Published:Updated:

சூடு பிடிக்கும் வல்லடிக்காரர் கோயில் வழக்கு!

என்ன சொல்லப் போகிறார் தாசில்தார்?

சூடு பிடிக்கும் வல்லடிக்காரர் கோயில் வழக்கு!

என்ன சொல்லப் போகிறார் தாசில்தார்?

Published:Updated:
##~##
சூடு பிடிக்கும் வல்லடிக்காரர் கோயில் வழக்கு!

'புலி அடித்துத் தப்பியவர்களும் உண்டு; புல் தடுக்கிச் சிக்கியவர்களும் உண்டு’ என்பார்களே... அதுபோல, படா படா வழக்குகளில் எல்லாம் எஸ்கேப் ஆன அழகிரியை, சோட்டா வழக்கில் வசமாகச் சிக்க வைத்துள்ளார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலின்போது, மேலூர் அருகில் உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்கு அழகிரி தன் பரிவாரங்களுடன் வாக்கு சேகரிக்கச் சென்றார். அதைப் படம் பிடிக்கச் சென்ற மேலூர் தாசில்தார் காளிமுத்துவை அழகிரி ஆட்கள் தாக்க... தாசில்தார் புகாரின் பேரில் அழகிரி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இதைப் பொய் வழக்கு ஆக்குவதற்காக, 'தன்னை யாரும் தாக்கவில்லை’ என்று காளிமுத்துவை பல்டி அடிக்க வைத்தார்கள். ஆனால், மேலூர் இன்ஸ்பெக்டர் மாடசாமியோ, ''தாசில்தார் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன...'' என்று உறுதியாக நின்றதால், அவருக்கே துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடும் அளவுக்கு நிலைமை சீரியஸானது.

சூடு பிடிக்கும் வல்லடிக்காரர் கோயில் வழக்கு!

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி அழகிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ''சம்பவம்

சூடு பிடிக்கும் வல்லடிக்காரர் கோயில் வழக்கு!

நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால், போலீஸார் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக் கலாம்...'' என்றது உயர் நீதிமன்றம். இதை அடுத்து, சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ மூலம், மேலும் 17 நபர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களையும் குற்றவாளிகளாகச் சேர்த்தது போலீஸ். முதல் குற்றவாளியான அழகிரி மத்திய அமைச்சராக இருப்பதால், அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு மக்களவை சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டதால், கடந்த ஜூலை 9-ம் தேதி அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார்கள். இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 24-ல் அதிரடியாக அழகிரி உள்ளிட்டவர்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

''அழகிரி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு மக்களவை சபாநாயகரின் அனுமதி கிடைத்துவிட்டதா?'' என்று போலீஸ் வட்டாரத்தில் கேட்டோம். ''அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி 45 நாட்களுக்கு மேலாகியும் டெல்லியில் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆகவே, சட்ட வல்லுநர்கள் மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தபோது ஒரு தெளிவு கிடைத்தது. அதாவது மத்திய அமைச்சராக இருப்பவர், 'அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது,

சூடு பிடிக்கும் வல்லடிக்காரர் கோயில் வழக்கு!

பிரச்னை ஏற்பட்டிருந்தால் மட்டுமே சபாநாயகரின் அனுமதி வாங்க வேண்டும்!’ என்று சி.ஆர்.பி.சி. செக்ஷன் 197-ல் தெளிவாகச் சொல்லப்பட்டு உள்ளது. இது, தேர்தல் விவகாரம் என்பதால் அனுமதி தேவை இல்லை. அதனால்தான், அழகிரி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது!'' என்கிறது போலீஸ்.

'தேர்தல் ஆணைய உத்தரவை மீறி வல்லடிக்காரர் கோயிலுக்கு 1.4.11-ல் முதலாவது எதிரி மு.க.அழகிரி தலைமையில் வாக்கு சேகரிக்கச் சென்ற 21 பேர், அங்கு இருந்த பொதுமக்களிடம் உதயசூரியனுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டதை, முதலாவது சாட்சியான தாசில்தார் காளிமுத்து வீடியோவில் படம் எடுக்க உத்தரவிட்டார். அப்போது, முதலாவது எதிரியானவர் முதலாவது சாட்சியைப் பார்த்து, 'உன்னை யாருடா படம் எடுக்கச் சொன்னது?’ என்று ஆவேசமாகச் சத்தம் போட்டதுடன், 'அடிங்கடா இவனை!’ என்று மற்ற எதிரிகளைத் தூண்டிவிட்டார். உடனே மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட மற்ற மூன்று எதிரிகள் காளிமுத்துவைத் தாக்கி தலையிலும், இடது கை மோதிர விரலிலும் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்போது 5 முதல் 21-ம் எதிரிகள் வரை தாசில்தார் உள்ளிட்டவர்களைத் தாக்க முற்பட்டும், வீடியோ கேம ராவைப் பறிக்க முற்பட்டும் இருக்கிறார்கள். எனவே, ஒன்று முதல் 21 வரையிலான எதிரிகள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் புரிந்திருக்கிறார்கள்!’ - என்று போகிறது அழகிரி மீது தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் குற்றப் பத்திரிகை வாசகங்கள்.

சுமார் 150 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில் 26 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். தாசில்தார் காளிமுத்து பல்டி அடித்துவிட்டாலும், அப்போது அவருடன் சென்றிருந்த துணை தாசில்தார் முத்துராமலிங்கம், லோக்கல் ஃபண்ட் ஆடிட்டர் சலீம், வருவாய் ஆய்வாளர் பூபாண்டி, வீடியோகிராபர் கண்ணன் உள்ளிட்டவர்கள் சம்பவம் நடந்ததை ஆணித்தரமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்களாம். 'சட்டவிரோதமாகக் கூடி கலகத்தை உருவாக்குதல், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்து அடித்தல், தடை உத்தரவை மீறுதல், முன்னால் இருந்துகொண்டு அடிக்கச் சொல்லி தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தல்’ உள்ளிட்ட வலுவான செக்ஷன்களை அழகிரி மீது பாய்ச்சி இருக்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர் மாடசாமியிடம் பேசினோம். ''இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே எனக்கு ஏகப்பட்ட இடையூறுகள், நெருக்கடிகள், மிரட்டல்கள் இருந்துச்சு. இப்பவும் என்னைப் பின்வாங்க வைப்பதற்காக மறைமுகமாக இடைஞ்சல்களைக் கொடுக்கிறார்கள். நான் எனது கடமையை செய்து முடித்துவிட்டேன். இனிமேல் தீர்ப்பு சொல்ல வேண்டியது நீதிமன்றம்தான்!'' என்றார்.'' எத்தனையோ பொய் வழக்குகளை எங்கள் மீது போட ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது. அதில் இதுவும் ஒன்று. எல்லா வழக்குகளையும்  நாங்கள் சந்திப்போம்!'' என்று அழகிரி தரப்பினர் சொல்கிறார்கள்.

அழகிரி தவிர மற்ற 17 பேருக்கும் அரெஸ்ட் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதும், அனைவரும் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வழக்கைக் காரணம் காட்டி அழகிரியின் அமைச்சர் பதவியை பறிக்க நினைக்கிறதாம், ஆளும் கட்சி!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism