Published:Updated:

மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?

மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?

மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?

மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?

Published:Updated:
##~##
மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?

மிழக சுகாதாரத் துறை அமைச்சராக, வேலூர் தொகுதி எம்.எல்.ஏ-வான டாக்டர் விஜய் பொறுப்பேற்றதும், ''நான் எங்கு சென்றாலும், வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தொகுதி மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிவேன்!'' என்று உறுதி அளித்தார். அதுபோலவே பெரும்பாலான சனிக்கிழமைகளில் வேலூர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிவந்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த சனிக்கிழமை 3-ம் தேதி பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை தள்ளிவைத்து, வேலூர் அரசு பென்ட்லண்ட் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு அமைச்சர் வந்தபோது, மருத்துவமனை டிரான்ஸ்ஃபார்மரில் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த இருவர் மீது திடீரென மின்சாரம் பாயவே... ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருக்கிறார்.

மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?

இது குறித்து வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்திகேயன்( தி.மு.க.) நம்மிடம் பேசினார். ''அமைச்சரின் கவனக்குறைவும், மக்கள் மேல் அக்கறை இல்லாததும்தான் இந்த விபத்துக்குக் காரணம். 'கடந்த சனிக் கிழமை வேலூர் நகர பகுதிகள் முழுதும் மின்சாரம் வழங்கப்பட மாட்டாது’ என மின்சார வாரியம் அறிவித்து இருந்தது. அன்றைய தினம் அமைச்சர் வேலூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியை தொடங்கி வைக்க வந்தார். அவர் வருகையை முன்னிட்டு, மருத்துவமனை ஊழியர்கள் நெருக்கடி கொடுத்த காரணத்தால், மின்சார வாரியத்தினர் அந்த மருத்துவமனைக்கு மட்டும் மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான், டிரான்ஸ்ஃபார்மரில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த கான்ட்ராக்ட் ஊழியர்களான பாஷா, சசிகுமாரை மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே பாஷா மரணமடைந்தார். சசிகுமார் நிலையும் பரிதாபமாகத்தான் உள்ளது.

மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?

அமைச்சர் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரை எல்லோருமே இதில் தவறு செய்து உள்ளனர். ஒவ்வொரு முறை அமைச்சர் வரும்போதும் பென்ட்லண்ட் மருத்துவ மனைக்குச் செல்வதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார். அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், அங்கெல்லாம் அவர் போவது கிடையாது. கடந்த சனிக்கிழமை நடந்தது, தற்செயலான விபத்து என்று வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும். மனித உயிரின் மதிப்பு மருத்துவம் படித்த அவருக்குத் தெரியாதா?'' என்றார் காட்டமாக.

மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?

மரணம் அடைந்த பாஷாவின் வீடு சீனிவாச நகரில் உள்ளது. அங்கே சென்று, அவரது சகோதரர் சையது இப்ராஹீமைச் சந்தித்தோம்.

''எனது தம்பிக்குத் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. எங்களது பெரியப்பா வீட்டுத் திருமணம் தற்போது நடந்தது. அதற்காக வந்த எனது உறவினர்கள், இப்படி எனது தம்பியின் இறுதிச் சடங்கிலும் கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை! பாஷாவுக்கு மூன்று குழந் தைகள். வாடகை வீடுதான். அந்த கான்ட்ராக்ட்டில் மாதம்

மருத்துவமனை விபத்துக்கு அமைச்சர் விஜய் காரணமா?

3,500தான் சம்பளம் வாங்கினான். இப்போது அவரது மனைவியின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிட்டது. சம்பவம் நடந்தபோது அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இடத்தில் மட்டும் அமைச்சரின் வருகைக்காக  மின்சாரம் கொடுக்கப்பட்டதால்தானே இப்படி ஒரு உயிர் அநியாயமாகப் போய் விட்டது! என் தம்பியோடு வேலை செய்த சசிகுமாரும் கஷ்டத்தில் வாழ்பவர்தான். அவருக்கும் ஒரு பெண், இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எங்களால் அழத்தான் முடியும். அதிகார வர்க்கத்திடம் சென்று மோதவா முடியும். பாஷா, சசிகுமார் குடும்பத்துக்கு அரசுதான் உதவ வேண்டும்!'' என்றார் உருக்கமும் வருத்தமுமாக.

அமைச்சர் விஜய்யிடம் இந்த சம்பவம் பற்றிக் கேட்டோம். ''இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நான் அந்த விபத்து நடந்த நேரத்தில் அந்த ஆஸ்பத்திரியில் இல்லை. இருந்தாலும் இது பற்றி முழுமையாக விசாரிக்கச் சொல்லி இருக்கிறேன். அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தும் நோக்கில் ஜெனரேட்டர் வசதியை தொடங்கி வைக்க வந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நடந்ததில் எனக்கும் வருத்தம்தான்...'' என்றார் சுருக்கமாக.

ஊர் முழுவதும் மின்சாரம் இல்லாத சூழலில், அரசு மருத்துவமனைக்கு மட்டும் மின்சாரம் தரச் சொன்னது யார்? எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் தர அனுமதித்தது யார்? - உடனே விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், இனிமேல் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்கும்.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism