Published:Updated:

மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!

மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!

மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!

மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!

Published:Updated:
##~##
மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!

'தமிழகத்தில் இருக்கும் வழிப்பறிக் கொள் ளையர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள்!’- அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் முதல்வர் ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகள் இவை. அப்படி என்றால் மணப்பாறை ஆந்திர மாநிலத்தில் இருக்கிறதா? என்று சந்தேகப்படுகிறார்கள் மக்கள். காரணம்... கடந்த சில தினங்களாக மணப்பாறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவங்கள்தான்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆகஸ்ட் 25-ம் தேதி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் சேவியர் மார்ட்டின் வேலைக்குப் போயிட்டு சாயந்திரம் வீட்டுக்கு வர்றதுக்குள்ள, வீட்டுல இருந்த பத்து பவுன் நகையை அடிச்சுட்டுப் போயிட்டானுங்க. 27-ம் தேதி ராத்திரி ஆஞ்சநேயா நகர் ராமதாஸ் வீட்டுல கொள்ளை. அவர் நைட் ஷிப்ட் வேலைக்கும், அவர் மனைவி சென்னைக்கும் போயிருந்தாங்க. அப்ப வீட்டுக் குள்ள புகுந்து

மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!

ஆறரை பவுன் நகையை எடுத்துட்டுப் போயிட்டானுங்க. அடுத்து வடக்கிப்பட்டி மகேஸ்வரன் வீட்டுல ஆட்கள் இருக்கும்போதே, பூட்டாம இருந்த கேட் வழியே உள்ளே நுழைஞ்சு, தூக்கத்துல இருந்தவங்க கழுத்துல போட்டிருந்த மூன்றரை பவுன் செயினை அறுத் துட்டுப் போயிட்டாங்க. சத்தம் கேட்டு எழுந்த மகேஸ்வரனுக்கு கட்டையால அடி. இத்தனைக்கும் ஆஞ்சநேயா நகர்ல கொள்ளை சம்பவம் நடந்த தகவல் கிடைச்சு, போலீஸ்காரங்க வடக்கிப்பட்டிக்கு ரவுண்ட்ஸ் வந்துட்டுப் போன பிறகுதான் இந்த சம்பவம்.

31-ம் தேதி மணப்பாறையில இருந்து குளித்தலைக்குப் போன முத்துலட்சுமிங்கிற வயசான பாட்டி, ஆண்டவர் கோயில் ஸ்டாப்ல இறங்கிய போது கழுத்தில் கிடந்த ஒன்பதரை பவுன் நகையைக் காணலை. யாரோ அறுத்துட்டாங்க. செப்டம்பர் 1-ம் தேதி இரவு, பன்னப்பட்டி வி.ஏ.ஓ. மனோகரன் வீட்டுல கொள்ளை. வீட்டுல இருந்த ஆட்களை மிரட்டி 10 பவுன் செயினை பறிச்சுட்டுப் போயிட்டானுங்க. மஞ்சம்பட்டி சந்தியாகு வீட்டுல, தனியா இருந்த அவரை கட்டிப்போட்டுட்டு

மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!

25 ஆயிரத்தைக் கொள்ளையடிச்சுட்டாங்க. அடுத்து ம.தி.மு.க. புறநகர் மாவட்ட துணைச் செயலாளரான 'தாமஸ்’ தங்கமணி வீட்டு கேட்டை உடைச்சுட்டு, உள்ளே நுழையப் பார்த்தாங்க. தற்செயலா அவங்க பார்த்து சத்தம் போட்டதால... திருட்டுப் பசங்க ஓடிட்டாங்க...'' என்று மணப்பாறைவாசிகள்அது வரை நடந்ததைப் பட்டிய லிட்டார்கள்.

மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சந்தியாகு வீட்டுக்குச் சென்றோம். ''எல்லாரும் அன்னிக்கு வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குப் போயிட் டாங்க. நான் மட்டும் தனியா இருந்தேன். நாய் குரைக்குற சத்தம் கேட்டு எழுந்து பார்த்தா... டக் குன்னு யாரோ என் கண்ணுக்கு நேரா டார்ச் லைட்டை அடிச்சாங்க. கண்ணு தெரியாம தடுமாறினப்ப, ரெண்டு பேரு என் மேல விழுந்து கட்டிப் புரண்டானுங்க. நானும் எவ்வளவோ போராடிப் பார்த்தேன். முடியலை. என்னைக் கட்டிப் போட்டுட்டு, வீட்டையெல்லாம் புரட்டி எடுத்துட்டானுங்க. எதுவும் கிடைக்கலை. பணம் நகையெல்லாம் எங்கே வெச்சிருக்கேன்னு கேட்டு அடிச்சானுங்க. 'எங்ககிட்ட ஒண்ணும் இல்லைங்க’ன்னு சொல்லவும், 'ஏண்டா... உன் மருமகன்

மணப்பாறையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்!

வெளிநாட்டுல வேலை செய்யுறான். மருமக நர்ஸா வேலை பார்க்குறா. வெளியில போகும்போது எல்லாரும் செயின், நகைன்னு போட்டுட்டுப் போறாங்க. கேட்டா ஒண்ணும் இல்லைன்னா சொல்ற?’ன்னு கேட்டுத் திரும்பவும் அடிச்சானுங்க. கடைசியில மாதா படத்துக்குப் பின்னாடி வெச்சிருந்த 25 ஆயிரம் பணத்தை எடுத்துட்டுப் போயிட் டானுங்க...'' என்று விவரித்தவர், ''வந்தது மொத்தம் மூணு பேர். அவனுங்க தொடர்ந்து ஆட்களையும், வீடுகளையும் கண்காணிச்சுத்தான் கொள்ளையடிக்க வர்றானுங்க. இல்லைன்னா என் மருமகன் வெளிநாட்டுல இருக்குற விஷயமெல்லாம் அவங்களுக்கு எப்படித் தெரியும்? அதுவும் கரெக்டா யாரும் வீட்டுல இல்லாத சமயம் பார்த்து வந்திருக்கானுங்க...'' என்று பதறினார்.

ம.தி.மு.க. பிரமுகர் தாமஸ் தங்கமணி வீட்டுக்குச் சென்றோம். அவர் மனைவி ஜோஸ்லின் மேரி, ''எங்க வீடு தனியா இருக்குது. வீட்டுக்கு வெளி யில எதையோ உடைக்கிற சத்தம் கேட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தா... மூணு பேரு கதவை உடைச்சுகிட்டு இருக்கானுங்க. உடனே அவரு, 'போலீ ஸுக்குப் போன் போடு. டேய் யாருடா நீங்க?’ன்னு சத்தம் போட்டாரு. மூணு பேரும் சட்டை எதுவும் போட்டிருக்கல. வெள்ளைக் கலர்ல டவுசர் மட்டும் போட்டிருந்தானுங்க. நாங்க சத்தம் போடவும், குனிஞ்சுகிட்டே சுவர் ஏறிக் குதிச்சுட்டானுங்க. ஆனா, ரொம்ப நேரமா அங்கேயே நின்னுட்டு இருந் தானுங்க. ஒரு வேளை நாங்க வெளியே வருவோம். தாக்கிட்டு கொள்ளையடிக்கலாம்னு நினைச்சானுங்களோ என்னவோ?'' என்றவர், ''இது வரைக்கும் நாலு தடவை எங்க வீட்டுல கொள்ளையடிக்க முயற்சி நடந்திருக்கு. முதல் தடவை மட்டும் ஜன்னலோரமா படுத்திருந்தப்ப மூன்றரை பவுன் தாலி செயினை அறுத்துட்டு ஓடிட்டானுங்க. மத்த தடவை எல்லாம் தப்பிச்சுட்டோம். இருந்தாலும் எப்ப கொள்ளைக்காரனுங்க திரும்பவும் வருவானுங்களோன்னு பயமா இருக்குது!''என்றார்.

மணப்பாறை இன்ஸ்பெக்டரான விஜய காண்டீபனிடம் பேசினோம். ''பெரும்பாலும் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக தனியாக இருக்கும் வீடுகளிலோ, வீடுகளில் ஆட்கள் தனியாக இருக்கும்போதோதான் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. அதனால் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்துகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். பழைய சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் பட்டியலை வைத்து ஆராய்ந்து வருகிறோம். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பது எப்படி என்று நோட்டீஸ்களும் விநியோகித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்!'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.

சீக்கிரம் செய்யுங்க சார். மக்கள் கதிகலங்கி போயிருக் காங்க!

- ஆர்.லோகநாதன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism