Published:Updated:

கட்டப் பஞ்சாயத்து செய்தாரா சுரேஷ்ராஜன்?

குமரி கொந்தளிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
கட்டப் பஞ்சாயத்து செய்தாரா சுரேஷ்ராஜன்?

நில அபகரிப்புப் புகார்களில், முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் கைது செய்யப்படுவது 'சிந்துபாத்’ தொடர்கதை போல நீண்டுகொண்டே செல்கிறது. இதில் லேட்டஸ்ட்டாக சிக்கி இருப்பவர், சுரேஷ்ராஜன். தி.மு.க. ஆட்சியில் சுற்றுலா மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். குமரி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி அஜிதாவுடன் சேர்ந்து, நில மோசடி செய்ததாக, சுரேஷ்ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. குமரி மாவட்ட தி.மு.க-வினர் மீதான இந்த முதல் நில மோசடி புகாரில், எந்த நேரமும் சுரேஷ்ராஜன் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு கிளம்பி இருப்பதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். 

குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள அனந்தன் நகரைச் சேர்ந் தவர் தயா பாக்கிய சிங். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர், குமரி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி அஜிதாவிடம் இருந்து,

கட்டப் பஞ்சாயத்து செய்தாரா சுரேஷ்ராஜன்?

வில்லுக்குறி பகுதியில் 10.43 ஏக்கர் நிலம் வாங்கினார். இவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதே நிலத்தை இன்னொரு நபருக்கு அஜிதா விற்று விட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில்தான் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தி.மு.க-வின் மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா

உட்பட பலர், நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து தயா பாக்கிய சிங்கிடம் கட்டப்பஞ்சாயத்து செய்தார்களாம். சுரேஷ்ராஜன், பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்ததால், அவரது ஆதரவுடனே நிலம் இன்னொரு நபருக்கு விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த அடிப்

கட்டப் பஞ்சாயத்து செய்தாரா சுரேஷ்ராஜன்?

படையில்தான் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ்.

இது குறித்துப் பேசிய தயா பாக்கிய சிங், ''அஜிதாவோட உதவியாளர்தான் போனில் என்னிடம் முதலில் பேசினார். நல்ல பகுதியில் நிலம் இருந்ததால் அந்த நிலத்துக்கு

கட்டப் பஞ்சாயத்து செய்தாரா சுரேஷ்ராஜன்?

60 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால், அதில் 6.5 ஏக்கர் நிலம், தனியார் வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருப்பது பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது. அந்த நிலத்துக்கு தடையில்லாச் சான்றிதழ் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டேன். ஆனால், அதைத் தராமலேயே நிலத்தைப் பதிவு செய்யச் சொன்னார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதற்காக அமைச்சர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் என்னை மிரட்டியதைக்கூடப் பொறுத்துக் கொண்டேன். ஆனால், எனக்கு விற்ற அதே நிலத்தை, அஜிதாவின் உதவியாளர் சரவண பிரசாத் என்பவர் பெயரிலும் பதிவு செய்து உள்ளனர். இந்த மோசடி குறித்து, தக்கலை போலீஸில் ஏற்கெனவே நான் புகார் செய்தேன். ஆனால், கடந்த ஆட்சியில் போலீ ஸார் அலட்சியம் செய்து விட்டனர். அதனால்தான், நீதிமன் றத்துக்குப் போனேன். இந்த மோசடி பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவு இட்டது. அதற்குப் பிறகுதான் போலீஸ் வழக்குப் பதிவு செய்து இருக்கிறது...'' என்றார்.

கட்டப் பஞ்சாயத்து செய்தாரா சுரேஷ்ராஜன்?

இந்தக் குற்றச்சாட்டு குறித்துப் பேச, சுரேஷ்ராஜனைத் தொடர்புகொள்ள பல வழிகளில் முயன்றோம். இயலவில்லை. அதனால், சுரேஷ்ராஜனின் வழக்கறிஞர் அசோகனிடம் பேசினோம். ''2010-ல் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்துக்கு 2011-ல் வழக்குப் பதிவு செய்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தயா பாக்கிய சிங் கொடுத்துள்ள புகாரில் உண்மை இருந்தால், அப்போதே அவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். சட்டத்தை மீறி எதுவும் நடந்து விடாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!'' என்றார். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் பெற்றுள்ளார் சுரேஷ்ராஜன்.

இந்த மோசடியில், முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி அஜிதாவிடம் பேசினோம். '' அவருக்கு நான் வித்தது வெறும் 3.5 ஏக்கர் நிலம் மட்டும்தான். அதுபோக மீதி இருந்த 6.5 ஏக்கர் நிலத்தைத் தான் சரவண பிரசாத்துக்கு எழுதிக் குடுத்தேன். சட்ட விரோதமாக எதுவும் நான் செய்யலை. அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை!'' என்று சொன்னார்.

காவல்துறையின் விறுவிறு நடவடிக் கைகளைப் பார்த்தால், உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நேரத்தில், தி.மு.க. முக்கியப் பிரமுகர்கள் யாருமே வெளியே இருக்கமாட்டார்களோ!

- பி.கே.ராஜ்குமார்

படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு