Published:Updated:

''அம்மா.. அம்மான்னு சொல்லத்தான் ஆடு, மாடு தர்றாங்க!''

ஜெ.வை சீண்டிய செல்வகணபதி!

''அம்மா.. அம்மான்னு சொல்லத்தான் ஆடு, மாடு தர்றாங்க!''

ஜெ.வை சீண்டிய செல்வகணபதி!

Published:Updated:
##~##
''அம்மா.. அம்மான்னு சொல்லத்தான் ஆடு, மாடு தர்றாங்க!''

டந்த 2-ம் தேதி சேலத்தில், 'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் தி.மு.க. கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம் கோவை சிறையில் இருப்பதால் கலந்துகொள்ள முடியவில்லை! ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தை பலமாகப் பயன்படுத்தி, 'வீரபாண்டி ஆறுமுகம் இல்லாமலும் அசத்திக் காட்டுவோம்!’ என்கிறரீதியில், 'ஏ டு இஸட்’ ஒவ்வொரு பணியையும் பார்த்துப் பார்த்துச் செய்து, ஸ்டாலினுக்கு கேடயமும் வெற்றிவாளும் கொடுத்து வழி அனுப்பி இருக்கிறார், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சேலம் கோட்டை மைதானத்தில் மாலை 7 மணிக்கு தொடங்கியது கூட்டம். முதலில் மைக் பிடித்த மாநகரச் செயலாளர் கலையமுதன், ''தற்போது தமிழ்நாட்டில் காட்டுத் தர்பார் நடக்கிறது. தொடர்ந்து

''அம்மா.. அம்மான்னு சொல்லத்தான் ஆடு, மாடு தர்றாங்க!''

தி.மு.க. தலைவர்களைக் கைது செய்து வருகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்...'' என்று அர்ச்சனையை ஆரம்பித்து வைத்தார்.

அடுத்துப் பேசிய வீரபாண்டி ராஜா, '' தி.மு.க-வை விட்டு எம்.ஜி.ஆர். போனபோது கலங்காமல் கட்சியைக் காத்தவர் கலைஞர். ஜன நாயகத்துக்காகப் பாடுபடுகிற கட்சி இது. தொண்டர்களின் உயிர் மூச்சு இருக்கும் வரை, எவனாலும் தி.மு.க-வை அழிக்க முடியாது!'' என்றார்.

பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், ''உழைப்பால், தியாகத்தால் வளர்ந்த கட்சிதான் தி.மு.க. ஜெய லலிதா முதலமைச்சராக இருந்தபோது சுனாமி

''அம்மா.. அம்மான்னு சொல்லத்தான் ஆடு, மாடு தர்றாங்க!''

ஏற்பட்டது. அதற்காக நிதியைத் திரட்டி கோட்டைக்குப் போய் கொடுத்து ஜனநாயக மரபையும் பண்பையும் காத்தார், நமது தளபதி. அதேபோல் 2006-11 தி.மு.க. ஆட்சியில் சட்டப் பேரவை கூட்டங்களில் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தபோது ஓ.பி.எஸ்-ஸை சந்தித்து, சட்டப் பேரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்து, ஜனநாயகத்தின் மாண்பைக் காத்தார், நமது தளபதி. அந்தத் தளபதியின் வழிகாட்டல்படி நாங்கள் என்றும் வழி நடப்போம்...'' என்று பேசிய அவர், மறந்தும்கூட வீரபாண்டியாரின் பெயரை உச்சரிக்கவில்லை!

செல்வகணபதி எம்.பி. பேசும்போது, ''பச்ச கலரு ஜிங்குச்சா, சிவப்பு கலரு ஜிங்குச்சாங்கற மாதிரி சட்ட சபையில் ஜனநாயகம் ஜிங்குச்சா போட்டுக்கிட்டு இருக்கு. சட்டசபையில் ஒவ்வொருத்தரும் 'அம்மா, அம்மா’ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. 'அம்மா, அம்மா’ன்னு சொல்லத்தான் ஆடு, மாடு தராய்ங்க போல!'' என்று காமெடியாகப் பேசினார்.

இறுதியாக மைக் பிடித்தார் ஸ்டாலின். ''இந்தக் கூட்டத்துக்கு எப்படியும் வீரபாண்டியார் வந்து விடுவார் என நேற்று வரை நினைத்தோம். ஜாமீன் கிடைத்தும், தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு அவர் வரமுடியவில்லை. கோவை சிறையில் இருந்தாலும், இந்தக் கூட்டத்தைப் பற்றித்தான் சிந்தித்துக்கொண்டு இருப்பார். நான் சேலத்துக்கு எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறேன். அரசு விழாவுக்கு... கொடியேற்று விழாவுக்கு... திருமண நிகழ்ச்சிகளுக்கு என்று எல்லாம் வந்திருக்கிறேன். ஆனால், சேலத்தில் வீரபாண்டியார் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற் றது கிடையாது. இதைப் பேசும்போது, நீங்கள் ஆர்ப்பரிப்பதைப் பார்த்து உங்கள் உள்ளங்களில் எப்படி வீரபாண்டியார் இருக்கிறார் என்பதை உணர்கிறேன்!

''அம்மா.. அம்மான்னு சொல்லத்தான் ஆடு, மாடு தர்றாங்க!''

மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் ஜனநாயகம். ஆனால், ஜெயலலிதாவுக்காக ஜெய லலிதாவே ஏற்படுத்தியதுதான் இன்றைய தமிழக அரசின் ஜனநாயகம். சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை. சட்டப் பேரவை வெளிநடப்பு என்பது ஜனநாயக மரபு. நாங்கள் வெளிநடப்பு செய்ய முடியாதவாறு மூலைக்கு ஒருவரை உட்கார வைத்து

''அம்மா.. அம்மான்னு சொல்லத்தான் ஆடு, மாடு தர்றாங்க!''

விடுகிறார்கள். ஒரே வரிசையில் இடம் கேட்டால்கூட தரவில்லை. சட்டசபைக் கேள்வி நேரத்தில்கூட கலைஞரைத் தரக்குறைவாகப் பேசுகிறார்கள்.

நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். வீரபாண்டி யாரை கூப்பிட்டு, 'எத்தனை முறை சிறை சென்று இருக்கிறீர்கள்? உங்கள் மீது எத்தனை கேஸ் இருக்கிறது?’ என்று கேட்டுப் பாருங்கள், தெரியும்! இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் கொலை, கொள்ளை எல்லாம் செய்துவிட்டுச் சிறைக்குச் செல்லவில்லை. வீரபாண்டியார் மேல் கொடுத்தகேஸுக்கு முன்ஜாமீன் வாங்கிக் கொண்டு கோர்ட்டின் உத்தரவுப்படி விசாரணைக்கு ஒத்துழைத்தோம்! ஓடிப்போய் ஒளிந்து கொண் டாரா அவர்? விசாரணையை முடித்து வெளியே வரும்போது, 'இன்னொரு வழக்கில் உங்கள் மீது எஃப்.ஐ.ஆர்.’ என்று சொல்லி கைது செய்கி றார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் மிசாவில் பார்க்காததா? இந்த பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.  அ.தி.மு.க-வினர் மீது ஆதாரங்களோடு புகார் செய்தால்கூட, காவல் துறை விசாரிப்பதில்லை. சேலத்தில் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் மிரட்டியதாக புகார் இருக்கிறது. ஜோலார்பேட்டையில் எம்.எல்.ஏ. வீரமணி மிரட்டியதாக புகார் கொடுத்திருக்கிறார்கள். அமைச்சர் சம்பத், எம்.எல்.ஏ. ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் உள்பட பல அ.தி.மு.க-வினர் மீது புகார் இருந்தும், இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை..!'' என்று பொங்கினார்.

'வீரபாண்டியார் இல்லாமலே அசத்திட்டாங்கப்பா...’ என்றபடி கலைந்தனர், உடன்பிறப்புகள்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism