அரசாங்கத்தால் கம்யூனிஸ்ட் என்றும் இடதுசாரி இயக்கங்களால் பிற்போக்குவாதி என்றும் அடையாளம் சூட்டப்பட்ட சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகள் மனித மனங்களின் மென்மையான பக்கங்களை அதற்கான கனமான உள்ளடக்கத்துடன் காட்டுபவை. மண்ட்டோ, 1912-ல் லூதியானாவில் பிறந்தவர். பிரிக்கப்பட்ட இந்தியாவில் அது பாகிஸ்தானுக்குள் இருந்தது. இவரும் பாகிஸ்தானையே தனது வாழ்க்கைப் பிரதேசமாகத் தேர்வு செய்தார். 43 வயதில் இறந்துபோனார். கடைசி 20 வருட இலக்கிய வாழ்வில் இவர் படைத்த சிறுகதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகள் ஆகியவற்றின் தொகுப்பு இது. மண்ட்டோ படைப்புகளை அதற்கே உரித்தான உள்ளடக்கத்தோடு மொழிபெயர்ப்பதில் அதீத ஆர்வம்கொண்ட ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பு இது.

மண்ட்டோ படைப்புகளை ஆபாசமானது என்று ஒதுக்கப்பார்த்தார்கள். ''விலைமாதுகள் பற்றி எழுதுவதே ஆபாசம் என்றால், அவர்களின் இருப்பும் ஆபாசமானதுதான். அவர்களைப் பற்றி எழுதுவதைத் தடை செய்வதை விரும்பினால், முதலில் அவர்களை ஒழித்துக்கட்டுங்கள். பிறகு அவர்களைப் பற்றி எழுதுவது தானாக மறைந்துவிடும்'' என்று மண்ட்டோ பதிலளித்தார். ஆபாச இலக்கியம் படைத்ததாக ஆறு முறை நீதிமன்றப் படியேற வைக்கப்பட்டார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றியே அதிகம் எழுதியவர் என்று ஒரு சிமிழுக்குள் அடைக்கப்பார்த்தார்கள். 'இந்தியா என்ற ரொட்டித்துண்டை ராட்கிளிஃப் இரண்டாகக் கிழித்துப் போட்டான். ஆனால், அவை இன்னும் தீயில் போகாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. நீங்கள் அந்தப் பகுதியில் இருந்து தீ மூட்டுகிறீர்கள். நாங்கள் இந்தப் பகுதியில் இருந்து தீ மூட்டுகிறோம். ஆனால், நெருப்பின் நாக்குகள் அடுப்புக்கு வெளியே எங்கோ எரிந்துகொண்டிருக்கின்றன’ என்று நேருவுக்கு எழுதியவர் மண்ட்டோ.

ஜின்னாவின் அரசியல், நூர்ஜஹானின் குரல், நர்கீஸின் அழகு, அசோக்குமாரின் நடிப்பு... என யாரைப் பற்றி எழுதினாலும் அவர்களைப் பற்றிய மலைப்பைவிட படைப்பாளி இன்னொரு ஆளுமையை எப்படி உன்னிப்பாக கவனிக்கிறான் என்பதே ஆச்சர்யப்படுத்துகிறது.

அவரது கதைகள் அன்று தடை செய்யப்பட்டவை. ஆனால், இன்றும் யதார்த்தமானவை. அவர் பிரிவினைச் சூழலில் எழுதினார். இன்றும் பிரிவினைச் சூழல் போன்றதுதான். மண்ட்டோ மறுபடி மறுபடி வாசிக்க வேண்டியவராகவே இருக்கிறார். நல்லவேளை, நீதிமன்றங்களுக்கு இழுக்க அவர் உயிரோடு இல்லை!

-புத்தகன்