Published:Updated:

மற்றும் சிலரில் பைந்தமிழ் பாரி!

மற்றும் சிலரில் பைந்தமிழ் பாரி!

பிரீமியம் ஸ்டோரி
##~##
மற்றும் சிலரில் பைந்தமிழ் பாரி!

மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி யின் நீண்ட நாள் கவலை, 'தனது மகன் பைந்தமிழ் பாரிக்கு அரசியலில் ஒரு லிஃப்ட் கிடைக்கவில்லையே’ என்பதுதான். இப்போது அந்த குறையை தீர்த்துவைத்துள்ளது, ஜெயலலிதா அரசு. தி.மு.க. பிரபலங்கள் வரிசையில், நில மோசடி வழக்கில் பாரியும் இப்போது 'உள்ளே’! 

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''திருப்பூர் மாவட்டம் முருங்கப்பாளையம் தெற்கு திரு.வி.க. நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்குச் சொந்தமாக பொங்கலூர் வேலம் பட்டியில் இருக்கும் 15.16 ஏக்கர் நிலத்தை, அப்போதையை பொங்கலூர் தொகுதி எம்.எல்.ஏ. மணியின் மகனான வெங்கடேஸ்வரன் பெயருக்கு 2008-ம் ஆண்டு

மற்றும் சிலரில் பைந்தமிழ் பாரி!

1.74 கோடிக்கு கிரயம் செய்வதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் பொங்கலூர் பழனிசாமி முன்னிலையில், நடந்தபோது,

மற்றும் சிலரில் பைந்தமிழ் பாரி!

  5 லட்சம் அட்வான்ஸ் கொடுத் திருக்கிறார்கள். மீதிக்கு கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது.

மற்றும் சிலரில் பைந்தமிழ் பாரி!

இது சம்பந்தமாக மணியிடமும், பொங்கலூர் பழனிசாமியிடமும் வெங்கடேஷ் முறையிட்டுள்ளார். முதலில் பணத்தைத் தருவதாகச் சொன்னவர்கள் ஒரு கட்டத்தில், 'பணம் கொடுக்க முடியாது’ என்று சொல்லி விரட்டியதோடு மிரட்டவும் செய்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக அவிநாசிபாளையம் போலீஸில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் ஆட்சி மாறியதும் இப்போது மறுபடியும் வெங்கடேஷ் புகார் கொடுத்திருக்கார். அந்தப் புகாரில், 'மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாஜி எம்.எல்.ஏ. மணி, அவரது மகன் வெங்கடேஸ்வரன் மற்றும் சிலரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் சொல்லி இருக்கிறார். இதில் பொங்கலூரார் மகன் பைந்தமிழ் பாரியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவரை கைது செய்துள்ளோம்!'' என்றார்கள்.

இந்த வழக்கில் ஏற்கெனவே மணி அரெஸ்ட் ஆகி விட்டார். பொங்கலூர் பழனிசாமி முன்ஜாமீன் வாங்கிவிட்டார் என்ற நிலையில்தான், பாரியைக் கைது செய்து சேலம் சிறைக்கு அனுப்பி இருக்கிறது போலீஸ்.

பாரியிடம் பேசுவதற்கு அவகாசம் கிடைத்தது.  ''எந்த அடிப்படையும் இல்லாம என்னை கைது பண்றாங்க. புகாரில் அந்த வெங்கடேஷ் என் பெயரைக் கொடுக்கவே இல்லை. 'மற்றும் சிலர்’னு புகாரில் இருந்த வார்த்தையைப் பயன்படுத்தி என்னை இழுத்து விட்ருக்காங்க. ஜெயிலுக்கு போறதுல வருத்தமில்லை. ஆனா முழுக்க முழுக்க பொய்யான ஒரு வழக்கில் கைதாவதுதான் எரிச்சலாக இருக்கிறது. இப்படி எங்க கட்சிக்காரங்களை படுத்தி எடுக்குற சி.எம். லேடிக்கு பெங்களூருல வைக்கப் போறாங்க செக்..'' என்று ஆவேச மானார்.

பாரி மீதான இந்த கேஸ் டம்மி பீஸ் என்பதாலோ என்னவோ, வேறு ஏதாவது வழக்கிலும் அவரை அமுக்க நினைக்கிறது போலீஸ்!

- எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு