Published:Updated:

அதிர்ச்சியில் நயினார்... அதிருப்தியில் பாப்புலர்?

அதிர்ச்சியில் நயினார்... அதிருப்தியில் பாப்புலர்?

அதிர்ச்சியில் நயினார்... அதிருப்தியில் பாப்புலர்?

அதிர்ச்சியில் நயினார்... அதிருப்தியில் பாப்புலர்?

Published:Updated:
##~##
அதிர்ச்சியில் நயினார்... அதிருப்தியில் பாப்புலர்?

நெல்லையில் மாநகரம், மாவட்டம் என இரண்டு அமைப்புகளாக இருந்த கட்சி நிர்வாகத்தை, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒரே அமைப்பாக மாற்றினார், ஜெயலலிதா. ஆனால், 'அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்காமல் பரவலாக்கினால்தான், உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினர் ஆர்வத்துடன் செயல் பட்டு வெற்றியை தேடிக் கொடுப்பார்கள்’ என மேலிடத்துக்கு கட்சியினர் தந்தி மேல் தந்தி அனுப்பினார்களாம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் அடிப்படையில் தற்போது நெல்லை மாநகரம், நெல்லை புறநகர் வடக்கு மாவட்டம், நெல்லை புறநகர் தெற்கு மாவட்டம் என கட்சி நிர்வாகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில் அ.தி.மு.க-வில் புதிதாகப் பதவிகளை உருவாக்கி, பொறுப்புகளை அள்ளிக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் செந்தூர்பாண்டியனும், தெற்கு மாவட்டச் செயலாளராக பி.ஜி.ராஜேந்திரனும், நெல்லை மாநகரச் செயலாளராக நயினார் நாகேந்திரனும் நியமிக்கப்பட்டு

அதிர்ச்சியில் நயினார்... அதிருப்தியில் பாப்புலர்?

உள்ளனர். 'தெற்கு மாவட் டத்துக்கு ராஜேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளதால், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு ஆகியோர் செல்வாக்காக இருந்த பகுதிகள் இனி அ.தி.மு.க-வின் கோட்டையாக மாறும்’ என ஆரூடம் சொல்கிறார்கள் கட்சியினர்.

ஆனால், நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள், ''மாநில ஜெ. பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்த நாகேந்திரனை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து மாநகரச் செயலாளர் பதவி கொடுத்து இருக்கிறார்கள். அமைச்சரவையில் தனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்த நிலையில், இசக்கி சுப்பையா அமைச்சர் ஆக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால்,

அதிர்ச்சியில் நயினார்... அதிருப்தியில் பாப்புலர்?

யாருமே எதிர்பார்க்காத வகையில் செந்தூர்பாண்டியன் அமைச்சர் ஆக்கப்பட்டார். இப்படி ஏமாற்றத்தில் இருந்த நாகேந்திரனுக்கு மாநில பொறுப்பில் இருந்து விடுவித்து, மாநகர பொறுப்பு கொடுத்ததில் வருத்தமே...'' என்றார்கள் அழுத்தமாக.

''முன்னாள் மாநகரச் செயலாளரானபாப்புலர் முத்தையா, அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த ஐந்து வருடங்களிலும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தொடர்ச்சியாகப் பொதுக் கூட்டங்களை நடத்தியவர். அதனால் மீண்டும் தனக்கு பொறுப்பு கொடுக்கப்படும் என நம்பிக் கொண்டிருந்த நிலையில், அது கிடைக்காததால் அதிருப்தி அடைந்து உள்ளார்...' என்று சொன்னார்கள் முத்தையா ஆதரவாளர்கள்.

நயினார் நாகேந்திரனிடம் கேட்டதற்கு, ''இந்த பொறுப்பும் எனக்கு மகிழ்ச்சிதான். நெல்லை மேயர் தேர்தலில் வெற்றிக் கனியை பறித்து அம்மாவிடம் ஒப்படைப்பது மட்டுமே எனது நோக்கம்!'' என்றார் உற்சாகமாகவே.

முன்னாள் மாநகர செயலாளரான பாப்புலர் முத்தையா, ''பதவியைக் கொடுத்த அம்மா இப்போது எடுத்திருக்கிறார். அவரது செயல்களுக்கு பல காரணங்கள் இருக்கும். கடந்த ஆட்சியில் மாநகரம் முழுவதும் வாரந்தோறும் பொதுக்கூட்டங்களை நடத்தி கட்சி அமைப்புகளை பலமாக வைத்திருந்தேன். அந்த திருப்தி எனக்கு போதும்...'' என்று சொன் னார்.

அதிருப்தியாளர்களை சமாளிக்க என்ன செய்யப் போகிறார், ஜெயலலிதா?

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism