தென் மாவட்டத்து மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பம்பை அச்சன்கோவில் வைப்பாறு திட்டத்தை முடக்கிவிட்டதாகக் கேரள அரசு சொல்லியிருப்பது விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாய பெருங்குடிமக்களைக் கொதிப்படைய வைத்துள்ளது. நதிநீர் இணைப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இதுபற்றி நம்மிடம் பேசினார்.

''கேரளத்தில் உற்பத்தி ஆகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்களால் பயன்படுத்த முடியவில்லை. அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால், விவசாய நிலங்கள் குறைவு. தமிழ்நாட்டின் நீர்வளம் சுமார் 1,350 டி.எம்.சி. ஆனால், கேரளத்தின் நீர்வளம் சுமார் 2,500 டி.எம்.சி. அதில், 1,000 டி.எம்.சிக்கும் அதிகமான மழைநீர் வீணாகி அரபிக்கடலில் போய் சேர்கிறது. கேரள மாநிலத்துக்குத் தேவையான நீர் அளவு சுமார் 850 டி.எம்.சி. அவர்களுக்குப் போக, மீதமுள்ள நீரை தமிழகத்துக்குத் திருப்பி விடும்போது, தமிழகத்தில் 8 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் கேரளத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்திடம் இருந்து அவர்கள் வாங்கிச் சாப்பிடும் பால், காய்கறிகள், அரிசி போன்ற பொருட்களின் விலை குறைந்து பொருளாதார ரீதியாக கேரள மக்கள் அடையும் பலன்களே அதிகம். ஆனால், அதனை அவர்கள் உணரவில்லை என்பதற்கு உதாரணம்தான் பம்பை அச்சன்கோவில் வைப்பாறு திட்டத்தை முடக்க நினைப்பது!

கன்னியாகுமரி மாவட்டத்துக்காக காமராஜர் தொடங்கிவைத்த நெய்யாறு இடதுகரை கால்வாயை கேரள அரசு மூடி விட்டது. நெல்லை மாவட்டம் சொக்கம்பட்டி அருகே அமைந்த செண்பகவல்லி அணையை தமிழகத்துக்குத் தெரியாமல் கேரள அரசு ஊழியர்கள் 1994-ம் ஆண்டு இடித்துத் தள்ளினர். வாசுதேவநல்லூர் அருகே, 'உள்ளார் திட்டம்’ நிறைவேற்றுவதில் கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் 'அழகர் அணைத் திட்டம்’ கேரளா பிடிவாதத்தால் முடங்கிக் கிடக்கிறது. அதனால் வானம் பார்த்த கரிசல் பூமிகளான ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் பகுதிகள் இன்று வரை பாசன வசதிகள் இல்லாமல் கிடக்கின்றன. தேனி மாவட்டத்தில் ஆலடி அணைத் திட்டம் 1970-களில் திட்டமிடப்பட்டது. பெரியகுளம், நிலக்கோட்டை, திண்டுக்கல் வரை பாசன வசதி பெறும் இந்தத் திட்டத்துக்கும் கேரள அரசு அனுமதி தராமல் புறக்கணிக்கிறது. கோவை மாவட்டத்தில் ஆழியாறு பரம்பிகுளம், பாண்டியாறு புன்னம்புழா ஆகிய திட்டங்களிலும் தொடர்ந்து கேரளா வம்பு செய்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இந்தத் திட்ட முடக்கத்தையும் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு, இமயமலையைச் சேர்ந்த 14 ஆறுகளையும் தென்னிந்தியாவில் உள்ள 16 ஆறுகளையும் இணைக்கலாம் என்று அதன் திட்ட அறிக்கை கூறுகிறது. அதில் ஒன்றுதான், பம்பை அச்சன்கோவில் வைப்பாறு இணைப்புத் திட்டம். கேரளாவின் பம்பை அச்சன்கோவில் ஆறுகளின் மிகை நீரை தமிழ்நாட்டுக்குத் திருப்புவதற்கு ஏதுவாக தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. திட்ட சாத்தியக்கூறு அறிக்கையில் இந்தத் திட்டத்துக்கான செலவு ரூ.1,397.91 கோடி ஆகும் என்று 1992 - 93-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர். தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தில் இந்தத் திட்டத்தை முன்னுரிமை திட்டமாக உடனே செயல்படுத்தலாம் என்று தேசிய நீர் மேம்பாட்டு முகமையானது மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இந்தத் திட்டத்தால், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 2.24 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால், கேரள முதல்வர் உம்மன்சாண்டி, அந்த ஆறுகளில் தண்ணீர் இல்லை என்பதோடு, பம்பை அச்சன்கோவில் வைப்பாறு திட்டத்தை முடக்கிவிட்டதாகக் கேரள சட்டசபையில் ஆணவத்தோடு தம்பட்டம் அடித்துள்ளார். முல்லை பெரியாறு பிரச்னையில் சண்டித்தனம் செய்வதுபோல ஆற்றுநீரை வீணாகக் கடலில் கலக்கவிட்டாலும் விடுவோமே தவிர, தமிழகத்துக்குத் தரமாட்டோம் என்கிற கேரள அரசிடம் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். கடைமடையில் உள்ள தமிழக விவசாயிகளைப் பாதுகாப்போம்'' என்று சொல்கிறார்.

தென்மாவட்டத்து விவசாயத்தைக் காப்பாற்ற இப்போதே முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஆர்.எம்.முத்துராஜ்.