Published:Updated:

செட்டியார் சர்ச்சையில் புலிவேசம்!

செட்டியார் சர்ச்சையில் புலிவேசம்!

செட்டியார் சர்ச்சையில் புலிவேசம்!

செட்டியார் சர்ச்சையில் புலிவேசம்!

Published:Updated:
##~##
செட்டியார் சர்ச்சையில் புலிவேசம்!

சினிமாவை   வைத்து அவ்வப்போது ஏதாவது பரபரப்பு கிளம்புவது உண்டு. சமீபத்திய விவகாரம், 'புலிவேசம்’ படம் சம்பந்தப்பட்டது. 'எங்களை இழிவுபடுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால் அந்தக் காட்சிகளை உடனே நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி எங்களை இழிவுபடுத்தி யதற்காக பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும்’ என்று கிளம்பி இருக்கிறார்கள், சேலம் பகுதியில் வசிக்கும் செட்டியார் இன மக்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து, ஆரிய வைஸ்ய முன்னேற்றப் பேரவை மாநிலத் தலைவரும், அனைத்து செட்டியார் நல முன்னேற்றப் பேரவையின் சேலம் மாவட்டத் தலைவருமான அரவிந்தன் நம்மிடம் பேசினார். ''யார் வம்புக்கும் போகாமல் அமைதியான முறையில் வியாபாரம் செய்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறோம். தான் உண்டு தங்கள்

செட்டியார் சர்ச்சையில் புலிவேசம்!

தொழில் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களைச் சிலர் சீண்டிப் பார்க்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி இருக்கும் 'புலிவேசம்’ படத்தில் எங்கள் இன மக்களை மிகவும் கேவலமாகச் சித்திரித்து இருக்கின்றனர். அந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் மன்சூர் அலிகான், 'பெண்களை கிட்னாப் செய்து செட்டியாருக்கு அனுப்பி வைடா’ என்று கூறுகிறார். மேலும், பெண்களை கிட்னாப் செய்யும் தொழிலுக்கு மீடியேட்டராக செட்டியார் என்று ஒருவரைக் காட்டுகிறார் கள். நாங்கள் பெண்களை தெய்வ மாக மதிக்கக் கூடியவர்கள். குறிப்பிட்டு எங்கள் இனத்தைச் சேர்ந்தவர் பெண்களைக் கடத்துவது போலக் காட்டுவது, எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக இருக்கிறது. இப்படி காட்சிகளை அமைத்ததற்காக, இயக்குநர் பி.வாசு மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்!'' என்றார் காட்டமாக.

செட்டியார் சர்ச்சையில் புலிவேசம்!

இந்த விவகாரம் குறித்து இயக்குநர் பி.வாசுவிடம் பேசினோம். ''திட்டமிட்டு அப்படிப்பட்ட காட்சிகளை நாங்கள் அமைக்கவும் இல்லை. வசனம் பேசவும் இல்லை. அந்தக் காட்சிகளில் ரைமிங் வரவேண்டும் என்பதற்காக செட்டியார் என்று மன்சூர் அலிகான் பேசினார். உண்மையில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. இந்த வசனத்துக்காக, அவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்றால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்தக் காட்சிகளை நீக்குவது குறித்து, தயாரிப்பாளரிடம் பேசி விரைவில் முடிவு எடுக்கிறேன்...'' என்றார்.

இதுபற்றி, நடிகர் மன்சூர் அலிகானிடம் கேட்டோம். ''நான் அந்தப் படத்தில் நடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டது. என்ன வசனம் பேசினேன் என்று எனக்கு ஞாபகம் இல்லை...'' என்று சொன்னார்.

எப்படியோ, விவகாரம் சிக்கல் ஆகாமல் முடிந்தால் சரி.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism