Published:Updated:

சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம்..

வேதனையில் கோவை மீனவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம்..

'நாங்க கோவையில இருந்து பேசுறோம். இங்கே 700-க்கும் அதிகமான மீனவர் குடும்பங்கள் இருக்கு. சில பிரச்னை களால் எங்களோட மீன்பிடித் தொழில் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டு வருது... எங்கள் வாழ்வுக்கு வழி சொல்வீர்களா?’ - இப்படி நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-42890005) ஒரு புகார் பதிவாகி இருந்தது. 

கோவையில் மீன்பிடித் தொழிலா? குழப்பத்தோடு புகார் செய்தவரை சந்தித்தோம்.

''என் பேர் ராமு. கோவையைச் சுற்றி எட்டு குளங்கள் இருக்குது. எங்க தாத்தா காலத்தில் இருந்தே நாங்க இந்தக் குளங்களில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வர்றோம். ஒரு நாளைக்கு

சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம்..

400 வரைக்கும் வருமானம் வரும். ஆனா, இப்போ குளங்களில் ஆகாயத்தாமரை செடி கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்துடுச்சு. அதோடு, கழிவு நீரும் குளங்களில் அதிக அளவில் கலந்து, தண்ணி கெட்டுப் போச்சு. இதனால் மீன் பிடிக்கிற தொழில் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கு. குளங்களை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கியதாச் சொன்னாங்க. ஆனா, அதை யாரும் சுத்தப்படுத்தவே இல்லை. நாங்களும் மாநக ராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்துட்டோம். யாரும் கண்டுக்கவே இல்லை. சில அதிகாரிகள் வந்து குளத்தை போட்டோ எடுப்பாங்க. நாங்களும் சரியாகிடும்னு காத்திருப்போம். ஆனா, எதுவுமே நடக்காது. இப்போ, முழுசாவே தொழில் செய்ய முடியாம சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம். வளர்ந்து நிற்கும் செடிக்கு நடுவில் வலை விரிச்சா அதை திரும்ப எடுக்குற துக்குள்ள நாங்க படுற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். அரசாங்கம் மனசு வெச்சு இந்தக் குளங்களை தூர் வார உத்தரவிடணும்!'' என்று வேதனையோடு சொன்னார்.

சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம்..

மீனவர்களின் பிரச் னையை கோவை மாநகராட்சி ஆணையாளர் பொன்னு சாமியின் கவனத்துக்குக் கொண்டுபோனோம். ''குளங் களை தூர் வார மத்திய அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது. இப் போது உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதால், தேர்தல் முடிந்ததும் நிச்சயம் இந்தப் பிரச்னை தீர்க்கப்படும். மீனவர்கள் கவலைப்பட வேண் டாம்!'' என்று உறுதி அளித்தார்.அதுவரை மீனவர்கள் வயிறும் காத்திருக்க வேண்டுமா?

      - ம.முரளிதரன்

                படங்கள்: செ.பாலநாக அபிஷேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு