Published:Updated:

ப.ஜீவானந்தம் - காமராஜர் தந்த வீட்டை மறுத்த மகத்தான தலைவர்! | The Legend

ப.ஜீவானந்தம்
News
ப.ஜீவானந்தம்

‘ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில்’ என்று போற்றப்படும் அளவிற்கு மிக நீண்ட பொதுவாழ்க்கையை கொண்டவர் ஜீவானந்தம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிதியினால் நடத்தப்பட்ட சேரன்மாதேவி குருகுலத்தில் சேர்ந்து பணியாற்ற தொடங்கியிருந்தார் ஜீவானந்தம். அங்கு பிராமண மாணவர்களுக்கு தனியாகவும் பிராமண அல்லாதவர்களுக்கு தனியாகவும் உணவு தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய ஜீவா, காந்தியின் பெயரால் புதிதாக ஆசிரமம் ஒன்றை தொடங்கி நடத்தத்தொடங்கினார்.

தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, ஜீவானந்தத்தின் ஆசிரமத்தை பார்வையிட்டு வெகுவாகப் பாராட்டி அவரின் சொத்து மதிப்பை பற்றி கேட்க "இந்த மொத்த நாடே என் சொத்து" எனப் பதிலளிக்கிறார் ஜீவா. அதற்கு காந்தியோ "நீங்கள்தான் இந்நாட்டின் சொத்து" என்று பாராட்டினார். ஆனால் வர்ணாஸ்ரம கொள்கைகளை ஆதரித்ததால் காந்தியை எதிர்த்து அவருக்கே கடிதம் ஒன்றையும் எழுதினார் ஜீவானந்தம்.

‘ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில்’ என்று போற்றப்படும் அளவிற்கு மிக நீண்ட பொதுவாழ்க்கையை கொண்டவர் ஜீவானந்தம். தொடக்கக்காலத்தில் காந்திய கொள்கைகளை பின்பற்றியது, பெரியாருடன் இணைந்து வைக்கம் போராட்டத்தில் பங்குபெற்றது, பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகனானேன்' புத்தகத்தை வெளியிட்டு சிறை சென்றது, கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ரஷ்யா சென்றது, தாழ்த்தப்பட்டவர்களுக்காக மும்பையில் போராடியது என ஜீவானந்தத்தின் மகத்தான வாழ்க்கையை விளக்குகிறது இந்த வீடியோ.