந்த வழி. மக்கள் செய்வார்களா? செய்வார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு