Published:Updated:

''யாரும் என் பின்னாடி வரவேண்டாம்..''

நேரு விழாவில் கண்ணீர் காட்சிகள்

''யாரும் என் பின்னாடி வரவேண்டாம்..''

நேரு விழாவில் கண்ணீர் காட்சிகள்

Published:Updated:
##~##
''யாரும் என் பின்னாடி வரவேண்டாம்..''

தி.மு.க-வின் முன்னாள் போக்கு வரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு இப்போது கடலூர் சிறையில் இருக்கிறார். அவரது மகன் அருணுக்கும் தீபிகாவுக்கும் 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

(நேருவின் தங்கை உமா மகேஸ்வரியின் மகள் இவர்!) திருமண நிச்சயதார்த்தம் செப்டம்பர் 2-ம் தேதி நடக்கும் என்று முடிவான நிலையில்தான் இந்தக் கைது நடந்தது.  ஆனால் திட்டமிட்டபடி நிச்சயதார்த்தம் நடந்தது. சிறையில் இருந்து வந்து நேருவும் இதில் கலந்து கொண்டார்!  

நில அபகரிப்பு வழக்கில் திடீரென கைதாகி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் நேரு. இந்தக் கைது நடவடிக்கையால், திட்ட மிட்டபடி நிச்சயதார்த்தம் நடக்குமா... நடக்காதா என்று கட்சிக்காரர்கள், குடும்பத்தார் மத்தியில் பெரும் குழப்பம் இருந்தது. ஆனால், 'நான் உள்ளே இருந்தாலும், திட்டமிட்டப்படி நிச்சயதார்த்தம் நடந்தே தீரவேண்டும்’ என நேரு கறாராக சொல்லி விட்டார்.

''யாரும் என் பின்னாடி வரவேண்டாம்..''

அதனால் கடலூர் மாவட்டத்தில் கட்சிக்காரர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பொறுப்பு, முன்னாள் அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மூலம் சுமார் 100 பேர்களுக்கும் குறைவாகத்தான் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டதாம். மேலும் எம்.ஆர்.கே-வின் எதிர்த் தரப்புகளுக்கு அழைப்பு வைக்கப்படவே இல்லையாம். 'இதில் கூடவா பாகுபாடு பார்ப்பது?’ என்று கட்சிக்காரர்கள் சிலர் குமுறி புகார் எழுப்ப... 'பிரச்னை பண்ணவேண்டாம்’ என்று சமாதானம் நடந்ததாம்.

'மகனின் நிச்சயதார்த்தத்துக்கு நேரு கலந்துகொள்ள வேண்டும்’ என வழக்கறிஞர் கள், திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கோகுல்தாஸ், நேருவுக்கு இடைக்கால பெயில் வழங்கி, 'செப்டம்பர் 1-ம் தேதி, மாலை 6 மணிக்குச் சென்றுவிட்டு 2-ம் தேதி மாலை 6 மணிக்குள் சிறைக்கு வந்துவிட வேண்டும்’ என உத்தரவிட்டார்.  குறிஞ்சிப்பாடியில் நேரு தங்குவதற்காக, ஒரு வீட்டை தயார் செய்து வைத்திருந்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். ஆனால் நேரு அதை மறுத்துவிட்டு, 'சொந்த பந்தங்களுடனும், கட்சிக்காரர்களுடனும் இரவு தங்க விரும்பு கிறேன்’ என சொல்லிவிட்டு கல்யாண மண்டபத்திலேயே போலீஸ் பாதுகாப்புடன் படுத்துக்கொண்டார்.

செப்டம்பர் 2-ம் தேதி காலை 9.00 மணி உற்சாகமாகத் தொடங்கியது நிச்சயதார்த்த விழா. அழைப்பை எதிர்பார்க்காமல் கட்சிக் காரர்கள் உணர்வுபூர்வமாகத் திரள, திருச்சி மாவட்டத்தில் இருந்து வந்த நேருவின் சொந்தக்காரர்களும் குவிந்தனர். முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா,

''யாரும் என் பின்னாடி வரவேண்டாம்..''

முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கு.பிச்சாண்டி மற்றும் மாஜி எம்.எல்.ஏ-க்கள் திரண்டு வந்தனர். எங்கெங்கும் கரை வேட்டி கள் தென்பட்டதால், திருமண நிச்சய தார்த்தம்போல் இல்லாமல், தி.மு.க. மாநாடு போலத்தான் இருந்தது.

மண்டபத்தின் பின் பக்கம் பிரமாண்ட பந்தல் அமைக்கப் பட்டு காலையும், மதியமும் தடபுடலாக விருந்து பரிமாறப் பட்டது. ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ரசித்து விருந்தை சுவைக்க, நேரு மட்டும் தன் இலை யில் உணவை சாப்பிடாமல் யோசிக்க... 'எதுக்கு கவலைப்படுறீங்க. எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளலாம். தலைவர் இருக்கிறார். தைரியமாக சாப்பிடுங்கள்...’ என்று உடன் இருந்த தொண்டர்கள் வற்புறுத்த ஒருவழியாக சாப்பிட்டு முடித்தார் நேரு!

பந்தலில் உட்கார்ந்திருந்த நேருவைப் பார்த்தவர்கள் எல்லாம் நலம் விசாரித்தார்கள். ஒரு கட்டத்தில் பக்கத்தில் இருந்த எம்.ஆர்.கே-விடம், சிறையில் படும்  துன்பங்களை நேரு விவரித்துச்சொல்ல... அவரும், உடன் இருந்த நிர்வாகிகளும் நேருவுக்கு தைரியம் கொடுத்தனர்.

நேரு தன் மகன் அருணைக் கூப்பிட்டு, 'எல்லாத்தையும் பார்த்துக்கோ...’ என்று அடிக்கடி சொன்னார். நேரம் ஆக ஆக... அவர் குரலில் தடுமாற்றம்; முகமும் மாறிக்கொண்டே இருந்தது. 'அண்ணன் போஸ்டிங்கில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி... போலீஸ் பாதுகாப்போடுதான் எல்லாம் நடக்கிறது. இந்த விழாவைத் தடுக்கத்தான் ஜெயலலிதா ஒரு பொய் வழக்கை போட்டு அண்ணனை சிறையில் தள்ளினாங்க. அதான் அவர் மனசு உடைஞ்சு போயிட்டார், ஆனாலும் விழாவை சிறப்பா நடத்தி கலக்கிட்டார்...’ என புளகாங்கிதம் அடைந்தார்கள், அவரது தொண்டர்கள்.

மாலை 4 மணி ஆனதும், போலீஸ்காரர்கள், 'டைம் ஆகிடுச்சு சார். கிளம்பலாம்’ என்று நேருவிடம் சொன்னதும்... நேருவுக்கும், சொந்த பந்தங்களுக்கும் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது. அனைவரையும் சமாதானப் படுத்திவிட்டு, கையை அசைத்தபடியே போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்த நேரு, 'யாரும் என் பின்னாடி வரவேண்டாம்...’ என்று தொண்டர்களுக்கு அன்புக் கட்டளை போட்டார். ஆனாலும்,  சிறை வரை சென்று வழியனுப்பிவிட்டுத்தான் வந்தார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

- க.பூபாலன், படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism