Published:Updated:

"வகுப்புகளை கட் அடித்திருக்கிறேன். ஆனால், புத்தக வாசிப்பைக் கைவிட்டதே இல்லை!" - அமைச்சர் பி.டி.ஆர்

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை புத்தகத் திருவிழா: கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

"வகுப்புகளை கட் அடித்திருக்கிறேன். ஆனால், புத்தக வாசிப்பைக் கைவிட்டதே இல்லை!" - அமைச்சர் பி.டி.ஆர்

மதுரை புத்தகத் திருவிழா: கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Published:Updated:
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை தமுக்கம் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுரை மாநாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து புத்தகத் திருவிழாவைத் தொடங்கியுள்ளனர்.
புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, எல்லோர்க்கும் கல்வி, எல்லோர்க்கும் சம வாய்ப்பு என்ற அடிப்படையில் மக்கள் நலனை தலையாய கடமையாகக் கொண்டு அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு நிதியுதவியுடன் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சிகள், அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்போடு அரசு நிதியுதவியுடன் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

மதுரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகத் திருவிழா, குறுகிய காலத்தில் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. புத்தக வாசிப்பு என்பது மிக அற்புதமான பழக்கம். பள்ளி, கல்லூரி காலங்களில் நான் வகுப்புகளைக் கட்டடித்திருந்தாலும், புத்தக வாசிப்பு பழக்கத்தை கைவிட்டதே இல்லை. தினமும் இரண்டு புத்தகங்களையாவது படித்து விடுவேன்.

கடந்த புத்தகக் கண்காட்சியின்போது 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை விரும்பி வாங்கிச் சென்றேன். இந்தக் கண்காட்சியிலும் விரிவாகப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிட ஆவலாக உள்ளேன்.

பாடப்புத்தகங்களைக் கடந்து பிற துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்த விதமான அரிய தகவல்களை கற்று பயன்பெற முடியும். அந்த வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்தப் புத்தகத் திருவிழாவை பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

புத்தகத் திருவிழா
புத்தகத் திருவிழா

சென்னை புத்தகத்திருவிழாவுக்கு அடுத்தபடியாகப் பேசப்படும் இந்த மதுரை புத்தகத்திருவிழா, ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட தமுக்கம் மாநாட்டு அரங்கில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக இருப்பதில் மதுரை மாவட்ட நிர்வாகம், வாசகர்கள், எழுத்தாளர்கள், புத்தக பதிப்பாளர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் புத்தகத் திருவிழா அக்டோபர் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 200க்கும் அதிகமான பதிப்பகத்தினர் கலந்துகொண்டுள்ள இவ்விழாவில் சிறார் பயிலரங்கம், சிறார் திரைப்படம் திரையிடல், கல்லூரி மாணவர்களுக்கான படைப்பூக்க அரங்கம், பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் எனப் பல கலை இலக்கிய நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற உள்ளன.